#90sKidsRumours  என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் 90-க ளில் பிறந்த இளைஞர்களால் நேற்று முதல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.

90-களில் பிறந்த இளைஞர்கள்  தங்கள் சிறுவயதில் கேள்விப்பட்டு நம்பிய சில புரளிகளை #90sKidsRumours என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதில் புரளிகளை பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.  இது முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த 90-களில் பிறந்த இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கின்றது.

 

நம்மிடம் கூறப்பட்ட பல புரளிகள் அவர்களிடமும் கூறப்பட்டுள்ளன என்பது 90ஸ் கிட்ஸ்களின் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கிறது என்பதனை இந்த #90sKidsRumours நிரூபிக்கின்றது. 90களில் பிறந்தவராகள் என்றாலே தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள் என்று சமூகவலைத்தளங்களில் அவர்களே பரப்புகின்றனர். இதை பார்க்கின்ற 20ஸ் கிட்ஸ்களும் என்னடா இது இவ்வளவு மக்கு மங்குணிகளாக இருந்துருக்கிறார்கள் என்று கேட்டிருப்பார்கள்.

 

இப்போது பிறக்கின்ற குழந்தைகள் எதைச் சொன்னாலும் கேள்விகள் எழுப்புகின்றனர், ஆனால் நாம் அப்படியா கேள்வி கேட்டோம்? அந்த அளவிற்கு வெகுளியாக யார் என்ன சொன்னாலும் அதை நம்புவோம் என்பது 90ஸ் கிட்ஸ்களின் சிறப்பம்சமாகும்.