கிருமி தாங்கி வந்தவர்கள் தொட்டிருக்கக் கூடும் என்ற அச்சத்தில் மின்தூக்கிப் பொத்தான்களைத் தொடும் கைகள், கண்ணுக்குத் தெரியாத எதிரி எங்கிருந்தும் வரக் கூடும் என்று முகமூடி அணிந்தமுகங்கள், இருப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள் இருந்தாலும் எடுத்துக் கொள்ள ஓடும் கால்கள், 80 வினாடிகளுக்கு ஒரு முறை வருகையும்புறப்பாடும் நிகழும் சாங்கியைப் பறத்தல் இல்லாமல் ரிலாக்ஸாக பார்க்கலாம் ‘போவோமா?’ என்றழைக்கும்நண்பனின் குரல். மிகவும் வித்தியாசமாக இருக்கிறது சிங்கப்பூர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரை ‘சார்ஸ்’ தாக்கியசமயத்தில் என் பிள்ளைகள்ப்ரைமரி ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தார்கள். 238பேருக்கு கிருமிதொற்றியது; 33 இறப்புகள் நிகழ்ந்தன, அதிலிருந்து சிங்கப்பூர் மீண்டு வர ஐந்து மாத காலமானது, ஆனால் சமூக ஊடகங்களின் பரவல் அதிகம் வராத அந்தக் கால கட்டத்தில்  இவ்வளவு பதட்டமில்லை, இப்போது பச்சையிலிருந்து மஞ்சளாகி ஆரஞ்சுக்கு தாவியபோது நிலமை சிவப்புக்கு வரப்போகிறது என்ற வாட்ஸ்அப்பகிர்வால் பதட்டம் தொற்றிக் கொண்டதன் விளைவாக முகமூடிகளும், கிருமி நாசினிகளும் விற்றுத் தீர்ந்தன, சிறப்பான மருத்துவ வசதிகள் 10 நிமிடங்களில் வீட்டுக்கே வந்து சேரும்  ஆம்புலன்ஸ் வசதி இவையெல்லாம்அறிந்திருந்தும் சமூகம்  வதந்திகளுக்கும் அவ்வப்போது கொஞ்சம் காது கொடுக்கிறது. கல்வி, வீடமைப்புக்குஅடுத்து மூன்றாவதாக மருத்துவ பராமரிப்பில் உலகின் மிக கட்டுக்கோப்பான வசதிகளைக் கொண்டது சிங்கப்பூர். மொத்தம் சுமார் 3050 மருந்தகங்கள் உள்ளன, 5.7 மில்லியன்மக்கள் தொகை உள்ள நாட்டில், நாளுக்கு 2000 தொற்று மாதிரிகளைச் சோதிக்கும் திறன்பெற்ற மருத்துவ வசதி, பயிற்சி பெற்ற பணியாளர்கள், தரமான உள்கட்டமைப்பு, திறமையானப் பொதுத்துறை, தகுதி மிக்க அனுபவமுள்ள அரசியல் தலைவர்கள், தகவல்களை முழுமையான அறிந்தவர்களும், எப்போது நம்பவேண்டும் எப்போது ஆராயவேண்டும் என்பதை உணர்ந்தவர்களுமான பொதுமக்கள். சிங்கப்பூர்  பக்குவம் நிரம்பிய சமூகமாக தானேஉருவெடுத்திருக்கும் சமயத்தில் கோவிட் -19 தாக்குதல்நிகழ்ந்திருக்கிறது.

சிங்கப்பூரும், தைவானும், ஹாங்க்காங்கும் 2003ஆம் ஆண்டில் அதிகளவில் கடுமையான சுவாசநோய் (சார்ஸ்) தாக்குதலுக்கு உள்ளான போதுபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது சிங்கப்பூரில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. அந்தச்  சூழ்நிலையிலும் கூட பாதுகாப்பான நாடாகக் கருதப்பட்டசிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் அதிகம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இன்று மிகச்சவாலான வெளிநாட்டு ஊழியர் அணியைத் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்அவசியமான நிலையில் கூட சிங்கப்பூர் பல நாடுகளுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது, கோவிட்-19 நுண்மி தொற்றைஅறிய 7 மணி நேரம் எடுக்கும் சோதனைக் கருவிக்கு பதில் 3மணி நேரத்தில்  தொற்றை அறியும் கருவிகளை கஜக்கஸ்தான்  உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.

