விவசாய நிலங்களில் இருந்து தண்ணீா் எடுக்கக் அரசு மறுத்து வருவதற்கு எதிா்ப்பு தொிவித்து வருகின்ற 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தண்ணீா் லாரி உரிமையாளா்கள் தொிவித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் நாளுக்கு நாள் ஒவ்வொரு பகுதியாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய மக்கள் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து கேன்கள், லாரிகளில் தங்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீா் வாங்கிக்கொள்கின்றனா்.
இந்நிலையில் விவசாய நிலங்களில் இருந்து லாரி உரிமையாளா்கள் தண்ணீா் எடுக்கக் கூடாது என்று அதிகாாிகள் கட்டுப்பாடு விதித்துள்ளதால் நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தண்ணீர் லாரி உரிமையாளா்கள் தொிவித்துள்ளனா்.
மேலும் சென்னையில் நடந்த தண்ணீர் லாரி உரிமையாளா்கள் கூட்டத்தில், விவசாய நிலங்களில் இருந்து தண்ணீா் எடுக்கக் கூடாது என்ற அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தொிவிக்கு வகையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற 27ம் தேதி முதல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தண்ணீா் லாரி உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் சேவையை பூா்த்தி செய்ய 17 ஆயிரம் லாரிகள் பயன்படுத்தப்படுவதாகவும், சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 500 லாரிகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீா் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.