செயலாகும் சொற்கள் –பகுதி-3 

 

சராசரியாக  ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கும் . பூனையை  நாம் தற்போது புழங்கிவரும் பெயரான பூனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் வெருகு, வெருக்கு, பிள்ளை, பூசை ஆகிய பெயர்களே சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுவும் அது வீட்டு பிராணியாக இருந்தது இல்லை. காட்டுபூனையைக் குறிப்பது என்றெல்லாம் தமிழறிஞர்கள் ஆராய்ச்சி செய்து தகவல் தந்துள்ளனர். இல்லை.

பூனையின் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டதால்  பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும்.  பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது என்பதும் உபரிசெய்தி . இத்தகைய பூனையை  நபிகள் நாயகம் பூனைகளை வளர்த்து வந்தார் . முன்னால் அமெரிக்க ஜனாதிபதியான பில்கின்டன் சாக்ஸ் என்று ஒரு பூனை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் பிரத்தியேக அறை, பத்திரிக்கையாளர் அறை என எங்கும் செல்லும் வசதியையும் அது பெற்றிருந்தது.

பூனை இருக்கும் இடத்தில் பில்லி சூனியம் வைக்க முடியாது என்ற ஒரு கருத்தும் உண்டு . அந்த நம்பிக்கையில் பூனைவளர்க்கிறார்கள் என்றெல்லாம் நாம் படித்தாலும் அந்தப் பூனை ஒரு டிடெக்டிவ் வழக்கின் ஆதார புள்ளியாக மாறியதும், அது பழிவாங்க எப்படி பயன்படுத்தப்பட்டது ஒரு பூனை வளர்ப்பு எப்படி மன நோயாக மாறுகிறது என்பதையும் இந்தப் பகுதியில் சொல்லபோகிறேன்.

அந்த பெண்ணின் பெயர் ஜெஸிமா ..( பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்து வளர்ந்தது திருமணம் செய்தது  எல்லாம் கோவை அருகில் உள்ள ஒரு ஊரில்.  கணவனை விட்டு விலகி வாழ்கிறாள். ஆனால் சிக்கல் இப்போது கணவன் அல்ல. மகன் மூலம்தான்..

ஜெஸிமாவின் புகார் இது தான். கணவனை விட்டு பிரிந்து , கணவன் துணையின்றி தன் சுய சம்பாதிப்பில் மகனை வளர்த்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி அப்பாடா என மூச்சு விடும்சமயம் ஒரு புது பிரச்னை. மகன் துபாய்க்குவேலைக்கு போய் 5 வருடம் சம்பாத்தித்து சேமித்து சென்னை வந்து இப்போது சும்மா தான் இருக்கிறான்.திரும்ப துபாய் போக திட்டம். அவன் வந்து ஒரு வருடமாகிவிட்டது.எல்லாம் சரியாக தான் இருந்தது.  இப்போது எங்கும் வேலைக்கு போவது இல்லை .ஆனால் வீட்டில் இருப்பது இல்லை.  இரவு மட்டும் படுக்க வருகிறான்.சில நாள் அதுவுமில்லை. எங்கு போகிறான் என்ன செய்கிறான் என்பது ரகசியமாவே இருக்கு. அம்மாவுடன் முற்றிலும் பேசுவது இல்லை.

இப்போது எனக்கு வந்த வழக்கே இது தான் …மகன் என் மீது பாசமாவானா? அவன் பாசக்காரனாகமாற என்ன செய்யலாம்? அவன் வேறு ஏதாவது கெட்ட சகவாசத்தில் மாட்டியிருக்கானா? எங்குபோகிறான் என்ன செய்கிறான்? அவன் மன மாற்றத்துக்கு என்ன காரணம்? இதையெல்லாம் கண்டுபிடித்து சொல்லுங்க என்பதே ஜெஸிமா எனக்கு கொடுத்திருக்கும் பணி.

 

மகனை  ஆராய ஆரம்பித்தோம். பின் தொடர ஆரம்பித்தோம்.அவனுக்கு எந்த பெண் தொடர்போ தப்பான ஆட்கள் தொடர்போ இல்லை. அவனுக்கு அடிக்கடி ஒரே ஒருபோன் கால் வந்தபடி இருந்தது. நமது தேடலில்…

முதல் அதிர்ச்சி – யாரை எதிர்த்து தன் யுத்தத்தை தொடங்கி வெற்றிப்பெற்றதாக ஜெஸிமா நினைத்து கொண்டிருக்கிறோரோ அங்கே சறுக்கல். அதாவது சில ஆண்கள்குறுக்கு வழியில் வெல்ல நினைப்பது போல் மகன் மனைவியை விட்டு பிரிந்தாலும் அதீபாவின் கணவன் ,ஜெஸிமாவுக்குத் தெரியாமல் தன் மகனுடன் பேசிக்கொண்டும் வஞ்சம் தூவிக்கொண்டும் தான் இருக்கி்றார் என்பது.

