2020 ஒலிம்பிக் போட்டிக்காக ஒலிம்பிக் டார்ச் டோக்கியோவில் அறிமுகமானது. இது பிரத்யேக வடிவில், ஜப்பானின் புல்லட் ரயில் உருவாக்கப் பயன்படுத்தும் பொருளால், காற்றினால் அணையக்கூடாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப்பெற்று வருகின்றது. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குப்பெற்று வெற்றிப்பெறுவதே வாழ்க்கையின் லட்சியமாக இருந்து வருகின்றது. தன் நாட்டிற்காக ஒருமுறையாவது விளையாட வேண்டும் என்பதும் அவர்கள் ஒவ்வொருவரின் கனவாகவும் இருக்கின்றது. அந்தவகையில் 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைப்பெறவுள்ளது. இதற்காக ஜப்பான் அனைத்து ஆயத்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்குமுன் ஏற்றப்படும் ஒலிம்பிக் டார்ச்சை பிரத்யேகமாக ஜப்பான் வடிவமைத்துள்ளது. இதனை ஜப்பானைச் சேர்ந்த டோக்யூஜின் யோஷியோகா வடிவமைத்துள்ளார். இந்த டார்ச் 71 செ.மீ நீலமும், 1.2 கிலோ எடையும் கொண்டுள்ளது. இது ஜப்பானின் புல்லட் ரயில் உருவாக்கப் பயன்படுத்தும் பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன்மேல் பகுதி ஜப்பானில் பிரபலமான ‘சக்குரா’(செர்ரி பிளாசம்) வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டார்ச், ஒலிம்பிக் போட்டி னடப்பெறும் பொழ்ஹுது அனையக்கூடாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.