அன்புடன் திருவிழா அமைவுற எடுத்து
திருந்திய கதவம் திறனுடன் திறந்து
மறைந்த பாக்களை புற்றினில் கண்டு
மறையோர் புகழ இமையோர் வியக்க
இவ்வுல கெங்கும் இசைப்பா தந்த
திருமுறை கண்ட பெரும் புகழ்ச் சோழ! (ரா. நாகசாமி) என சோழ மண்டல சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை வரலாறாக பதித்து வழங்குகிறது இந்த நெடுந்தொடர்)

……………………..

அத்தியாயம்  1

*காப்பு கட்டுதல்*

…………………………………..

21ம் நூற்றாண்டின் இன்றைய இன்டர்நெட் காலத்தில் பூவுலகின் ஏழு கண்டங்களையும்  கண நேரத்தில் கண்டு ரசித்து.  நவநாகரீக கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு  புதியதொரு சந்ததியராக பரிணாமம் பெற்றிருக்கும் நாம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கால ஓட்டத்தில் பின்னோக்கிப் பயணிக்க தாங்கள் தங்கள் சுற்றமும் சூழ வருகை தந்து பெரியோர்களின் ஆசிர்வாதங்களோடு இந்த முற்க்காலப் பயணம்சிறக்க  அன்புடன் அழைக்கின்றோம்.

காலச்சக்கரம் சுழல்ச்சுழல பற்பல வரலாற்று இடங்களையும். மன்னர்களையும் போர்களையும் இன்னம் பல மக்கள் வாழ்க்கையையும் ஆச்சரியமாக கண்டுகளித்து கிபி 1010 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.. சோழ சாம்ராஜ்யத்தை பற்றி ஆயிரமாயிம் காவியங்களும் கதைகளும்‌ எழுத எழுத. வரலாறு என்னவோ மறுபடியும் நம்மை அந்த தேசத்திற்க்கே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது…..


இங்கு  அலைபேசி கோபுரமில்லை அதனால் தொலைபேசி தொல்லைகளில்லை.. மின்கம்பங்களில்லை அதனால் மின்விளக்குகளும் மின் சாதனங்களுமில்லை.. தார்ச்சாலைகளில்லை யதனால் பேருந்து சீறுந்து வாகனங்களில்லை. இணையவழிச் செய்திகளோ இனி எதுவும் கிடைக்கபெறாது நாம் வந்துள்ள இக்காலத்தில் தஞ்சை பெருவுடையார் அரண்மனையிலிருந்து வடமேற்க்காக நான்கு காத தூரத்தில் அமைந்துள்ளது கங்கைகொண்ட சோழபுரம். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ஒரு காத தூரம் மேற்கு நோக்கி பயணித்தால் வருகிறது  முற்கபுரி எனும் பெயரால்  சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறிய வன தேசம் இந்த உடையார்பாளையம் சிற்றரசு.

“மன்னன் முதல் வானரெலாம் வந்து தொழ வரங்கொடுத்து
முன்னவனெக் காலுமமர் முற்கபுரம்” (திருநாட்டு58)

என வீரத்திற்கும், தியாகத்திற்கும்,கல்விக்கும் பெயர் பெற்று நற்புகழை நிலைநாட்டிய முற்கபுரி எனும் பெயர்கொண்ட  புண்ணிய பூமியாக திகழும் சோழ மண்டலத்தின்  அமைந்துள்ள இவ்வூர். பூலோக சொர்கபுரியென வந்து செல்வோர் வழங்குவதுண்டு.. சிவனின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசரெனவும் தமிழில் பயறனிநாதரெனவும் வழங்குவதால் இவ்வூர் பயறனிநாதவூர் எனவும்‌ அழைக்கப்பட்டுகிறது.

வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழமண் டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னி ராயிரமும்
திந்திறல் வென்றி தண்டார் கொண்ட
ராஜகே சரிக் கோவே உந்தன்
வாளொளி படரா நாடும் உளதோ?
( ரா. நாகசாமி கல்வெட்டு ஆராய்ச்சியாளர்)

என பிற்காலத்தில்  பார்போற்றும் தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்த செயங்கொண்ட சோழன்  என பெயர் பெற்ற முதலாம் ராசராசன்  ஆளுமையின்கீழ் அமையப்பெற்ற மேற்க்குப் பகுதி எல்லைநகரம் இது.
இவ்வூர் சிற்றரசர்கள் கச்சியென்னும் அடைமொழியையுடையுடனும் காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப்பெயரையும் உடையவர்களாவர். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சீபுர வல்லவரையன் குல பாளையக்காரகளாக இருந்தவர்களாதலால் கச்சி என்னும் அடைமொழி இவர்களுடைய பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்பட்டது.. பல வீரர்களுக்குப் படைத் தலைவர்களாகவும் விஜயநகரத்து அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணை புரிந்து வந்தவர்களாதலால் இவர்களுக்கு “காலாட்கள் தோழ உடையார்” என்னும் பட்டப்பெயர்  ஏற்பட்டது. இது காலாட்களுக்குத் தோழராகிய உடையாரென விவரிக்கிறது.

 

(தொடரும்)