தற்கொலை பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டிருக்கார்கள்.ஆயிரம் கருத்துக்கள் இருந்தாலும் இப்பூமியை விட்ட பிரிந்த உயிர் பிரிந்தது தானே என்ற கருத்தின் அடிப்படையில், விக்டர் பிராங்கலின் அனுபவமாக ஒன்றை முன் வைக்கிறேன்.ஒரு நாள் இரவு ஒரு பெண்மணி விக்டர் பிராங்கலுக்கு போன் செய்து ‘டாக்டர் நான் தற்கொலை செய்யப் போகிறேன்.உங்களிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது என்றாள். உடனே டாக்டர் விக்டர் பிராங்கல் இரண்டு மணிநேரமளவில் பேசி அந்தப் பெண்ணை தற்கொலை முடிவிலிருந்து மாற்றி விடுகிறார். மறுநாள் அந்தப் பெண் வருகிறாள்,’ அப்போது விக்டர் பிராங்கல் கேட்கிறார் ‘நான் பேசியது எது உன்னை மாற்றியது?’ என்கிறார். உடனடியாக அந்த பெண் கூறுகிறாள் ‘நான் பேசியதை ஒருமணிநேரம் முதன் முறையாக காது கூடுத்து கேட்டது நீங்கதான்’ என்கிறாள்.
விக்டர் ஃபிராங்கல் நரம்பியல் மற்றும் மனநல மருத்துவராக வியட்நாம் மருத்துவக் கல்லூரியில் 1997 அவர் இறக்கும் வரை பேராசிரியராக பணியாற்றிவர்.1946-ல் அவர் “Man’s search for meaning” என்ற புத்தகம் ஒன்று எழுதினார். ஒரு கோடி அளவில் விற்பனையான புத்தகம் இது.
விக்டர் பிராங்கல் இரண்டாம் உலகப்போரின் போது ஐரோப்பியாவில் நிறுவிய இன அழிப்பு முகாமில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கொடுமைகளை அனுபவித்து அக்கொடுமைகளை பிரதிபலிக்கும் உண்மைச் சம்பவத்தை இப்புத்தகம் வாயிலாக தொகுத்தார்.
1942 – ல் விக்டர் பிராங்கல் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு இன அழிப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.வயதானவர்கள், முதியவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் போன்றவர்களை இடது புறம் செல்லுமாறு சைகை காட்டினர். இடதுபுறம் சென்றவர்கள் வதை முகாம்களில் அமைக்கப்பட்ட விஷ வாயு அறையில் தள்ளப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.
விக்டர் பிராங்கல் வலதுபுறம் அனுப்பப்பட்டார். வலதுபுறம் சென்றவர்களுக்கு கடினமான வேலையும் பள்ளம் தோண்டும் வேலை மற்றும் இரயில் பாதை அமைக்கும் வேலையை கொடுத்தார்கள். வலதுபுறம் செல்லப்பட்ட அனைவரின் உடமைகளையும் பிடிங்கி எறிந்தார்கள். கைதிகளுக்கு உரித்தான ஆடைகளை கொடுத்தார்கள்.200 பேர் தங்கும் அறையில் சுமார் 1000 பேரை அடைத்தார்கள்.அவர்கள் அனைவரின் பெயர்களும் எண்களாக மாற்றப்பட்டது.
ஆரம்பத்தில் அனைவரும் ஒரு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். அப்போது விக்டர் பிராங்கல் கூறுகிறார் “ஒரு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது அசாதாரணமாக நடந்து கொள்வது இயல்பு என்கிறார்”.
அடுத்தக் கட்டமாக விக்டர் பிராங்கல் கைதிகளிடம் கவனித்தது “அக்கறையின்மை” அதாவது அங்கு நடக்கும் கொடுமைகளை மனதின் ஆழத்திற்கு எடுத்துச் செல்லாமல் ஒரு பாதுக்காப்பு உணர்வை அவர்களே அறியாது அன்றைய தேவைக்கு என்ன என்பது பற்றி மட்டும் சிந்திக்கும் அக்கறையின்மை கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க பெரியதாக உதவியது என்கிறார்.
அதிகாலையில் வேலைக்குச் செல்லும் விக்டர் பிராங்கலிடம் அருகில் நடந்து வருபவர் ஒருவர் நம் மனைவி எல்லாம் இந்த நிலையில் நம்மைப் பார்த்தால் என்னாகும் என்று கேட்க விக்டர் பிராங்கல் தன் மனைவியின் முகத்தை நினைவுகூறுகிறார்.சூரியனைப் போல் அத்தனை பொலிவானதென்று எண்ணுகையில் ஒன்றை உணர்கிறார் “மனிதனின் விமோசனம் ஆழமான அன்பின் மூலம் சாத்தியம்”என்று.
அதாவது பிடித்தமானவர்களின் நினைவுகள் கூட நம்மை வழிநடத்தும் உற்சாகப்படுத்தும் என்கிறார்.
இதைபோலவே விக்டர் பிராங்கல் சொல்லுகிறார் , ‘எனக்குள் நான் ஒரு கற்பனை உலகை கவனிக்கிறேன்.நான் தற்போது கைதியாக இல்லை நான் கல்லூரியில் உள்ளேன்.என் மாணவர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.நான் அதற்கு பதில் அளிக்கிறேன். வீட்டிற்கு செல்கின்றேன் மனைவி குழந்தையுடன் விளையாடிகிறேன் என்கிறார்.என்னை அடிக்கலாம் திட்டலாம எதுவாக இருந்தாலும் என் சதையை மட்டும் என் உடலை மட்டுமே காயப்படுத்தும் .என் மனதை ஒருபோதும் காயப்படுத்தாது’ என்கிறார்.
இப்படியான மனநிலை வேண்டும் நம் அனைவருக்கும் தற்கொலை எண்ணங்கள் நம்மிடம் வருமென்றால் நாம் அதற்கு எதற்கு இடம் கொடுக்க வேண்டும்.நம்பிக்கை ஒவ்வொரு முறையும் நம்மை தோற்றுப் போக தான் வைக்கிறது.ஒரு முறையேனும் தோல்லியை ஏற்றுக் கொள்ள பக்குவமடைய வேண்டும் என்பதற்கே. இந்த வாழ்க்கை பல விதமான உயிர்களை நமக்கு பரிசளித்திருக்கிறது.அனைத்து உயிர்களுடனும் நிறைவான உறவுகளை வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் என்ன முடியும் என்பதை மட்டுமே சிந்தியுங்கள்.மற்றப்படி அனைத்தும் தானாகவே வந்தடையும்.
மனித வாழ்க்கை எப்போதுமே மூடப்பட்ட கதவு போன்று சாவியை தேடிக் கொண்டு தான் உள்ளது. அந்த சாவியை பெறுவதற்கு வழியென்ன என்பதை ஒருபோதும் சிந்திப்பதே இல்லை.ஆக சிந்தியுங்கள்.உங்களுடன் பேச விரும்புவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.