புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 8) வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது.  ஜிப்மர் மருத்துவமனையில் 150 இடங்களும் காரைக்கால் ஜிப்மர் கிளையில் 50 இடங்களும் இருக்கின்றன. மொத்தம் உள்ள 200 இடங்களுக்கான நுழைவுத்தேர்வு 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் இரு பிரிவுகளாக நடைபெற்றது. முதல் பிரிவில் 81,886 பேர்களும், 2-ஆவது பிரிவில் 72,605 பேர்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் இந்த தேர்வை எழுதினர்.

இத்தேர்வுக்கான முடிவுகள் ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் http://jipmer.edu.in/  வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் 11 பிரிவுகளாக  வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வருகின்ற ஜூன் 12 முதல் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கடிதம் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.