2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 340 இடங்களுக்கும் மேலாகப் பெற்றுத் தனிப் பெரும்பான்மையான ஆட்சியை அமைக்கவிருக்கிறது.

இதற்கு இந்திய மக்களுக்குப் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில்

“ஒன்றாக நாம் வளர்வோம்,

ஒன்றாக நாம் செழிப்போம்

ஒரு வலுவான மற்றும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்குவோம்

இந்தியா மீண்டும் வென்றது” எனப் பதிவிட்டுள்ளார்.