2019 பொதுத் தேர்தலின் முடிவானது எதிர்கால பங்குச் சந்தையின் ஏற்ற இறக்க பயணத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில்களிலும் நிஃப்டி ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன, இதன் காரணமாக கடந்த கால முதலீட்டுகளில் ஏற்றத்தாழ்வு நிலையினை கண்டு நீண்டகால போர்ட்ஃபோலியோவை உருவாக்க ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது .ஆட்டோமொபைல் , நிதி, வங்கி மற்றும் மூலதன பொருட்கள் சந்தையில் சுழற்சிகளும், நீண்டகால நோக்கில் சிறப்பாக செயல்படவும் வாய்ப்புள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் தகுந்த ஆலோசனைகளின் பேரில் தரமான பங்குகளில் முதலீடுகளை ஆரம்பிக்க இது சரியான தருணமாகும்.

இந்த வாரத்தில் பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, எஸ்பிஐ, டைடன், ஏசியன் பெயிண்ட், மரிகோ, கல்பாரு பவர், வேதாந்தா நிறுவனங்களின் ஆண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. அதன் பொருட்டு இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க விற்க அனுபவசாலிகளின் ஆலோசனைகளை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லது.

அதற்கு முன் கடந்த வாரத்தின் முக்கிய அம்சங்களான. இந்த நிதியாண்டு 2019ல் நாட்டின் மொத்த கடன் வளர்ச்சியானது 0.8% உயர்ந்து 12.2 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொழிற்துறையானது 6.9% வளர்ச்சியைக் கண்டுள்ளது,
இந்த வளர்ச்சியானது 8.2% பெரிய தொழிற்சாலைகளின் வளர்ச்சியினால் அதிகரித்துள்ளது, MSME எனப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 0.7% வளர்ச்சி கண்டுள்ளது.

ஆறாவது காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், தேர்தல் கெடுபிடிகளால் இந்தியாவில் விஸ்கி, ரம், பிராண்டி, ஜின் மற்றும் ஓட்கா ஆகியவற்றின் விற்பனை வணிக வளர்ச்சி கடந்த நிதி ஆண்டினை ஒப்பிடுகையில் 3% மட்டுமே உயர்ந்துள்ளது.

2008ஆம் ஆண்டிற்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான ஆண்டின் முதல் காலாண்டில், அதிகப்படியான முதலீடாக இந்த ஆண்டில் ரூபாய் 17682 கோடி ரூபாய் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என குஷ்மேன் & வேக்ஃபீல்ட் என்கிற நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
இதன்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் துறையில் வணிக வளாகங்கள், மருத்துவத்துறை கட்டுமானம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடும் செய்வது அதிகரித்துள்ளதால். ரியல் எஸ்டேட் துறை நம்பிக்கையான முதலீடுகளை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் கீழ்க்கண்ட பங்குகளை வாங்குவதற்கு பங்குச்சந்தை நிபுணர்களால் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

எஸ் பி ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம்:- பரிந்துரைக்கப்படும் விலை ரூ. 635.
உத்தேசிக்கப்பட்ட இலக்கின் விலை 800.
உத்தேசிக்கப்பட்ட காலங்கள் குறிப்பிடப்படவில்லை.

மகிந்திரா அண்டு மகிந்திரா பினான்சியல் சர்வீஸ்:-
பரிந்துரைக்கப்படும் விலை 417
உத்தேசிக்கப்பட்ட இலக்கின் விலை 500
உத்தேசிக்கப்பட்ட காலங்கள் குறிப்பிடப்படவில்லை

டாட்டா ஸ்டீல்:-
பரிந்துரைக்கப்படும் விலை 536
உத்தேசிக்கப்பட்ட இலக்கின் விலை 635 உத்தேசிக்கப்பட்ட காலங்கள் குறிப்பிடப்படவில்லை

பயோகான்:-
பரிந்துரைக்கப்படும் விலை 620
உத்தேசிக்கப்பட்ட இலக்கின் விலை 730
உத்தேசிக்கப்பட்ட கால வரையறைகள் குறிப்பிடப்படவில்லை

சிங்கீன் இன்டர்நேஷனல் லிமிடெட்:-
பரிந்துரைக்கப்படும் விலை 612
உத்தேசிக்கப்பட்ட இலக்கின் விலை 715
உத்தேசிக்கப்பட்ட கால வரம்புகள் குறிப்பிடப்படவில்லை.

ஆக்சிஸ் வங்கி:-
பரிந்துரைக்கப்படும் விலை 760
உத்தேசிக்கப்பட்ட இலக்கின் விலை 880
உத்தேசிக்கப்பட்ட கால வரம்புகள் குறிப்பிடப்படவில்லை.

அல்ட்ராடெக் சிமெண்ட்:-
பரிந்துரைக்கப்படும் விலை 4590
உத்தேசிக்கப்பட்ட இலக்கின் விலை 5300
உத்தேசிக்கப்பட்ட கால வரம்புகள் குறிப்பிடப்படவில்லை.

ட்ரெண்ட் லிமிட்டெட்:-
பரிந்துரைக்கப்படும் விலை 360
உத்தேசிக்கப்பட்ட இலக்கின் விலை 415
உத்தேசிக்கப்பட்ட கால வரம்புகள் குறிப்பிடப்படவில்லை.

சர்வதேச வணிகத்தில் அமெரிக்க சந்தையானது அந்நாட்டின் மத்திய வங்கிக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் மீதான நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டதன் மூலம் கடந்த வாரத்தில் ஃபளாட்டாக வர்த்தகமாகியது.

இந்திய பங்குச் சந்தையான நிஃப்டி 11750 புள்ளிகளை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த நிலை முந்தைய செப்டெம்பர் 2018 இல் காணப்பட்டது.
வங்கி நிஃப்டி எதிர்கால பங்குச்சந்தையின் குறிப்பிட்ட செயல்களால் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட பிளாட்டாகவே இருந்தது.

ஓஎன்ஜிசி :-

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த நிறுவனம் தனது13,994.91 கோடி கடன்களை செலுத்தியுள்ளது, அதன் கடன்கள் மார்ச் 2018 ல் 25,592.21 கோடி ரூபாயாக உள்ளது.
இது டிசம்பர் மாதத்தில் 4,022 கோடி ரூபாய்க்கு பங்குகளை பைபேக்கில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.