கூகுள் நிறுவனமானது வேர்ல்டு வைடு வெப்பின் 30ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.

1989ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி செர்ன்(CERN) ஆய்வகத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் டிம் பெர்னர்ஸின் ஆய்வில் வேர்ல்டு வைடு வெப் உருவாக்கப்பட்டது. இது ஒரு ஆன்லைன் செயலி ஆகும். டிம் பெர்னர்ஸின் கண்டுபிடிப்பில் ஹைப்பர் டெக்ஸ்ட் மூலம் ஒரு இணைப்பிலிருந்து மற்றோர் இணைப்புக்குச் செல்ல முடியும். நேற்று (மார்ச்,11)  பெர்னர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேர்ல்டு வைடு வெப் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. ஆனால் அதில் சில சைபர் குற்றம் புரிபவர்களால் ஆபத்தும் நிறைந்தது” என்றார்.

1960லிருந்து உள்ள இன்டெர்நெட் அல்ல இது. அதுவேறு இது வேறு என்ற கருத்துகள் எல்லா நேரங்களிலும் விளக்கப்பட்டு வருகிறது. கூகுள் முகப்பு பக்கத்தில் நிறுவனத்தின் லோகோ அழகாக, ரெட்ரோ 8-பிட் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கூகுளில் (GOOGLE) இரண்டாவது ‘ஓ’ என்பது பழுப்பு நிற கணினியாகவும் முதல் ‘ஓ’ என்பது அக்கணினியை இணைக்கும் புள்ளியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாத்திரை வடிவ தேடல் பகுதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள,”வேர்ல்டு வைடு வெப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று கூறும் செய்தியை கிளிக் செய்வதன் மூலம் கூகுள் கலை மற்றும் கலாச்சார சேகரிப்பு வலைதளம் பிரதிபலிக்கப்படுவதை காணலாம். இதில் இதன்  தலையங்கப் பொருள், தோற்றம், எப்படி வேலை செய்கிறது, மற்றும் அதன் “5 பில்லியன் நபர் வலையமைப்பு”-ன் விரைவான வளர்ச்சி பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு வழங்கப்பட்டுள்ளது.