பாடல்

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.

 

ரு பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் ஒரு சிறிய கிராமம்.

அந்தக் கிராமத்தில் மக்கள் நடமாட்டமே இல்லை.

அந்தக் கிராம மக்கள் தங்களுடைய சொந்தக் கிராமத்தில் பிழைக்க வழி இல்லாததால் அந்த மக்கள் பஞ்சம் பிழைக்கப் போய்விட்டார்கள்.

ஒரு வீடு அந்தக் கிராமத்தை விட்டுத் தள்ளி தனியாக இருக்கிறது.அந்த வீட்டிலும் ஆள் இல்லை. ஆள் இல்லாத அந்தவீடு ஆள் இல்லாமல் பாழடைந்திருக்கிறது.

தனியாக இருக்கிற அந்தச் சிறிய வீட்டின் முற்றத்தில் அணில்கள் பயமில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கின்றன.

அணிலாடு முன்றிலார்
குறுந்தொகை 41