இமயமலை அருகில் பனிமனிதனின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறிய நிலையில், அது பனி கரடியின் கால் தடம் என நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் தேதி இமயமலைத் தொடரின் மக்காலு சிகரத்தில், பனி மனிதனின் கால் தடத்தைக் கண்டுபிடித்ததாக இந்திய ராணுவம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட விலங்கினமாக்க குறிப்பிடப்படும் பனி மனிதன் (yeti) பனிப்பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய ராணுவம் இம்மலைக்காடுகளில் பனி மனிதர்கள் கால் தடம் பார்த்தக் கூறியதை ஆய்வு செய்வதற்காக நேபாளியிலிருந்து இமையமலைக்கு அதிகாரிகள் சிலர் வந்திருந்தனர்.

அவர்கள் இந்திய ராணுவத்துடன் இணைந்து அந்த கால் தடத்தை ஆய்வு செய்ததில் அது பனிமனிதனின் கால்தடம் இல்லை என்பதும் பனி கரடியின் கால்தடம் என்றும் தெரியவந்ததாகவும் நேபாள ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஒரு ட்வீட்டால் பனிமனிதன் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், பனி கரடி குறித்த விவாதங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக மாகலு – பரூண் தேசிய பூங்கா அருகே இதேபோன்ற பனி மனிதர்கள் பார்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது