மக்களவை தேர்தல் முடிந்தவுடன் முதல்கட்டமாக 54,000 பணியாளர்களை நீக்க பி.எஸ்.என்.எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அண்மைக் காலமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூடப்படவுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது இந்த நிறுவனத்தில் 1,74,312 பணியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள 54,000 பணியாளர்கள் நீக்கம் என்பது மொத்த பி.எஸ்.என்.எல் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இதன்மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.13,895 கோடியை மிச்சப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.1,921.24 கோடி மிச்சமாகும். 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக வி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் பணியிலிருந்து விலக்கப்பட உள்ளனர். வி.ஆர்.எஸ் ஓய்வுத் திட்டத்துக்கு ரூ.13,049 கோடி செலவாகும்.
தற்போது ஆண்டுக்கு ரூ.7,993 கோடி நஷ்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இயங்கி வருகிற பி.எஸ்.என்.எல் நிறுவனம், ஜியோ வருகையால் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மட்டும் 20 சதவிகிதம் லாபத்தை பி.எஸ்.என்.எல். இழந்தது. 2016-ம் ஆண்டு ரூ.31,533 லாபம் ஈட்டிய பி.எஸ்.என்.எல் அதற்கு அடுத்த ஆண்டே ரூ.25,071 வருவாய் ஈட்டியது. இந்த நிறுவனத்தை மீண்டும் லாப பாதைக்குத் திருப்ப அகமதாபாத் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் ரேகா ஜெயின், அஜே பாண்டே, விஷால் குப்தா அடங்கிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 58 ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.