வெங்கட் பிரபுவின்  பார்ட்டி படத்திற்குப் பிறகு, சிம்புடன் இணைந்து மாநாடு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியான, இந்நிலையில் மாநாடு படத்தின் ஷூட்டிங்  பற்றிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாநாடு படத்தின் ஷூட்டிங் ஜூன் 25 அன்று மலேசியாவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு உட்பட படப்பிடிப்பு குழுவினர் மலேசியா ஷூட்டிங்கில் கலந்து கொள்கின்றனர் என்ற தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி பகிர்ந்துள்ளார். சிம்பு ரசிகர்கள் இத்தகவலை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

படத்திற்கு வழக்கம்போல வெங்கட்பிரபு யுவன்ஷங்கர் ராஜா இணைந்துள்ளார். ஏற்கனவே சிம்பு நடித்த படங்கள் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாத நிலையில் மாநாடு படத்தின்மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன.