நடிகர் ராஜ்கபூரால் மும்பை செம்பூரில் 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஆர்.கே.ஸ்டுடியோ ரியல் எஸ்டேட் பணிக்காக விற்கப்பட்டுள்ளது.
பல புகழ்பெற்ற படங்கள், பல சண்டைக்காட்சிகள், பாடல்காட்சிகள் என பாலிவுட்டின் சகாப்தத்தில் 70வருட காலங்களில் இடம்பெற்றிருந்த ஆர்.கே.ஸ்டுடியோ தற்போது விற்பனை மனையாக மாறியுள்ளது பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கோத்ரேஜ் நிறுவனத்தின் ஒரு பகுதியான கோத்ரேஜ் ப்ராபர்டீஸ்க்கு இந்நிலம் 2.2 ஏக்கர் பரப்பளவில் கணிக்க இயலாத தொகைக்கு கை மாறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலத்தில் கோத்ரேஜ் ப்ராபர்டீஸ், கிட்டத்தட்ட 33000 சதுர அளவில் பல அடுக்கு குடியிருப்பு வீடுகள், ஆடம்பர விற்பனையகங்கள் என உருவாக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.
இது பற்றி அந்நிறுவனம் கூறுகையில், “இந்த தளமானது சமூக மதிப்புள்ள உள்கட்டமைப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிகள், பல முக்கிய இடங்கள் இந்த இடத்திற்கு அருகில் இருக்கின்றன. இந்த புகழ்பெற்ற இடம் எங்களது வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்” என்றும்
மேலும் “இப்பகுதியில் உருவாகும் குடியிருப்புகள் இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையுமென்றும் இங்கு குடியிருப்பவர்களுக்கு சிறந்த வாழ்க்கைமுறை உருவாகும் என்றும்” இந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பிரோஜாஷா கோத்ரேஜ் கூறியுள்ளார்.
இதுபற்றி ரந்தீப் கபூர் (ராஜ் கபூர் மகன்) கூறுகையில், “ வரலாற்று முக்கியத்துவ வாய்ந்த எங்களது ஆர்.கே.ஸ்டுடியோ கோத்ரேஜ் நிறுவனம் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி, புதிய மாறுபட்ட பகுதியாகஆர்.கே. ஸ்டுடியோ மாறும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்றார்
கடந்த சில வருடங்களாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் படப்பிடிப்பிடிப்புகாக பயன்படுத்தப்பட்டுவந்த ஆர்.கே.ஸ்டுடியோ 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு உபயோகப்படுத்தபடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.