இங்கிலாந்தில் வரும் மே 30ஆம் தேதி முதல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அத்தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டிருக்கிறது.

‘ஸ்டான்ட் பை’ (Stand By) என்ற தலைப்பு கொண்ட இந்தப் பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகர் லாரின் பாடியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் கோடைக் காலத்தில் நடக்கும் தொடர் என்பதால் அதனைச் சித்தரிக்கும் காட்சிகள் பாடலில் உள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட்டாப், பாடகர் லாரின் இந்தப் பாடல் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர். இங்கிலாந்தின் உள்ள பன்முக கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பதாகவும் இந்தப் பாடல் உள்ளது.