கடந்த புதன்கிழமை ஒரு போலி கடிதத்தை நம்பி பல ஊடகங்கள் பரபரப்படைந்தன. அது பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை ஏப்ரல் 26 அம தேதி அன்று வாரணாசியிலுள்ள தாஜ் கங்கையில்  சந்திக்கவிருப்பதாக  பாஜகவின் லெட்டர் பேடில் வெளியான கடிதம்தான்.

இதை முதலில் நம்பியது டைம்ஸ் நவ், மற்றும் ரிபப்ளிக் டிவி தான். டைம்ஸ் நவ் ஒரு படி மேலே போய் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த கடிதத்தை வெளியிட்டது. அதற்கு 300 லைக்ஸ்களும் 80க்கும் மேற்பட்டோர் அதை ரீட்வீட்டும் செய்தனர்.   

பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று  சந்திக்கப்போகிறார். அன்றே அவர் தனது வேட்புமனுவை வாரணாசி தொகுதியில் தாக்கல் செய்யப்போகிறார் என ரிபப்ளிக் டிவி செய்தி வெளியிட்டது.

மோடி பத்திரிக்கையாளர்களைக் கடந்த ஐந்து வருடங்களில் ஒரு முறை கூட சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

காங்கிரஸ் இந்த செய்தி போலி என்று தெரிந்ததும் “உங்களால் இதைச் செய்யவே முடியாது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தாக்கியது. அது 1800 லைக்ஸ் மற்றும் 600 ரீட்வீட் செய்யப்பட்டது.

அக்க்ஷய் குமாருடனான மோடியின் பேட்டிக்குப் பிறகு  இந்த போலிக்  கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவலாகியது.

அவருடைய எல்லா பேட்டிகளும் திட்டமிடப்பட்டவை. அந்த பேட்டிகளும் கூட அவரிடம் எந்த முக்கியமான கேள்விகளும் கேட்கப்படாத அவருக்குச் சாதகமான பேட்டியாகத்தான் இருக்கும் என மோடியின்  விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கிடைக்கும் செய்திகளின் உண்மைத்தன்மையை மற்ற எல்லோரையும்விட செய்தி நிறுவனங்கள் மிகக் கவனமாக பரிசீலித்து மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். ஆனால் மோடியின் ஆதரவு பெற்ற செய்தி நிறுவனங்களே இதை நம்பி ஏமாந்ததுதான் இதில் வேடிக்கை.