இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி சம்மந்தமாக தொடர் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இதன்மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளைக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளைச் செய்து வருகிறது. உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்பட இருந்தது. இதுவரை இந்தியா, விண்ணில் செலுத்தியவை அனைத்தும் ஆர்பிட்டர் வகையைச் சார்ந்தவையே. ஆனால் சந்திராயன் 2 – ஆர்பிட்டர் (வலம் வருதல்), லேண்டர் (தரையிறங்கி ஆய்தல்), ரோவர் (தரையிறங்கி வலம் வந்து ஆய்தல்) என்ற முப்பரிமாணங்கள் கொண்டது.
ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 56 நிமிடங்களுக்கு முன்னதாக அதிகாலை 1.55 மணிக்கு, சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்டு, பின்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சந்திராயன்-2 ஜூலை 22ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.