ஆசிய நாடுகளின் வர்த்தகத்தில், புதன்கிழமையன்று உலகளாவிய அளவில் அதிகமாக பத்திரங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டியதால் இந்திய சந்தையில் வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியது

மே 29 ம் தேதி இன்று நிஃப்டி 11,900 புள்ளிகளைகளோடும் சென்செக்ஸ் 47.14 புள்ளிகள் குறைந்து 39702.59 புள்ளிகளோடும் தொடங்கியது.

காலை வர்தகத்தில் 418 பங்குகள் முன்னேற்றம் அடைந்தும், 418 பங்குகள் சரிந்தும், 29 பங்குகள் விலை மாறாமலும் உள்ளன.

இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI), கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக 1% குறைந்து 44.37 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்தது. தொலைதொடர்பு நிதி, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பிற துறைகளிலும் முதலீடுகள் குறைந்துள்ளன.

ஜீ எண்டர்டெயின்மெண்ட், வேதாந்தா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் காலை தொடக்க வர்த்தகத்தில் வீழ்ச்சியை கண்டு பயணிக்கிறது. முறையே ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், கெய்ல், ஐசர் மோட்டார்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, எல் அண்ட் டி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.75 ஆக குறைந்துள்ளது.மேன் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சியை கண்டுள்ளது

மேன் இன்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் பங்குகள் 8.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. இது, அக்டோபர் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதிகபட்ச இழப்பாகும். விகித அடிப்படையில் 61.2 சதவிகிதமாக குறைந்துள்ளது.

சன் பார்மா நிறுவனம் நான்காவது காலாண்டில் அதிக வருவாயை எட்டியுள்ளது.

இந்தியாவின் விநியோக நிறுவனத்தினை மாற்றுவதன் காரணமாக, 1,085 கோடி ரூபாய் அதன் வருமானம் உயர்ந்துள்ளதாக சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 1,011 கோடி ரூபாயாக இருந்தது. இறுதி காலாண்டில் நிகர லாபம் ரூ. 636 கோடியைத் கொண்டதாக கூறியுள்ளது. இதன் எதிரொலியாக சன் பார்மாவின் பங்குகள் 0.42 சதவீதம் அதிகரித்து 414.65 ரூபாயாக உயர்ந்துள்ளது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், காடிலா ஹெல்த்கேர், ஹவேல்ஸ் இந்தியா, இப்கா ​​லேப்ஸ், என்.பி.சி.சி, பிஎஃப்சி, பவர் கிரிட், ரிலையன்ஸ் பவர், டி.டி.கே ப்ரெஸ்டிகே, டாட்டா டெலிசேவர்ஸ் என 600க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது .

ஜெயபிரகாஷ் அசோசியேட் நிறுவனம் நான்காவது காலாண்டில் முடிவின்படி 350.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

என்எம்டிசி நிறுவனம் மார்க்ஸுடன் முடிந்த நான்காவது காலாண்டில் அதன் வருவாய் 31.4 சதவிகிதம் உயர்ந்து 1453.8 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மிண்டா கார்ப் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவின்படி அதன் வருவாய் 1.1 சதவிகிதம் உயர்ந்து 39.1 கோடியை லாபமாக ஏற்று உள்ளதாக தெரிவித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி 264 .4 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ளதாக நான்காவது காலாண்டு முடிவில் அறிவித்துள்ளது .

கரூர் வைஸ்யா வங்கி : சென்ட்ரல் வெல்ட் மேனேஜ்மென்ட் உடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 3.7 சதவீத சரிவைச் சந்தித்தன.
மே 29 ம் தேதி 52 வார விலை அதிகரிப்பால் பிரஸ்டீஜ் எண்டர்ஸ் ப்ராஜெக்ட் பங்குகளின் விலை 290.55 ஐ தாண்டியது. குறிப்பிட்ட இந்த பங்கானது 347 வரை உயரும் என பல்வேறு வணிக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன

டாபர் இந்தியா. கோத்ரெஜ் கன்ஸ்யூமர். மாருதி சுசூகி இந்தியா.குயும்மின் இந்தியா. இந்திரபிரஸ்தா கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அடுத்த சில நாட்களில் விலை ஏற்றத்தை உடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு.
இங்கு வழங்கப்படும் பங்கு சந்தை பற்றிய ஆலோசனைகள் பல்வேறு வணிக நிறுவன அறிக்கைகளின் தொகுப்பாக வழங்கப்படுகிறது. பங்குச் சந்தை முதலீடு அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் எந்த ஒரு நிகழ்விற்கும் உயிர்மை.காம் பொறுப்பேற்காது.