வளமான பொருளாதாரமும், மருத்துவ வசதிகளும் கொண்ட நாடு  சிங்கப்பூரின்  மூல வளமான அயலகத் தொழிலாளர்களிடையே கிருமி பரவலைகையாளும் அவசர நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உலக நாடுகள் கவனமாகப் பார்க்கின்றன. ஒவ்வொரு நாடும், அந்த நாட்டு மக்களின் எதிர்வினைகளுக்கு ஏற்ப, எத்தகையஉத்திகளை கோவிட்-19 சீற்றத்தைத் தணிக்கமேற்கொள்கிறது என்பதில் அதன் பலமும் பலவீனமும்இப்போது வெளிப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்று ஆரம்பித்தவுடன் சிங்கப்பூர் உடனே தன் எல்லைகளைமுழுதும் மூடிவிடும் என்று தான் அனைவரும் நினைத்தார்கள் ஆனால்   நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துவதிலும், அவர்கள் யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதை  கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களைத்தனிமைப்படுத்தி, தொற்றுநோய்க் கிருமிகளிடமிருந்து ஒரு பாதுகாப்பு வேலி அமைத்து, மேற்கொண்டு நோய்பரவுவதைத் தடுக்கும் பணிகளில் தன் முன்னைய சார்ஸ்அனுபவத்தில் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்கள் . ரஷ்யா,தென் கொரியா தன் எல்லைகளை சீன நாட்டவருக்குமூடிய பிறகு சிங்கப்பூரும் நடவடிக்கை எடுத்தது.

நெருக்கடியான காலகட்டங்கள் தான் தலைவர்களுக்கும்மக்களுக்குமிடையே உள்ள பிணைப்பைச் சோதிக்கின்றன. அரசாங்கங்களின் செயல்பாடுகள் , இந்த வைரஸால் ஓவ்வொரு நாட்டிலும் ஏற்பட்டிருக்கும்பொருளாதாரா பாதிப்பை எப்படி அந்தந்த அரசாங்கங்கள்எதிர்கொள்ளப் போகின்றன என்பதைத் தீர்மானிக்கும்சக்தியாக உருவெடுத்துக் கடுமையானவையாகவும், நீண்டகாலம் நீடிக்கும் தன்மையுடையனவாகவும் இருக்கும் என உலகெங்கும் அச்சம் தோன்றியுள்ள நிலையில்,பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூடுதல், கூட்டம் கூடுவதைத் தடைசெய்தல், கடைகளையும்உணவகங்களையும் மூடுதல் போன்ற பொதுக்கட்டுப்பாடுகளை மற்ற நாடுகள் விரைந்து அமல்படுத்தியபோது சிங்கப்பூர் நிதானமாகச் சூழலுக்குத்  தகுந்த மாதிரி கிருமி பரவலின் வலைப்பின்னலைஅறுத்தெறியப் பகுதி அடைப்பை அறிவித்துள்ளது.  திடீர் கட்டுப்பாடுகள், பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச்செய்துவிடும் என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் உள்ளபயத்தையும் ஒரு சேர எதிர் கொண்ட நிலையில், ஒவ்வொரு நாள் மாலையும் கிருமிப் பரவல் பற்றிய செய்திகளை ஊடகங்களுக்குத் தெரிவிக்க அதன் தலைமைப் பொறுப்பில் இயங்கும் தேசிய முன்னேற்றத் துறை அமைச்சர் “லாரன்ஸ்வோங்” ஒலி வாங்கி முன்னால் வந்து  வெளிப்படையான தகவல்களை பகிர்ந்து கொள்ளும்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பயமுறுத்தினாலும்அவருடைய சொற்களும் ,அடுத்த நகர்வுக்கானதிட்டங்களும் நம்பிக்கை அளிக்கின்றன.

