‘டிக்டாக்’ இந்த வார்த்தையை அல்லது இந்த அப்ளிகேஷனை தெரியாதவர் தமிழகத்தில் மிகச் சிலரே! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தமிழர்களின் பண்பாடு தொட்டே காணப்படும் உணர்வுகளை சமீபகாலங்களில் கிளர்தெழ செய்ததில் டிக்டாக்கின் பங்கு மிகப்பெரியது.
குழந்தைகள், இளைஞர்கள், பெற்றோர்கள் என வயது வித்தியாசமின்றி தங்கள் திறமையை வெளிபடுத்தி பல வீடியோக்களை தினமும் டிக்டாக் அப்ளிகேஷனில் அப்லோடு செய்கிறார்கள், பலவிதமான வீடியோக்கள், பல அறிய கருத்துகள், பல புதிய திறமையாளர்கள், தொழில்நுட்ப தகவல்கள், பெரிய பெரிய நடிகர்களின் குத்தாட்டங்கள் என டிக்டாக் அப்ளிகேஷனை ஓப்பன் செய்தால் எளிதில் க்ளோஸ் செய்ய மனம் வருவதில்லை.
சீன தயாரிப்பான இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்தவர்கள் பில்லியன் கணக்கானவர்கள், நாளொன்றுக்கு மில்லியன்கணக்கான வீடியோக்கள் இந்த அப்ளிகேஷனில் வீடியோ அப்லோடு செய்கிறார்கள். பல நாட்டு மக்கள் இந்த வீடியோ ஆப்பை பயன்படுத்துகிறார்கள். இப்படி இந்த ஆப்ளிகேஷனின் பயன்பாடு இருக்க, இதன் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக இருக்கிறது.
இந்த அப்ளிகேஷனின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு இந்தோனேஷியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் இந்த அப்ளிகேஷன் விதிமுறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்கூட கூகுள் ப்ளே ஸ்டோர் இந்த அப்ளிகேஷனை நீக்கி பின்பு இணைத்தது. மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமீபத்தில் அமெரிக்கக் குழந்தைகள் குறித்த தகவல்களைத் திருடியதற்காக டிக்டாக் நிறுவனத்திற்கு அந்நாடு 5 புள்ளி 7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக சமூகவலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக் டாக் பயன்படுத்துபவர்களின், வங்கிக் கணக்கும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இந்த சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றும் படங்கள், அதன் பின்னணி இவற்றை கண்டறிந்து ஒரு கும்பல் உங்களை குறிவைத்து திருடிக் கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 110 கோடி ரூபாய் பணம் திருடு போய் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.
இந்நிலையில் டிக் டாக் அப்ளிகேஷன் மூலம் அதை பயன்படுத்துபோரின் சில முக்கியமான தரவுகளை சீனா திருடி வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் திருடப்படும் இந்தத் தகவல்கள் நமது தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது, ஜனநாயகத்தைக் காப்பதற்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுவது நமது கடமையாகும்.
வெகுஜன மக்கள் பயன்படுத்தும் இப்படிப்பட்ட பொழுதுபோக்கு அப்ளிகேஷன் மூலம் பணம்பறிக்கப்படும் போது இதன் பாதுகாப்பு எந்தவகையில் உள்ளது என மக்கள் உணரவேண்டும். மேலும் தங்கள் வாழ்க்கையே டிக்டாக் தான் என காலை எழுந்ததுமுதல் தூங்கும்வரை பலர் டிக்டாக்கில் வாழ்கிறார்கள், ஸ்மார்ட் போன் மனிதர்களை ஸ்மார்ட்டாக உருவாக்கியதைவிட மொபைலிலே தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.