மொகாலியில் கடந்த ஏப்.01. அன்று நடந்த ஐ.பி.எல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரருமான துஷ்கர் ஆரோத் கைது செய்யப்பட்டுள்ளார்.
12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடப்பெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஆன ஆட்டம் மொகாலியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பஞ்சாப் அணி 14 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி தொடர்பாக குஜராத் மாநிலம் அல்காபுரி என்ற இடத்தில் உள்ள காபிஷாப்பில் சூதாட்டம் (பெட்டிங்) நடந்ததாக தகவல் தகவல் வெளியானதையடுத்து போலீசார் அங்குச்சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மிகப்பெரிய அளவில் ஐ.பி.எல். சூதாட்டம் நடந்ததுள்ளது என மொபைல் போனை ஆய்வு செய்ததில் தெரியவந்தது.
இச்சோதனையின் போது, அந்த காபி ஷாப் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரருமான துஷ்கர் ஆரோத்துக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் அவரது வியாபார பங்குதாரர்கள் ஹேமங் படேல், நீச்சல் மிதா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டார்கள்.