விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அயோக்யா’ திரைப்படம் மே 10-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் ஆகும்.

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸுடன் இணைந்து தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்திருக்கிறார் விஷால். ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் இப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், மே 10-ஆம் தேதி வெளியீட்டு அறிவிப்புடன் படக்குழு புதிய போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறது.