இலங்கையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த நபர், பதவி விலகியதால் நிரந்தர ஊழியருக்ககான பணிக்கு அரசு விளம்பரம் அளித்திருந்த நிலையில் இப்பணிக்காக அமெரிக்கர் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இலங்கையில் வழக்கு விசாரணை முடிந்து போதைப் பொருள், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 48 பேர் சிறையில் உள்ளனர். 1976-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றம் பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த நபர் விலகியதால் நிரந்தர ஊழியரை நியமிக்க அரசு முன்வந்து வேலைவாய்ப்பு விளம்பரங்களையும் வெளியிட்டிருந்தது.
விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்த நிலையில் விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்து தகுதியானவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றது..