தூரத்தில் அசைந்தாடி வந்த தீப்பந்த கனல்கள். ஆதூரச்சாலைக்கு அருகில் இருந்த ஆலமரத்திற்கு அருகில் நெருங்கியது.

முன்னதாக இரு மெய்க்காவலர்கள் புலிக்கொடியை கரத்தில் ஏந்தி. பின்னதாக பலக்காவலர்கள் புடைசூஙங ஆதூரச் சாலையை அடைந்திருந்தனர் விளக்கொளி கூட்டத்தினர்.

சில அடி தூரத்தில் பல்லக்கு ஒன்று வருவது போல தெரிந்தது.

அதற்குள். மருத்துவச்சாலையின் உள்ளிருந்த வைத்தியர். நக்கன்.நல்லப்பர் என அனைவரும் வாசலை நோக்கி வந்து விட்டனர்.

முன்னே வந்த பாதுகாவலர் இருவர் இங்கே நின்றுகொண்டிருந்த இளவரசன் ராஜேந்திரனைக் கண்டதும்.

இளவரசர் வாழ்க. தஞ்சையின் தலைமகன் வாழ்க எனக்கூற.
பின்னாலிருந்து வாழ்க வாழ்க என்று சில குரல்கள்.

ஆம். அவர்கள் பின்னால் நான்கைந்து பாதுகாவலர்கள் கையில் தீப்பந்தங்களைப் பிடித்தவாறு முன்னோக்கி வர.

அவர்கள் பின்னே. பட்டாடை உடுத்தி. கம்பீர தோற்றத்துடன். முருக்கிய மீசை. கையில் குறு வாள். இடையில் போர் வாள். தலையில் மணியும் பொன்னும் வைரம் வைடூரியம் என கடாரம் பவளந்தீவுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆபரணங்கள் அழகு படுத்த அலங்கரித்தது மாமன்னர் அருள்மொழிவர்மனின் கிரீடத்தில்.

முன்னே காரிருள் வண்ணத்தில் இரு குதிரைகளும். அதற்க்கடுத்தாக அதே வண்ணத்தில் இரு குதிரைகள் என நான்கு குதிரைகள் பூட்டிய பல்லக்கில் மாமன்னர் அமர்ந்து வர. ராஜ பல்லக்கு முழுவதும் பட்டுத்தூரிகையாள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பல்லக்கின் மேல் பக்கம் திறந்தே இருந்தது.

அதற்கு பின்னராக பத்துக்கும் மேற்ப்பட்ட வீரர்கள் கையில் வேல் வாள் கம்புகளுடன் மற்றும் வீரப் புலிக்கொடியேந்தி வந்து கொண்டிருந்தனர்.
சுற்றிலும் புலிக்கொடி ஏந்திய வீரர்கள்.

பல்லக்கின் முகப்பு இருபக்கமும் ராந்தல் விளக்குகள் எரிந்துவர. மங்கலான வெளிச்சத்தில் பிரகாசமாக காட்சி தந்தார் ராஜராஜர்.

ஒருவழியாக அந்த பல்லக்கு ஆதூரச்சாலை வாயிலை வந்தடைய.
முன்னே வந்திருந்த ஊழியர்கள் மாமன்னர் இயக்குவதற்காக முக்காலி ஒன்றை எடுத்து வைக்க. அதில் குத்துக்காலிட்டு இறங்கினார் மாமன்னர்.

சுற்றிலும் சூழ்ந்துகொண்டிருந்த தேசத்து தளபதிகளை பார்த்து விட்டு. புன்னகையுடன் கூறினார்.

நான் வரமாட்டேன் என்று நினைத்திருப்பீர்கள் போலும். இந்த தேசம் நிறைய மனிதர்களை பாடங்களாக மாற்றியுள்ளது.

அதில் கற்றுக் கொண்டவர்கள் சிலர் தான்.அவ்விதத்தில் அடியேன் நானும் ஒருவன்.சொன்ன வார்த்தையை மறவாமல் வந்துள்ளேன்.

வாருங்கள் உள்ளே செல்லலாம் என்கூறி.
மருத்துவச் சாலையில் உள்ளே செல்ல.

எதிரே ஒரு ஜோடி கதவுகள் திறந்திருக்க. சிறிய கோட்டை அளவிலான பெரும் கற்களைக் கொண்டு வேயப்பட்ட உயரமான சுவர்கள் கொண்ட இந்த இடம் அடர்த்தியான மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுந்தர வதனக் கோட்டை என்றே சோழ ராஜ்ஜியத்தில் அழைக்கப்பட்டது.

வாயிலின் முன்னிருந்த கதவுக்கு பின்னால் இருந்த வழியாக நேரே சென்றார் அரசர் ராஜராஜன். அவரைத் தொடர்ந்து இளவரசன் ராஜேந்திரன் இளவரசி அங்கம்மா, நல்லப்ப உடையார் ஆதித்தன் பழுவூர் நக்கன் என பின் செல்ல.காவல் வீரர்கள் வாயிலுக்கு அருகிலே நின்று கொண்டனர்.

