கடந்த வாரம் ஜூலை 18 அன்று OUTLOOK ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. அப்பட்டியலிலுள்ள நாட்டிலேயே சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் அதிக பல்கலைக்கழகங்கள் தமிழத்தைச் சேர்ந்தவையே. தமிழகத்தைத் தொடர்ந்து இரண்டாமிடத்தில் மகாராஷ்டிராவும் (11) மூன்றாமிடத்தில் கர்நாடகாவும் (9) உள்ளன.

தரவரிசை மதிப்பீடுகள்:

Outlook – ICARE India இணைந்து நடத்திய இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு தரவுகளை ஆராய்ந்து மதிப்பீடுகளை வழங்கியுள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதம் (Faculty Student Ratio – FSR), முனைவர் பட்டம்பெற்ற ஆசிரியர்கள் (Faculty with PhD – FWP), ஆசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகள் (Papers Per Faculty – PPF), ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மேற்கோள்கள் (Citations Per Paper – CPP) and உள்ளடக்குத்தன்மை மற்றும் பன்முகத்தன்மை (Inclusiveness & Diversity – ID) போன்ற அளவீடுகளைக் கொண்டு அந்நிறுவனங்களின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், அங்கு பணிபுரிவோரின் பின்னூட்டங்கள் ஆகியவற்றோடு ஆய்ந்து தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவை பல்கலைக்கழகங்களிடமிருந்து பெறப்படும் நேரடித் தகவலறிக்கைகளைக் கொண்டு மட்டுமே தயாரிக்கப்படாமல் நம்பத்தகுந்த மூன்றாம் தரப்புகளிடமிருந்து (reliable third party sources) பெற்ற தகவல்களையும் ஆய்ந்து பலதரப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 20 நிறுவங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்தியாவிலேயே டாப் 100 பல்கலைகழகங்களில் அதிகமான பல்கலைக்கழகங்களைப் பெற்று தமிழகம் முதலிடம் வகிக்கிறது

பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக பல்கலைக்கழகங்கள் (வரிசை எண் – பல்கலைக்கழகம் – தரவரிசை) :

1) ஐ.ஐ.டி,சென்னை 3 –

2) அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 13

3) அம்ரிதா விஷ்வா வித்யாபீடம், கோவை – 20

4) வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், வேலூர்- 26

5) சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 32

6) அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 33

7) பாரதியார் பலகலைக்கழகம், கோவை – 35

8) எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை – 36

9) ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை – 41

10) வேளாண் பல்கலைக்கழகம், கோவை – 45

11) சாஸ்த்ரா, தஞ்சை – 47

12) தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி – 48

13) சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை – 57

14) சவீதா பல்கலைக்கழகம், சென்னை – 60

15) பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம், சென்னை – 61

16) மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை – 62

17) இந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை – 83

18) காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகம், திண்டுக்கல் – 85

19) பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம், சென்னை – 97

20) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கடலூர் – 99

இந்த முழு பட்டியலின் இணைப்பு: https://bit.ly/2XTeBEk