1

It's Within Her Heart" Oil painting by Phil Broad | Artfinderஉங்கள் செயலை தாங்கும்

சில சொற்களை

தருவேனா தெரியாது

செயலின் தோற்றங்களை

சொற்கள் சோர்வடையாமல்

சேர்க்கலாம்

உளத்தூய்மையிடம்

சரணடையும் சொற்கள் உயிராற்றலின் செயலை தாங்கும்

வேறு கதி இல்லை

சொற்கள் செயலின் வழியே

சொல் தன் கனவை

அடைகிறது

உன் செயலை தாங்கும்

சில சொற்களை

தருவேனா தெரியாது

செயலின் தோற்றங்களை

சோர்வடையாமல்

சேர்க்கலாம் சொற்கள்

உளத்தூய்மையிடம்

சரணடையும் இருமுனை

கற்பனையில் நிகழ்ந்துவிட்டதாக

காலமும் கடந்திருக்கும்

என் உயிராற்றல்

செயலை தாங்கும்

எண்ணங்களோ காலை வேளை வானம்பாடிகளாக விண்ணை நோக்கி மேலெழும்பும் நானும் வாழ்க்கைக்கும் மேல் பறந்து திரிவேன்.

2

ஒரு நோய் மேற்கொள்ளும்

உத்தியை யோசிக்கிறேன்

ஒரு நோயே இன்னொரு நோயை குணமாக்கும் வெற்றுநிலையை

சொர்க்கத்தை சொற்களை

தவிப்பை

~

 

3

வெப்பம் தீர்ந்த நண்பகல்

கரையை கடக்கிறது

முழுதும் அடங்கியதாக

காட்சியளிக்கிறது கடல்

அலையோ மீண்டும் தொடங்குகிறது

தன் வேறு வண்ணங்கள்

படர நதியை

பாவனைகளை சேர்த்துக்கொள்ளும் கரை

மொத்தமாகவே

விடியலில்

தன் ரேகையை

கடக்க கடக்க

நிழலில் கரையும்

எல்லாம் வல்ல இருளாகும்

~

 

4

What Does It Mean When You Dream About Someone: The Real Truthநீ ரகசியம்

நான் பரம ரகசியம்

என் வாக்குறுதி பிரியம்

கனவுகளில் கடவுள்

கட்டப்பட்டிருக்கிறார்

என்னிடமே

ஏதோ ஏதோ சொல்லி

என் கத்திகளால்

எனக்கே எதிரான

ரகசியங்களோடு சந்தித்தேன்

தூய துயரில்லை

 

~

5

உனக்கும் எனக்கும் ஒப்புதலற்று

முடிகிறது எல்லை

அழிகிறது நகரம்

எங்கேயும் வாழ்வில்லையென

ரகசியமானேன்

புதிரென உயிரும் தப்பிக்கிறது

இப்போது வரை பூமி வசிக்கிறது

ரகசிய இடத்தில்

~

6

அழுவதற்கான பாலம் ரகசியமானது

அங்கிருந்து கடவுளை நோக்கி

அழலாம்

அறிந்த ரகசியத்தை

உன் அனுபவத்தை இன்னொருவன் சொல்வதால்

அவன் நீயல்ல

அவனும் கூண்டு நீயும் கூண்டு

உங்கள் முன்னே சுற்றி வருகிற கடவுளை கூண்டுக்குள் கற்பனையை கண்டால் குதிக்க சொல்லி சொன்னதே அந்த ரகசியம் தான்

நீயும் குதிக்கிறாய்

அது யாவருக்கும் ரகசியம்

எவ்வளவு நேரமெடுத்து

நுண்ணியமாக காட்சி தோன்றினாலும்

உனக்கு மட்டுமேயான வெளிப்படை

கடவுளது

உடல் இல்லாத இடத்தில்

உயிர் உள்ள சத்தம்

அறிந்த ஒன்றல்ல

நீ நினைப்பது போல்

~

8

Calm Angry Frustrated- Expressive Painting By Shreya Kshatriya, Paintings  Fine Art for Sellஎல்லாமே முடிந்துவிட்டது