அங்கம்மா தேவி தனது தந்தைக்கு அருகிலையே நடந்து செல்ல. இறுதியில் சூடாமணி விகார துறவி‌யின் அறையை அடைந்திருந்தனர்.

துறவியைக் கண்ட பேரரசர். சற்று பதட்டமடைந்தவராக.

ஐயா பௌத்த துறவி அவர்களே என்றழைக்க.

ஓய்வு மெத்தையில் படுத்திருந்த அந்த முதிர்ந்த துறவியிடம் அசைவில்லை.

தன் அருகே பலம். பராக்கிரம. புத்தி. வெற்றி கொண்ட சுந்தரரூபன், மகா சக்கரவர்த்தி மாமன்னர் ராஜராஜன் நின்றுருப்பதை.

துறவியின் துணையாள் ஒருவன் துறவியின் காதில் கிசுகிசுக்க..

மகாராஜா அருள்மொழிவர்மர் வந்துள்ளார் என்று துணையாள் சொல்ல.. ராஜாவின் பெயரைக் கேட்டவுடன்.புத்துயிர் பெற்றது போல் துறவியின் கண்கள் மெதுவாக திறந்தது.

மாமலையைக் காட்டிலும் வலிய தேகத்தான், சோழ தேசத்தின் ஜாம்பவான். சாட்சாத் மாமன்னர் அருள்மொழி தன் அருகில் நிற்பதைக் கண்ட துறவியின் கைவிரல்கள் படபடக்க. விரிந்து கிடக்கும் சமுத்திரத்தைக் கண்டது போல இமைகள் விரிய பார்த்தார்.

அசைவற்ற தனது கைகளை தூக்கி மாமன்னருக்கு வணக்கம் சொல்ல முற்பட்ட வேளையில்…

அருகில் நின்றிருந்த மகா ராஜாதி ராஜாவான அருள்மொழி வர்மர்.

துறவியின் கைகளை ஒரு சேர தனது இரு கரங்கராலும் அனைத்து. அவர் அருகில் உட்கார்ந்து கொண்டார்.

எழுந்திருக்க மனம் உந்தினாலும். உடல் ஒத்துழைக்க மறுத்தது. எண்ணங்கள் மின்னல் வேகத்தில் செயலாற்றினாலும் வார்த்தைகள் மழுங்கிப் போனது.

கண்களால் துளாவி நன்றியை தெரிவிக்கையில். விழித்திரையில் நீர் பெருக்கெடுத்தது துறவிக்கு.

பேச முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும் மாமன்னருடன் பேச வேண்டும் என்று மட்டும் மனது அடித்துக் கொண்டது.

மாமன்னரும் இதை உணர்ந்திருக்க வேண்டும்.

பௌத்த மதத்தின் உயர்ந்த நிலையாகிய போதிஸத்துவ ஆசார்ய அரஹந்த மடத்துறவி எனப் பெயரெடுத்த சூடாமணி விகார துறவி‌யின் இந்த நிலையைத் கண்டு மனம் வருந்தி போனார் மாமன்னர்.

அருகில் இருந்த ராஜேந்திரன் தந்தையே.
துறவியின் விரல்களை அசைவதைக் கண்டால். அவர் தாங்களிடம் எதையோ கூற விரும்புவது போல் தெரிகிறது என்று கூற.

நின்றுகொண்டிருந்த மாமன்னர் படுத்திருந்த துறவிக்கு அருகில் இருந்த மரப்பலகையின் மீது அமர்ந்தார்.
துறவியின் ஆஸ்தான சீடன் மன்னருக்கு அருகில் வந்து.
மாமன்னா. தலைமைத் துறவி தாங்களிடம் பேச நினைப்பதாக இளவரசர் கூறியது உண்மைதான்.
நேற்று முன்னிரவு கூட தானாக பேசிக்கொண்டிருந்தார்.

ஈழத்து அரசன் ஐந்தாம் மகிந்தன். தன் நாட்டு மக்களையும் குறிப்பாக புத்த பிக்ஷுக்களை‌ பலவாறாக கொடுமைப்படுத்தி வருவதாகவும். அதுபற்றியே தாங்களிடம் விவாதிக்க வந்து பின்னர் உடல்நலம் குன்றி இங்கு வந்துவிட்டார் என்றும். இவ்விடயத்தை மன்னரிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என திரும்ப திரும்ப கூறி வந்தார்.
மேலும் வடக்கில் கங்கை தெற்கில் ஈழம் மேற்கில் மகோதை கிழக்கில் கடாரம் என நாப்பகுதிகளையும் சோழக்குடையின் கீழ் கொண்டு வந்துள்ள மாமன்னர் ஈழத்தின் அநியாயங்களை தட்டிக்கேட்க உடனடியாக வேண்டும் என்று கூறியதாக அந்த சீடன் கூற.

கேட்டுக் கொண்டிருந்த மாமன்னர்.
ஒரு கணம் மூச்சை உள்ளிழுத்து கையை தரையில் ஊன்றி எழுந்தவராக.

