2017ல் உத்தரப் பிரதேச முதலமைச்சராகப்  பொறுப்பேற்ற யோகி ஆதித்தியநாத் இரண்டு நாட்களில் அந்த மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க Anti-Romeo படையை உருவாக்கினார்.
பெரும்பாலும் சாதாரண உடை அணிந்த பெண் காவலர்களும் ஆண் காவலர்களும் பள்ளி கல்லூரிகள் வெளியே மற்றும் பெண்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பார்கள் . பெண்களைத் தொந்தரவு செய்யும் செயல்களில் ஈடுபடும் ஆண்களை கையும் களவுமாகப் பிடிப்பதே இவர்களின் கடமையாகும்.

ஆனால் சில நேரம் காதலர்களையும் திருமணமான தம்பதிகளையும் தவறுதலாக இவர்கள் பிடித்து விடுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த திட்டம் ரத்து செய்யப் பட்டது.
சமீபத்தில் 2 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுக் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டார்.இதையடுத்து பல கண்டன குரல் எழுந்தது.உத்தரப் பிரதேச மாநிலத்தில் சரியான சட்டம் இல்லாததே இதற்குக் கரணம் என்று பலரும் குரலெழுப்பத் தொடங்கினர் ,இதை  அடுத்து, மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் Anti-Romeo படையை மீண்டும் அமலுக்குக் கொண்டு வர உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்துறை அதிகாரிகள்,தலைமைச் செயலர்,மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரைச் சந்தித்த யோகி பல திருத்தங்களுடன் Anti -Romeo படையை உடனே அமலுக்குக் கொண்டு வர உத்தரவிட்டுள்ளார் .

உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு மட்டும் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் யோகியின் இந்த நடவடிக்கை மக்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் அன்று நம்பப்படுகிறது.