இரண்டாவது அதிர்ச்சி மகன் கோவையில் யார் வீட்டிலும் தங்கவில்லை. மாறாக தனியாக பொள்ளாச்சியில் ஒரு நண்பனின் வீட்டில்    மொட்டை மாடி வீட்டை  வாடகைக்கு எடுத்து தனியாக அங்கு போய் இருக்கிறான் என்பது.

மூன்றாவது பெரும் அதிர்ச்சி …..அவன் வீடே கதி என்று இருந்தான். அவன் அந்த வீட்டைவிட்டு நகர்ந்த பொழுதில் அந்த மாடியில்கண்ட அந்த காட்சியை பார்த்து விட்டு உடனே அதீபாவுக்கு போன் போட்டு ஆபிஸ் வரவழைத்தேன்.

’’ ஜெஸிமா ..மறைக்காமசொல்லுங்க ..உங்க மகனின் செயல்பாடு அல்லது அவனைபற்றி வேறு எதாவது வித்யாசமான குணம், இல்ல உங்களுக்கும் அவனுக்குமான சுமுக உறவில் விரிசல் எதையும் என்னிடம் சொல்லுங்க ’’ என்றேன்.

ஜெஸிமா பதறி போனார்.. ‘’ ஏன் என்ன ஆச்சி என்ன கண்டுபிடிச்சீங்க என்றார்? பின் அவரே..அவன் துபாய்க்கு வேலைக்கு போயிட்டு சென்னை வரும் போது அவனுக்கு யாரோ ஒரு பூனையை கிப்ட்டா கொடுத்து இருக்காங்க . இது ராசியானது இது பெருகும்போது நீயும்பெருகுவன்னு யாரோ சொல்லி கொடுத்து இருக்காங்க.. ஆனா எனக்கு ஆஸ்துமா . டஸ்ட் , பூனைரோமம் அலர்ஜி.. இவன் அதை எடுத்து வந்து என் பேச்சைமீறி வளர்த்தான். அது என்னடான்னா வசவசன்னு குட்டி போட வீடு முழுக்க 5 பூனைகளாச்சி. எனக்கு ஆஸ்துமா அதிகமாகி மூச்சிவிட சிரமப்பட்டேன்.வேற வழியில்லாம அவன் கிட்ட சண்டை போட்டேன் .ப்ளு கிராஸ்ஸில் போன் போட்டு எல்லா பூனையும் பிடிச்சிகொடுத்துட்டேன். தன்னோட ராசி அதிஷ்டம் பறிபோனதா கத்தினான். என் அப்பனையே துரத்திட்ட பூனையை துரத்தாம இருப்பியான்னு திடீரென்று அப்பனுக்கு வக்காலத்து பண்ணி பேச ஆரம்பிச்சுட்டான் . அதுக்கு பிறகு வீட்டுக்கு வருவதில்லை.அதான் என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு உங்க கிட்ட வந்து கேஸ் கொடுத்தேன்.’’ என்றார்.

