ஒரு நோய் தீவிரமாகப் பரவுகிறதென்றால் அந்நோய் குறித்த வதந்திகள் மற்றும் விழிப்புணர்வுகளும் மக்களிடையே அதி தீவிரமாக பரவுகிறது. அந்தவகையில் கட்டுகடங்காமல் நாடுவிட்டு நாடு பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இந்த வேளையில் ராஜஸ்தானில் சில பெண்கள் கூட்டமாக அமர்ந்து கொரோனாவிற்காக பாடல் ஒன்றை தயார் செய்து பாடியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவரும் இந்தப் பாடல்  “கொரோனாவே வெளியே போ… கொரோனாவே வெளியே போ… இந்தியாவில் உனக்கு வேளை இல்லை.. ..”என்று மிக ஆக்ரோசமான வரிகளில் குத்துப்பாட்டு வகையில்  அமைந்துள்ளது. கேட்பவரை உடனே பாட தூண்டு வகையில் பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் பாடல் செம ஹிட் அடித்துள்ளது.

மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் முயற்சியால் தற்போது எந்தவொரு தொலைப்பேசி அழைப்பிற்கு முன் இருமலுடன் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள்  வருவதையொட்டி பல மீம்கள் மற்றும் பாடல்களும் வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நோயை எதிர்கொள்ளும் முறையும் தற்காத்துக்கொள்ளும் முறையும் இந்திய மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் இந்தியாவில் மட்டும்தான் எந்தவொரு கொடிய நோயானாலும் தங்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதவரை அதை முற்றிலும் பொருட்ப்படுத்தாமல் பாடல்கள், மீம்ஸ்கள், நகைச்சுவை காட்சிகள் என தங்கள் மனநிலையிலை இப்படியாக வெளிபடுத்தும்  வினோதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.

பாடல் லிங்க் கீழே

ON CONONA VIRAS ?

Sushil Mittal यांनी वर पोस्ट केले शुक्रवार, ६ मार्च, २०२०