ஐந்து ஆண்டு என்.டி.ஏ. ஆட்சியில், இந்தியா 1,20,000 ஹெக்டேர் முதன்மை காடுகளை இழந்தது, இது 2009 இல் இருந்து  2013 வரை அழிக்கப்பட்ட காடுகளை  விட 36% அதிகம் ஆகும்.

இதற்கு முரணாக, 2009 மற்றும் 2013 க்கு இடையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  இரண்டாம் முறை  ஆட்சியில் இருந்தபோது 77,963 ஹெக்டேர் அழிக்கப்பட்டது, 2004-08ல் 87,000 ஹெக்டேர் வெப்பமண்டல காடுகள் காணாமல் போனது.

சமீபத்திய தகவல்கள் மேரிலாந் பல்கலைக்கழகத்திலிருந்து கிடைத்தது, அது உலகம் முழுவதும் நடக்கும் வன இழப்புகளை  நாசாவின் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது.

இந்தத்  தரவுகளை  உலகளாவிய வன கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டது, இது அமெரிக்கவில் உள்ள அரசு சாரா  நிறுவனமான வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் World Resources Institute (WRI)  இன் ஒரு பிரிவு ஆகும்.

2014 ம் ஆண்டில் 21,942 ஹெக்டேர் பரப்பளவில் இந்திய வன மற்றும் மரம் இழப்பு ஏற்பட்டது, இது அடுத்த ஆண்டு 20,997 ஹெக்டேர் ஆக குறைந்தது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இது உயர்ந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டில் இது குறைந்து 19,310 ஹெக்டேராக இருந்தது.

யூ.பீ.ஏ ஆட்சிகளில் அதிகபட்ச இழப்பு 2008 இல் (20,702 ஹெக்டேர்), 2004 (19,166 ஹெக்டேர்) மற்றும் 2012 (18,804 ஹெக்டேர்) தொடர்ந்து பதிவாகியுள்ளது.

செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகக் கொண்ட கணக்கெடுப்பின்படி  இவ்வளவு பெரிய காடு இழப்புக்குப் பின்னணியில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. 2002 முதல் ஒட்டு மொத்தமாக 3,10,625  ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக 2016க்கு பிறகு அதிகம்.

“உலகளாவிய வன கண்காணிப்பு அமைப்பிடம் ஒரு தகவல் தொகுப்பு உள்ளது, இதில் 2001-2015 முதல் இழந்த வனப்பரப்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2016-2018 வரை எந்த தகவலும் இல்லை. நாங்கள் இதைப் புதுப்பிப்பதற்கான வேலைகளைச் செய்கிறோம்” என வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் (WRI) ஐ சேர்ந்த எலிசபெத் கோல்டுமேன் கூறினார்.

தகவல் தொகுப்பின்படி இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு வரை காடுகளின் இழப்புக்கு முக்கிய காரணங்களாக, சுரங்கத் தொழில், மரத் தேவைகள், விவசாய சாகுபடி போன்றவை இருந்தன.

காடுகளின் இழப்பினால், 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 101-250% ஆக அதிகரித்துள்ளது.

காடுகள் அழிவு என்பது நல்ல செய்தி அல்ல. நாம் பூமியின் சமநிலையை நமது சுயநலத்திற்காக பலிகொடுக்கிறோம். அதற்கான விலையை இப்போதே கொடுக்கத் துவங்கிவிட்டோம். பூமி வெப்பமடைதல், பருவநிலை மாற்றங்கள் என நாம் மட்டும் அல்ல அடுத்த தலைமுறையும் இதற்காகத் தண்டிக்கப்படும். இதை முன்னெடுக்க வேண்டிய அரசுகளே காடுகளை அழிப்பது தான் பெரும் வேதனை.