அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 63 படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்ட கால்பந்து மைதான செட் அமைத்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில் அவர் காயமடைந்ததாக தெரிகிறது.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த தொழிலாளரை விஜய் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதன் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜயின் இப்படத்துக்கு மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.