ஃபானி புயல் உருவாகி கரையைத் தொடுவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே கடலில் மிதக்கும் அந்த சிறிய மஞ்சள் நிற மிதவைகள் புயல் உருவாவதை உணர்ந்தன. கிழக்கு கடற்கரையிலிருந்து கடலில் வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 12 மிதவைகள் ஃபானி புயலின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவியது. இந்த மிதவைகள் வானிலை ஆய்வாளர்களுக்கு அப்புயலின் ஒவ்வொரு அசைவையும் அதன் பாதையையும் கணிக்க உதவியது.
12 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓடிசாவில் புயல் தாக்கக்கூடிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கரையோரம் இருந்த மிதவைகள் 190 கி.மீ வரை காற்று வீசும், 6.3 மீட்டர் உயரதிற்கு அலைகள் எழும்பும் என பதிவு செய்தன. இதே மிதவைகள் புயலின் பாதை மாற்றத்தையும் துல்லியமாகச் சொன்னது. இந்த 12 மிதவைகளில் ஏழு மிதவைகளை ஹைத்ராபாத்தைச் சேர்ந்த இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையமும் (INCOIS) மீதி ஐந்தை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் (NIOT) நிறுவின.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னர், சென்னையிலிருந்து 1,140 கிமீ தூரத்தில் மற்றும் இலங்கை கடலோரத்திற்கு இணையான இடத்தில் 36 கிலோ மீட்டர் வேகத்தில் உருவான ஒரு காற்றழுத்ததை சென்சார்கள் முதலில் பதிவு செய்தன. வளிமண்டல அழுத்தம் திடீரென வீழ்ச்சியுற்றது, மற்றும் வினாடிக்கு 18.7 மீட்டர் தூரத்தில் காற்று வீசப்பட்டது.
(NIOT) இன் இயக்குநர் ஆத்மானந்த், சென்னையிலிருந்து 425 கிமீ தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த மிதவை தான் புயலை ஏப்ரல் 30 ஆம் தேதி நேரடியாகச் சந்தித்தது. காற்றின் வேகம் வினாடி 5 மீட்டர் முதல் வினாடிக்கு 28 மீட்டர் வரை அதிகரித்ததால் சராசரி கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தம் 1010hPa முதல் 980hPa வரை வீழ்ச்சியடைந்தது.
இங்கு தான் மிக அதிக உயர அலை 6.8 மீட்டர் உயரத்தில் பதிவானது. அதன்பிறகு அது புயலாக தீவிரமடைந்து அந்த மிதவையை தாக்கியது “ என்று தெரிவித்தார்.
கடற்கரையோரத்திலும் கடலிலும் இருந்த மிதவைகள் வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், அலையின் திசை, அலையின் உயரம், காற்றின் வேகம் மற்றும் திசை மற்றும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உள்ளிட்ட பல தகவல்களை அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த மிதவைகள் கடலின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தையும் பதிவு செய்தது. இந்த வெப்பம் தான் புயல் உருவாவதற்கான ஆற்றல் மையம்” என NIOT இன் கடல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் வெங்கடேசன் கூறினார்.
ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் மிதவைகள் பெறும் தகவல்கள் பல்வேறு துறைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. அவை இந்தியா வானியல் துறை கடலோர காவல் படை, கப்பற்படை, மீனவ சங்கங்கள், சுற்றுலாத் துறை மற்றும் கடலோர மாநில அரசுகள், தேசிய பேரிடர் நிவாரணப் படை போன்றவையாகும்.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்திற்கு பெரும் சேவை செய்கிறது. இந்த 12 மிதவைகளின் பின்னாலுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பலருடைய அற்பணிப்பு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பல இலட்சம் உயிர்களைக் இன்று காத்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள்தான் இந்த தேசம் உண்மையிலேயே மாறுகிறது என்பதற்கு சாட்சியாக உள்ளன.