அமெரிக்கா லாஸ் வெகாஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ் கலந்துகொண்டார். அப்போது பெஸோஸிடம் மிருகவதை குறித்து கேள்விகேட்ட இந்திய பெண் பிரியா ஷாவ்னி மேடையிலேயே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனத்திற்குச் சொந்தமான பறவைகள்கறி விற்கும் நிறுவனம் ஒன்று கலிபோர்னியாவில் இயங்கி வருகிறது. இந்நிகழ்வில் ஜெப் பெஸோஸ் பேசுகையில் திடீரென்று ஒரு பெண் எழுந்து அவரை கேள்விகேட்கத் தொடங்கினார். ‘நிறுவனர்களில் நடக்கும் மிருகவதைகளை எப்படி தடுக்க போகிறீர்கள்’ என்று மேடையில் ஏறி கேட்டிருக்கிறார். இதை சிறிது எதிர்பாராத ஜெப் பெஸோஸ் அவருக்கு பதிலளிக்காதநிலையில் அங்கிருந்த பாதுகாவலர்களால் ஷ்வானி கைது செய்து அப்புறப்படுத்தப்பட்டார். அங்கு சிலநேரம் பரபரப்பு நீடித்த நிலையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “இவர் அத்துமீறி உள்ளே நுழைந்ததால் கடும் தண்டனை வழங்கப்படும்” என்று கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 30வயதான பிரியா ஷாவ்னி, காலிஃபோர்னியாவில் வசித்து வருவதாகவும் மிருகவதைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவந்துள்ளது. பல சமூக ஆர்வலர்கள் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.