திறக்கக்கூடிய கதவையும் சற்றே தொட்டால் மலை உடையும்

குருவிகளும் மறைந்துவிட்டது

எதற்காக கூவுமது

நிச்சயமாக மனிதனுக்கு தெரியாது

கற்பித்து கொள்ளலாம்

கதைகளில் வரும் அகாலம்

காணாமல் போன ஜீவராசிகளை

பற்றி சிறிது தவிப்பினும்

தன்னை தானே புணரும்

வேறெதேவும் புதியதாக

தோன்றாதது

தேவைகளுக்கு

அலைய முடியவில்லை

மனவெளிச்சோலை

தவிப்பதை தவமென்கிறது

என்னோடு

எல்லாமே தொடங்கிவிட்டது

~

9

சூரியனை ஆதவனாக்கிய

மாயம் எனக்கில்லை

பெரிய வெளிச்சம் எதையும்

தருவதாக எனக்கு தெரியாது

பல்வேறு இடங்களில் இருந்து

வரும் பகலின் வெளிச்சமற்ற பகுதிகள் எனக்கு சவுகரியம்

சாயங்காலத்திலே எனது பருவம்

தொடங்குகிறது

வார்த்தையை யோசித்து

பேசுவதில்லை

கையும் காலும் அசாதாரணமாக பெறும் தைரியம்

நினைத்ததை முடிப்பேன்

வானத்தில் நட்சத்திரம்

தருவது போல் குறைந்த ஒளியே என் நன்மை

அதை விட பெரிய நிழலில்

ஒளி பகிரும் சந்திரர்கள் மோதும்

அந்தியின் வாசலில்

எனது

பகல் தன் பெயரை இழந்துவிட்டது

~

10

காலத்தை மாற்றிய காதல்கள்

விசித்திரமானவை

உள்ளன்பு புரியும் நேரம்

நீ உன்னையே மறந்திருப்பாய்

சிறிய சிறிய ரகசியங்களும்

பெரிய பெரிய மோதலும்

கேட்கப்படாது சேரும்

மேகத்தில் நீர் நீந்தும்

இங்கே புதிதாக மலர்

வருவது போல் தெரிகிறது

நான் வெளியேறிவிடுகிறேன்

 

~

11

நொடிக்கு நொடி அலைவது

அதிகமாகிறது

ஒரு நாடே கவிதை எழுதுகிறது

கைகளில் சேர வேண்டிய

பொருளோ நழுவி

உடைந்து கொண்டேயிருக்கிறது

என்னை நானே

உயிர்ப்பிக்க முடியாத

ஊனம் உயிரை அழுத்துகிறது

திருடன் போல் வரவேண்டிய மரணத்தை வீட்டுக்கு

வீடு அழைக்கிறார்கள்

பொய்களும் திருடப்படுகிறது

 

~

12

உடலை நீ தேர்ந்தெடுக்கவில்லை

வளர்கிறது அது

உடல்கள் பல முறை

வேறொன்றாக

நீ விரும்பும் உடலாக பாவனைப்படுத்துகிறாய்

வார்த்தைகளை எண்ணுகிறாய்

சொல்லப்பட்டவையே நீ

சொன்னவையை சொன்னவர்

கேட்பவர் கேட்பதை

 

~

13

Playin' the Same Game - song and lyrics by YUNGMORPHEUS | Spotifyமகிழ்ச்சி

முழுதாக பாடாத பாடல்

நா தடுக்கும் சொல் வராது

மந்தமாகவே கேட்கும்

அழிந்துவிடும் சப்தநாடி

இப்போதும் தனியே செல்லும்

எனக்கு மட்டும் கடவுள்

 

~