மிகப்பெரிய தாமதம்தான் என்றாலும் ‘காலா’ படத்தைப் பார்த்து அனுராக் காஷ்யப் பாராட்டியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா வணிகரீதியாக வெற்றியடைந்ததோடு ரசிகர்கள், விமர்சகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனபோதிலும் இதனை இப்போது முன்னணி பாலிவுட் இயக்குனர், கலைஞர் அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார்.

அனுராக் காஷ்யப் உடனான சந்திப்பு குறித்து பா. ரஞ்சித் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருக்கிறார். அதேபோல், அனுராக் காஷ்யப்பும் பா. ரஞ்சித்தின் அனைத்து படங்களையும் பார்க்க ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.