ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நிலுவையில் உள்ள நிலையில் இந்தியாவிலேயே பள்ளி நிற்றலை தடுப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளதாக U.D.I.S.E தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் உள்ளது. எட்டாம் வகுப்பிற்குப்பின்பு மாணவர்கள் பலர் தோல்வி மற்றும் வறுமை என பல்வேறு காரணங்களால் பள்ளியிலிருந்து இடையில் நின்றுவிடுகின்றனர். இந்நிலையில் U.D.I.S.E எனப்படும் கல்விக்கான இருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையானது தற்போது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலேயே பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, அதிகபட்சமாக தமிழகத்தில் 86.2% பேர் பள்ளிப்படிப்பை முழுமை செய்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக இமாசல பிரதேசம் 85.8 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 85.6 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளன.
முன்னதாக தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மூன்று பிரிவுகளாக யு.டி.எஸ்.சி.இ ஆய்வு செய்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 100 மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், தொடக்கப்பள்ளிகளில் 94 பேரும், நடுநிலைப்பள்ளிகளில் 75 பேரும், மேல்நிலைப்பள்ளிகளில் 70 பேரும் படிப்பை முழுமை செய்வதாக ஆய்வு முடிவுகள் கூறப்படுகிறது. வகுப்பு வாரியாக பார்க்கும் போது, எஸ்.சி – 65%, எஸ்.டி. – 61%, ஓ.பி.சி – 73%, பொது – 74% என்ற அளவில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்றனர்.