இந்தியப் பங்குச்சந்தையின் நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 35புள்ளிகள் உயர்ந்து 11462 புள்ளிகளில் நிலைகொண்டு முடிந்தன. மேலும் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து திங்கள் கிழமை இறுதியில் 38095.07 புள்ளிகளாக வர்த்தகம் ஆகியது.
11,473.85 புள்ளிகளில் உயர்ந்த குறியீட்டு எண் பிறகு 11,530.15 புள்ளிகளாக உயர்ந்தது. ஆனால் காலை வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தக்க வைத்துக்கொள்ளும்வகையில் உயர்வடைந்த குறியீட்டு எண் நிஃப்டி மதியத்தில் 11,412.50 ஆக குறைந்தது. வர்த்தகத்தின் இறுதியில் இழப்புக்களை ஈடுசெய்து 35.30 புள்ளிகள் உயர்ந்து அதிகபட்சமாக நிஃப்டி 11,462.20 புள்ளிகளை நெருங்கி நேற்றையதினம் முடிவடைந்தது.
நீண்டகால வர்த்தக அடிப்படையில். சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற கீழ்க்காணும் பங்குகள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏசியன் பெயிண்ட்:-
ஏசியன் பெயிண்ட் லிமிடட், 53% சந்தை மூலதனப் பங்குடனும் மற்றும் இந்தியா முழுவதும் 55,000 க்கும் மேற்பட்ட சில்லறை வியாபார நெட்வொர்க்குடன் வண்ணப்பூச்சு பிரிவில் மிகப்பெரும் தொழில் குழுமமாக வளர்ந்துள்ளது. 89% டெக்கரேட்டிவ் எனப்படும் அலங்காரப் பிரிவு வர்த்தகர்கள் இந்த நிறுவனத்தின் வண்ண பூச்சுக்களையே நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெஸ்லே இந்தியா லிமிடெட்:-
நெஸ்லே இந்தியா (என்ஐஎல்) இந்தியாவில் உடனடி நூடுல்ஸ் மற்றும் குழந்தை உணவுப் பொருட்களின் சந்தையின் முன்னோடியாகவும் உடனடி காபி மற்றும் சாக்லேட் பிரிவில் இரண்டாவது பெரும் நிறுவனமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் என்.ஐ.எல் பால் பொருட்கள் விற்பனையில் 45 சதவிகிதத்திற்கும் அதிகமாக பங்களிப்பு செய்கிறது.
எச்டிஎஃப்சி வங்கி:-
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி, அதன் நிதிச் செயல்திறன் மிகவும் வலு உள்ளதாக உள்ளது. கடன் அட்டை வணிகத்தில் மிகப்பெரிய சந்தையை உருவாக்கியிருக்கும் இந்த வங்கி. சில்லறை விற்பனை மற்றும் எதிர்பார்த்த அளவு கார்ப்பரேட் பிக்-அப்களை கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதால். இந்த வங்கிக்கு நற்பெயரை கொடுத்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்:-
சராசரியாக நாட்டில்10ல் 9 குடும்பங்களில் அன்றாடம் எச்.எல்.எல் தயாரிப்புகளை முப்பது பயன்படுத்துகின்றனர் நுகர்வோர்கள், இது இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயை பெருக்கும் சாத்தியத்தை வழங்குகிறது. மேலும் சந்தையில் அதிகப்படியான நிலையில்லா தன்மையை எதிர்கொள்ளும் விதத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் நிலைப்படுத்தப்பட்டுள்ளதால் நீண்ட கால அடிப்படையில் இந்தப் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்காமல் சராசரியான வருவாயை ஈட்டிக்கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
வர்த்தக செய்திகள்:-
எல் அண்ட் டி நிறுவனம் விஜே சித்தார்தா வைத்துள்ள மைண்ட்ரீயின் மொத்த பங்குகளை 5,030 ரூபாய்க்கு வாங்குகிறது. இது மைண்ட்ரீ சந்தையில் வர்த்தகமாகும் எண்ணிக்கையில் 33% பங்குகளாகும்.
செவ்வாயன்று நிகழும் வர்த்தக செயல்பாடுகள்:
மார்கெட் தொடங்கும் முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
மார்ச் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆறாவது தொடர்ச்சியான வாரமாக சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது. ஆனால் ஆனால் நிஃப்டி 50 இலாப புக்கிங் காரணமாக 11,500 புள்ளிகளில் நிலையடைந்துள்ளது.
ஆசிய வர்த்தகம் மேலேறியே பயணிப்பதால் நிஃப்டி கால் ஆப்ஷன் 11500 லிருந்து 11700 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 18 ம் தேதி நிஃப்டி 11,462.20 ஆகவும். பிவோட் தரவரிசைகளின் படி, சப்போர்ட் நிலை11,350.6 புள்ளியிலிருந்து 11,406.4 புள்ளிகளாகவும் உள்ளது. நிஃப்டி குறியீடு மேல்நோக்கி நகரும் பட்சத்தில் பங்குச்சந்தை நிபுணர்களால் நிஃப்டி 11,524.1 புள்ளிகளிருந்து 11,586 புள்ளிகள்வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டி வங்கி:-
நிப்டி வங்கி குறியீட்டு எண் மார்ச் 18 அன்று 214.65 புள்ளிகள் உயர்ந்து 29,596.10 ஆகவும். குறியீட்டிற்கான முக்கிய ஆதரவாக செயல்படும் முக்கிய பிவோட் நிலை, 29,367.86 புள்ளிகளாகவும் அடுத்தடுத்து 29,139.63 ஆகவும் உள்ளது.
வெளிநாட்டு முதலீடு:-
நேற்றைய தினம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1,822.99 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். உள்நாட்டு நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ. 1,268.91 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: டிசம்பர் 28, 2017 மற்றும் ஆகஸ்ட் 11, 2018 ஆகிய இரண்டிற்கும் ஒப்பந்தங்களும் குறிப்பிட்ட ரிலையன்ஸ் தொலைதொடர்பு சொத்துக்களை விற்பனைச் செய்வதற்காக அறிவித்து முறையே, RTL, RITL (RCOM Group) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை ஒப்பந்தம் செய்யப்பட்டன. அதன்படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உச்சநீதிமன்ற உத்தரவின்படி எரிக்சன் நிறுவனத்திற்கு 458 கோடி ரூபாய் செலுத்தியது.
ஆர்த்தி இன்டர்ஸீஸ்:-
பங்குச் சந்தை பங்குகளின் QIP மூலம் நிதி திரட்ட அனுமதிக்கப்படுகிறது.
ஹோட்டல் லீலாவென்ச்சர்:-
கம்பெனி அதன் விருப்ப மற்றும் ஹோட்டல் ஆபரேஷன்ஸ் வியாபாரத்தை ஈடுகட்டும் அடிப்படையில் ப்ரூக்ஃபீல்டுக்கு விற்பனை செய்கிறது