படுத்திருந்த துறவியின் கைகளைப் பற்றி. தனது முகத்தருகே கொண்டு சென்று ஒத்திக்கொண்டார்.

சுற்றியிருந்த அனைவரையும் நோக்கிய பின்னர்.
தான் அணிந்திருந்த கதிர் மாலை ஒன்றை கழற்றி துறவியின் சீடனிடம் கொடுத்து.

இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
துறவிக்கு தக்க வைத்தியம் பார்த்து உடல் தேறிய பின்னர் எனக்கு அறிவியுங்கள்.
கண்டிப்பாக இவரிடம் நான் பேசவேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன.
அதற்குள்ளாக உங்களுக்கு ஆபத்து ஏதும் நேரிட்டால் இந்த கதிர் மாலை உங்களைக் காக்கும் என்று கூறி.

ராஜேந்திரனைப் பார்க்க.
தந்தையே உங்கள் பணி செய்வதே எம் பாக்கியம்.
யாம் செய்ய வேண்டிய பணி என்னவென்று கட்டளையிடுங்கள். நிறைவேற்ற காத்திருக்கிறேன் என்று தெரிவிக்க.

ராஜேந்திரனின் தோளில் கைபோட்டு தட்டிக்கொடுத்த அருள்மொழி வர்மன். வெளிப்புறமாக நடக்க.
அவர் பின்னால் ராஜேந்திரன் வர. இவர்களைத் தொடர மற்றவர்கள் எத்தனிக்க.

திரும்பிய அருள்மொழி அவர்களை நோக்கி. இங்கேயே இருக்குமாறு சைகையால் சொல்ல.

புரிந்துகொண்ட ஏனைய மற்றவர்கள் துறவியின் அறையிலேயே நின்றுகொண்டனர்.

ஆனாலும் ராஜேந்திரனின் தோளில் இருந்து கையை எடுக்கவில்லை மாமன்னர்.

அந்த அறையை விட்டு வெளியே வந்த இருவரும் ஆதூரச்சாலையின் வாயிலை வந்தடைய.

வாயிற் கதவிற்கு இருமருங்கிலும் ஈட்டியுடன் காவலர்கள் பலர் நின்றிருக்க.
மன்னரையும் இளவரசனையும் கண்டவர்கள்.

திடுதிடுவென வாயிலில் வந்து நின்று கொண்டனர்.

அவர்களில் ஒருவனை சைகையால் அழைத்த மாமன்னர்.
அவன் அருகில் வந்து இடுப்பில் இருந்து வண்ணங்சீலையினாலான ஒரு துணிச் சுருளை கொடுத்து விட்டு திரும்பாத அப்படியே பின் சென்றான் ஒரு பக்கம் பிடித்திருந்த ஈட்டியுடன்.

ராஜேந்திரா.
இந்த ஓலையைப் படி என்று காவலன் கொடுத்த துணிச்சுருளை கொடுக்க.

தனது வலது கரத்தால் வாங்கிய இளவரசன் இடது கரத்தின் உதவியோடு சுற்றியிருந்த நூற்கண்டினை திரித்து பிரித்தபோது.

வண்ண வேலைப்பாடுகளுடன் வந்துள்ள அந்த ஓலைச் செய்தியானது மேலே சிங்கமுக லச்சினை பொறிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்ததும் இது ஈழத்தில் இருந்து வந்துள்ளதை கண்டுகொண்டான் இளவரசன் ராஜேந்திரன்.

அன்புள்ள மாமன்னருக்கு..
புண்ணிய பூமி பூவனின் அநேக வணக்கங்கள்.
தற்போது தக்கோலத்தின் மாப்பாளத்தான் தளபதி ஒருவர் படையில் உள்ளேன்.
சில சமயங்களில் ஈழத்து அரசன் மகிந்தன் மற்றும் அவனது விஜயம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

ஈழப்போரின் இறுதிப்போருக்கு தயாராக இருக்கவும்.

தங்களின் படைத்தளபதி
பூவன். (ஒப்புமை)
வலங்கை வெள்ளக்கார சேனை.

படித்த ராஜேந்திரன் பதைபதைத்து தந்தையை நோக்க…
அருள்மொழி வர்மன் மறுபடியும் ராஜேந்திரனின் தோளில் கைபோட்டு உள்ளே செல்ல திரும்பினான்.
அப்போதுதான் கவனித்தான் ராஜேந்திரன் அந்த வீரர்களை.
இதற்கு முன் இப்படி ஒரு பிரிவு படையைக் கண்டது போல தெரியவில்லை.
சற்று வித்தியாசமாக இருந்தனர் இவர்கள்.
ஆனால் முரட்டு ஆட்களாக பெருமீசையுடன் காட்சியளிக்க.
குழப்பத்துடனே உள்ளே சென்றான் இளவரசன் ராஜேந்திரன்.

முந்தைய தொடர்: பாளைய தேசம் – 17: இளவரசன் ராஜேந்திரனின் பதிகப் பாடல்