’’ஜெஸிமா.. சில ஆண்கள் பெண்களை நேரடியா மோதமுடியலைன்னா உடல்ரீதியா களங்க படுத்துவாங்க.உளவியல் ரீதியா மறைமுக தாக்குதல் நடத்துவாங்க..இப்போ அது தான் நடக்குது உங்களுக்கு. பூனை ராசின்னு சொல்லிபூனையை வீட்டுல வளர்க்க கொடுத்தது ..வேற யாருமில்ல ..உங்களுக்கு பூனைமுடி அலர்ஜின்னு தெரிஞ்ச உங்க புருசன் தான். நீங்க கஷ்டப்படுறத பார்த்து ஒரு சந்தோசம்.உங்களுக்கு தெரியாமலேஅவர் மகனுடன் தொடர்ந்து தொடர்பில் தான் இருக்காரு.உங்க மகன் உங்களுக்கு உண்மையா இல்ல. அதுமட்டுமல்ல இந்த பூனைகளை உன் அம்மா வீட்டுல வைக்கமாட்டா பாரு என்னை போலவே தொரத்திடுவான்னு சொல்லியே கொடுத்து இருக்கார். அதே போலவே நீங்க நடந்துக்கிட்டிங்க. பூனைமேல பூனைவளர்ப்பில் ஒரு ஆசை.  ராசி என்பது இப்போது உங்க மகனுக்கு  வெறியாக நோயாகவே மாறிடுச்சி ..அறுசுவையில் கசப்பு கொஞ்சம் சேர்த்துக்கணும்.பாவைக்காய்…அதுல ஒண்ணு. ஆனா அதே பாவக்காயை மூன்று வேளையும்சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம்,நரம்புதளர்ச்சி,தமனி சுருங்கி மாரடைப்புவந்துடும். சர்க்கரையை அது குறைக்கும் ஆனால் அதிகம்சாப்பிட்டால் அதிக அளவு சர்க்கையை ஒரேடியா குறைச்சி மயக்கம்வந்து விழவேண்டியது தான். இந்த அதிகமான கசப்பு கல்லீரலையும் பாதிக்கும். பாவக்காய் கர்ப்ப காலத்தில் சாப்பிட்டா அபார்சனுமாயிடும். அதனால தான் அளவுக்கு மீறினால் அமுதமும்நஞ்சு..என்றார்கள். பாவக்காயிக்கு மட்டுமல்ல. இது பிராணி வளர்ப்புக்கும்பொருந்தும். ஒரு பூனை வளர்த்தால் பிராணிநேசம்.வீடு முழுக்க இருபது பூனை வளர்த்து பெட் ரூம்,சமையல்ரும்னு எல்லா இடத்திலும் இருந்தா எங்க பார்த்தாலும் பூனையின் நாற்றம் இருந்தால் அது பிராணி பாசம் இல்ல ..மன நோய்னு அர்த்தம்.

உங்க மகனை கண்காணித்தபோது அவன் ஒரு வீடு ( மொட்டைமாடி) வாடகை எடுத்து தங்கி இருக்கான் அவன் வீடு முழுக்க பூனைகள் இருந்தது. ஒன்று அல்ல இரண்டு அல்ல சுமார் பதினைந்து பூனைகள் அவனை சுற்றி சுற்றி வளையவந்து கொண்டிருந்தது. அந்த காட்சி இயல்பானதாக இல்லை. தட்டில் அவன் சாப்பிடும்போது கூடவே பூனைக்கு ஊட்டி தானும் சாப்பிடுறான். அவன் மனசில ஆழமா பூனை பதிஞ்சிபோச்சு.

ஒரு பூனை வளர்த்தா அது இயல்பு யதார்த்தம் வீடு முழுக்க பூனை வளர்த்தால் அது இயல்பு அல்ல மன நோய் .  நீங்க இயல்பிலிருந்து மாறிட்டீங்கன்னு பொருள். அதை உணர்ந்து சரியாக . டாக்டர் கவுன்சிலீங் ரொம்ப முக்கியம். அவன் அங்கேயே தங்கி இருப்பதால் உங்க வீட்டுக்கு வரல. வேலைக்கு போகும்மனநிலையும் இப்போ அவனுக்கு இல்ல.  இந்த முறை நீங்க போய் பொள்ளாசி போய் பூனைகளைப் பிடிச்சி கொடுத்தா அவன் உங்களை கொல்லக்கூட முயற்சி செய்யலாம். உடனே ஒரு மனநல டாக்டரை பாருங்க. இதுக்கு மறைமுக வித்து உங்க புருசன் தான். அவரு உங்கள பழிவாங்குறதா நினைச்சி தன் மகனோட வாழ்வை பாழாக்கிட்டாரு…’’என்றேன்.

பாவம் ஜெஸிமா ..ஒரு பெண்ணின் வெற்றியை இப்படியாக தான் ஆண்கள்சிதைக்க பார்க்கிறார்கள்.அவர்களுக்கு காலமும்சூழலும்கூட தோதாக உதவி செய்கிறது சில நேரம்..ஆயினும்நாம் போராடியே ஆகணும்.தொடர்போராட்டம் வெற்றிக்கானதுக்கு மட்டுமல்ல பெண்ணின்  இருப்புக்கானதும்கூட.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சிக்கிய மோசடி சித்தர்- டிடெக்டிவ் யாஸ்மின்
  2. சந்தேகக் கோடு- டிடெக்டிவ்  யாஸ்மின்
  3. அன்னிய ஆடவர்களைக் கண்டு குரைக்காத நாய்: துப்புத் துலங்கிய தொடர்பு- டிடெக்டிவ் யாஸ்மின்
  4. திசை தேடும் திருநங்கையர்- டிடெக்டிவ் யாஸ்மின்