எந்த ஒரு நேரத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் இன அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதில் மிகுந்த கவனம் கொள்கிறார் திரு. லாரன்ஸ் வோங். அவர்  கலாச்சாரஅமைச்சராக பதவி வகித்தபோது எனக்கு 2014-க்கானபுனைவிலக்கிய பரிசு கிடைத்தது, சிங்கப்பூரில்புனைவிலக்கியம் குறித்து அவருடைய அன்றைய பேச்சு துறைக்குத் தேவையானத் தகுதிகளை அவர் மற்ற அமைச்சுகளில் பணியாற்றும்போது தன் செயல்பாடுகளில்வெளிப்படுத்தும்போது இப்போது என் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூர் வந்து திரும்பிய என்னுடைய உறவினர் சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கட்டம் கட்டப்பட்டு தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருவதும், சென்னையிலிருந்து திரும்பிய என்னுடைய மேனேஜர் வீட்டில் தங்கும் உத்தரவில் இருப்பதும், கோவிட்-19 எல்லைகளுக்குட்பட்ட நிலையைத் தாண்டி உலகம் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தைஉணரச் செய்கிறது.

ஆசியா சிஎன்பிஸிக்கு அளித்தநேர்காணலில் சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியான் பாலகிருஷ்ணன் கோவிட் -19 நெருக்கடி நிலையைப் பொருத்தமாகத் தொகுத்துப் பின்வருமாறுசொன்னார்: “இது ஒவ்வொரு தனிப்பட்ட நாடும் எந்த அளவுக்கு சுகாதாரத்தைப் பேணுகிறது என்ற தகுதிக்கும், அரசின் நிர்வாகத்தரத்துக்கும், மக்களின் பரஸ்பரஒத்துழைப்புக்குமான  அளவுகோல். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று பலவீனமாக இருந்தாலும் பாதிப்பு நிச்சயம் ஏற்படும்;  சுமார் 200,000சிங்கப்பூர்வாசிகள் விரைவில் நாடு திருப்பவுள்ளதால்சிங்கப்பூரில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும், முதுகெலும்பானஅயலகத் தொழிலாளர்களிடையே இப்போது ஏற்பட்டிருக்கும்தொற்றும் ஆரம்பத்தில்  சிங்கப்பூர்  நிலையை மாற்றியுள்ளன. சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் 43 விடுதிகளில்தங்கியிருக்கிறார்கள். நோய் தொற்று இல்லாதவர்களை ராணுவமுகாம்களுக்கும், கப்பல்களுக்கும் அனுப்பும் பணி தொடங்கியிருக்கிறது. 2008ல் சிங்கப்பூர் தன் இருப்பிலிருந்து முதன் முறையாக2008-இல் 20 பில்லியன் டாலரை எடுத்து மீண்டது. இப்போதைய கோவிட் 19 நெருக்கடிக்கு 60 பில்லியன்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை மந்தமாக்கசிங்கப்பூர் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்வதைப்போலவே முயற்சி செய்யும் பிற நாடுகள், வேகமானபொருளாதார வீழ்ச்சிக்கும் ஆளாகும். இது சென்ற வாரம் (தி பாலிசி போர்ட்டல் ஆஃப்யூரோப்பியன் ரிஸர்ச்நெட்வொர்க் சென்டர் ஃபார் எகனாமிக் பாலிஸி ரிஸர்ச்) வெளியிட்ட அறிக்கையின் முடிவு.

கட்டுப்பாட்டுநடவடிக்கைகள், நோய் பாதிப்பிலிருந்து வெளியே நம்மைக்கொண்டுவர வாரங்களோ மாதங்களோ ஆகலாம். மருத்துவமனைகள் நோயை எதிர்கொண்டு சிகிச்சையளித்து, தினசரி           பாதிப்படைபவர்களின்எண்ணிக்கையைக் குறைக்கலாம். ஆனால் இது நீண்ட மற்றும் தீவிரமான பொருளாதாரச் சரிவையே குறிக்கும்.

உயிர்களைக் காத்தல் மற்றும் நோய்த்தொற்றைக்கட்டுப்பாட்டு வீதத்துக்குள் வைத்தல் ஆகியவற்றைத்தேர்ந்தெடுத்ததன் மூலம் சிங்கப்பூர் தன்னைத்தானேதீவிரமான பொருளாதார சவாலுக்கும் ஆளாக்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அதன் வெளிப்படையான, இணைக்கப்பட்ட பொருளாதாரம் பாதிப்புக்குஆளாகியிருக்கிறது. இந்த பாதிப்பில் இருந்து நிறுவனங்களும், குடும்பங்களும் மீள்வதற்கான உதவிகளைச்செய்யும் அளவுக்கு அதிர்ஷ்டவசமாக சிங்கப்பூரிடம் நிதி ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவே நோய்த்தொற்றுவீதமாகட்டும், நோயின் காரணமாக ஏற்பட்ட இறப்பு வீதமாகட்டும் அல்லது பொருளாதாரச் சிக்கல்களாகட்டும்ஒரு நாட்டின் தகுதியான செயல்பாடுள்ள தலைமையும் முக்கியம் என்பதை சிங்கப்பூர் அரசு மீண்டும் நிரூபித்துள்ளது.

இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கிறது: உலகப் பொருளாதாரம் என்பது ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது. எந்த ஒரு நாடும்இந்த வைரஸைத் தனித்துப் போராடி விரட்ட இயலாது. உலகளாவிய இது போன்ற ஒரு நோய்த்தொற்றை எதிர்கொள்ளப் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரச்சீரமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஆதரவு தேவை. கட்டுப்பாடுகளை வெற்றிகரமாக சிங்கப்பூர் அமல்படுத்தியதன் ரகசியம் மக்களிடம் வாங்கும் திறன்அதிகம் இருப்பதுதான். அதனால் அவர்களின் ஒத்துழைப்பும்அதிகமாக இருக்கிறது. அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் உத்தரவு என்பது இங்கொன்றும் அங்கொன்றுமானஅலுவலர்களின் காணொளி அறிவுப்புகள் மூலமாகவோஅல்லது ஸ்மார்ட் ஃபோன்களை புவியியல் ரீதியாக இணைப்பதன் மூலமாகவோ அமல்படுத்திவிட முடியாது. மாறாக இதற்கு தனிமைப்படுத்தப்பட்டவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொடர்பில் இருந்தோரின் ஒதுழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

சமூக அழுத்தங்களுக்குஇசைவது என்பது கண்ணுக்குத் தெரியாத – ஆனால் – உறுதியான கட்டுப்பாடுகளை ஒருவரின் நடத்தையில்கொண்டுவர வேண்டிய விஷயம் கோவிட் -19க்கெதிரானஇரண்டு மாதப் போரில் இருக்கிறோம். இது ஓராண்டுநீடிப்பதாக இருந்தால் நாம் ஆரம்பகட்டத்தில்தான்உள்ளோம். இது ஒரு மிக நீண்ட பயணம். வெளிப்படையான, பாதிப்படையக்கூடிய பொருளாதாரத்தைக்கடைப்பிடிப்பதில் இருக்கும் கடினமான உண்மைகளை உணர வேண்டும். ஆனால் பிரச்னைகளைச் சமாளித்து மீள்வோம்.

சிங்கப்பூர் பிரதமர் ,அயலகத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட  தொற்றை   பற்றி பகிர்ந்து கொண்ட வார்த்தைகள்  மிகவும் நெகிழ்வானவை :“சிங்கப்பூரில், உங்களது மகன்கள், தந்தைகள், கணவர்கள் ஆகியோரின் உழைப்பையும் பங்களிப்பையும் நாங்கள் போற்றுகிறோம். அவர்களது நலனில், எங்களுக்குப் பொறுப்பு உள்ளதை, நாங்கள் உணர்கிறோம். நாங்கள், எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து, அவர்களது சுகாதாரம், வாழ்வாதாரம், நலன் ஆகியவற்றை இங்குக் கவனித்துக்கொள்வோம்; உங்களிடம் பத்திரமாகத் திரும்பி வரச் செய்வோம். அனைத்து சிங்கப்பூரர்களின் சார்பாக, நீங்கள் நலமுடன் இருக்க நான் வேண்டுகிறேன்,” என்று வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் தமது காணொளியைப் பார்த்தால் அவர்களிடம் கூறுவதாகத் தெரிவியுங்கள் ’’

​நான் சார்ந்த தொழில் அரசாங்கம் உதவவில்லைஎன்றால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும் என் உணவகத்தில் இம்மாதம் வாடகைக்கழிவை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. சுமார் 25 ஊழியர்களுக்கும் 75%சம்பளம் ஈடுசெய்கிறார்கள். தீர்வை, அரசாங்க வரிகளைகுறைத்துள்ளார்கள், நெருக்கடிக்கு இடையே, சிங்கப்பூர் இன்றைய நிலைமையைச் சமாளிப்பதை  மற்ற நாடுகள்மரியாதையுடன் பார்ப்பதற்கு முன்னுதாரணமான அதன்  செயல்பாடுகளே காரணம்.