பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்களிலிருந்து விடுபடவே சானிடரி நாப்கின்கள் தயாரிக்கப்பட்டன, தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத காலத்தில் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதனால் தொற்று நோய்கள் ஏற்படுவதால் இதுலிருந்து பாதுகாக்க சானிடரி நாப்கின்கள் தயாரிக்கப்பட்டன. காலப்போக்கில் இதுவே பெண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகவும், சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் மாறின.

சுற்றுசூழலை பாதுகாக்கும் இயற்கை நாப்கின்கள்:

இவற்றிற்க்கு தீர்வு காணும் வகையில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பிஹெச்டி படிக்கும் பிரீத்தி ராமதாஸ் எனும் மாணவி சுற்றுசூழலை பாதுகாக்கும், இயற்கை முறையிலான நாப்கின்களை கண்டுபிடுத்து உள்ளார். இது குறித்து அந்த மாணவி கூறும் போது ”பொதுவாக மாதவிடாய் காலத்தின் போது பெண்கள் சானிடரி நாப்கின்களை உபயோகிப்பதன் மூலம் நிறைய நோய்கள் தாக்க கூடிய அபாயம் உள்ளது, பெரும்பாலும் பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்களில் செல்லுலோஸ் எனும் திரவமும், டையாக்ஸைடும் சேர்க்கப்படுகிறது, இதனால் நீண்ட காலம் நாப்கின்கள் உபயோகிக்கும் பெண்களுக்கு தோல் நோய், கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் எளிதில் தாக்கும், மேலும் இதில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்களும், இதில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கும், மக்காத தன்மையை உடையவை இதனால் மண்ணில் புதைக்கப்படும் நாப்கின்கள் நீண்ட காலம் மக்காமல் மண்ணின் தன்மையையும் பாதிக்கும் எனவும் தெரிவித்தார். இவற்றை போக்கவே இந்த இயற்கை முறையிலான நாப்கின்களை தயாரித்தாகவும்” அவர் தெரிவித்தார். மேலும் இதை தமது பிஹெச்டி ஆய்விலும் ஒரு பாடமாக எடுத்து படிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தான் தயாரித்த நாப்கின்களில் வேதிப் பொருட்களுக்கு பதிலாக தாவரங்களை உபயோகிப்பதால் இவை மண்ணில் புதைக்கப்பட்டாலும் மண்ணின் தன்மைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். இதுகுறித்து பிரீத்தியின் பேராசிரியர் கூறும்போது, மாணவி பிரீத்தியின் விடாப்பிடியான முயற்சியால் இந்த சாதனை நிகழ்ந்தது எனவும், இதை நடைமுறைப் படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருவதாகவும்” தெரிவித்தார்.

இதன் விலை நிர்ணயிக்கப்படாத நிலையில், சாதாராண நாப்கின்காளை விடவும் விலை குறைவாகவே இருக்குமென தெரிவித்தனர். ஏற்கனவே மலிவுவிலை நாப்கின்களை தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது.