6. அ, ஆ, இ தற்கொலை

இதை எழுதுவேன் எனச் சிறிதும் நினைத்திராத நான் ஒரு துணிவான பெண்ணின் தற்கொலை என்னை எழுத வைத்திருக்கிறது,

உணவு.

உணவு மனதுக்கு என்ன செய்யும்..அதை வரிசையாகப் பார்த்து வருகிறோம். இங்கு இன்று தற்கொலை பற்றி மட்டும் பேசப் போகிறோம்.

முதலில் தற்கொலை எண்ணம் எங்கிருந்து வரும்?

சூழல் பிரச்சனைகள்..குறிப்பிட்ட சூழல் நம்மை மனக்கலக்கத்திற்கு தூண்டும்.

காரணிகள் : குறிப்பிட்ட காரணி..அது ‘ஸ்டுமுலி’ என சொல்லுவோம். அதை தவிர்க்க வேண்டும்.

எண்ணங்கள்:  மனதில் அந்த எண்ணங்கள் வரும் பொழுதே அதைக் கவனிக்க வேண்டும்.  அது தேவையற்ற எண்ணமாக இருப்பின் உடனே சரி செய்ய் வேண்டும்.

முதலில் ஏன் தற்கொலை.

உலகில் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை. இது உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்.

நிரந்தரமில்லா வாழ்வை ஒரு மானோ, புலியோ இல்லை, ஒட்டக சிவிங்கியோ கேள்வி கேட்டு அங்கயே தங்கி விடுவதில்லை, ஆனால் மனிதன்..

காலையில் பல் தேய்க்க தண்ணீர் வராவிடில் ஸ்ட்ரெஸ்,,

டிபன் இல்லாவிடில் அவ்வளவோதான்..இதில் சாவி வேறு தொலையும்..எல்லா டென்ஷனும் ஏறும்..இப்படி நம் பொறுப்பின்மையால் வரும் கோவத்தில் நாம் ..

வேலை போய் விட்டது, விவாகரத்து ஆகிவிட்டது..கல்வியில் பிரச்சனை, பணம் இல்லை..மனது உடைந்து இருக்கிறது, நோய்மை அதிகம்..இப்படிப் பல பல காரணங்கள் நாம் கவலைப்பட அதிகம் உள்ளது. எது குலைந்தாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

உலகில் எந்த இனமும் நிரந்தரமின்மையை ஏற்றுக்கொள்ளும். ஆனால் மனிதனுக்கு மட்டும் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லையெனில் அவனுக்கு மன அழுத்தம், சோர்வு எல்லாம் வரும்.

அதனால்தான் மனித இனத்தில் அதிகளவு மனவியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.

இங்கு பலர் கவனிக்க மறுக்கும் விஷ்யம்..மனதுக்கும், உடலுக்கும், உணவுக்கும் உள்ள தொடர்பு.

உணவின் பங்கு இங்கு மகத்தானது. நான் அளிக்கும் உணவுக்கட்டுப்பாடு கட் ஃப்ளோரா அடிப்படை கொண்டது. அதாவது வயிறு சரியாக இருக்கும் பொழுது செரொடெனின் சரியாகச் சுரக்கும். செரொடெனின் நம்மை நன்றாக உணரச் செய்யும் ஒரு நியூரோ ட்ரான்ஸ்மீட்டர். தூக்கத்தைச் சரி செய்ய வல்லது. தூக்கம் இல்லையெனில் என்ன ஆகும் எனத் தெரியும். மூளை தன்னை புதுப்பிக்க முடியாது. அது மட்டுமல்ல கோலைன், காபா போன்றமைக்கும் உணவுகள் சத்து தேவை,

அதாவது நாம் நம்மை நன்றாக உணர வேண்டுமெனில் சரியான விகிதத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.

80% செரொடெனின் நம் சிறுகுடலில், கட் ல் தான் சுரக்கிறது. அதைச் சரி செய்யாமல் மன அழுத்தம் , சோர்வை வெளியில் இருந்து சரி செய்வது கடினம்.

மூட் , உணர்வு பெருக்கு இவை எல்லாம் நியுரோ டிரான்ஸ்மீட்டர்களுடன் தொடர்பு கொண்டது. நம் கட் ஃப்ளொரா சரி இருந்தால்தான் நியுரோ டிரான்ன்ஸ் மீட்டர்கள் சரியாக வேலை செய்யும்.

அதைத் தவிர ஹார்மோன்களுக்கும் மனதுக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தைராயிட், இன்சுலின் எல்லாம் ஹார்மோன்கள். ..ஏன் விட்டமின் டி கூட ஹார்மோன்..அவசரத்தில் விட்டமினுடன் சேர்த்து விட்டார்கள் என்றும் சொல்வது உண்டு.

மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை பல சமயம் உணவு, ஆரோக்கிய மாற்றத்தினால் சரி செய்ய முடியும். சரிவிகித  உணவு, உடற்பயிற்சி, தூக்கம் இவை மிக அவசியம்.  இவை மன அழுத்த்தை தவிர்க்கவல்லது.

இவற்றைச் சரி செய்யக் கட் ப்ளோராவை உணவுகள் மூலம் முதலில் சரி செய்ய வேண்டும்.

அப்போ உணவைக் கொடுத்தால் தற்கொலை எண்ணம் சரியாகுமா என கேட்கலாம்.. டயட் 50 % அடுத்துச் சிக்கல்கள் 30% ஒரு ரப்பர் பேண்டை இழுத்துக்கொண்டே இருப்பது போலத்தான் ஸ்ட்ரெசில் இருப்பது.. அப்படி இழுத்து விடும் பொழுது அது சுரப்பி சிக்கல்களுக்கு அடி கோலுகிறது.

ஸ்ட்ரெஸ் மூலம் 150 விதமான நோய்கள் வருவதாக சைக்காலஜி புத்தகத்தில் வாசித்து இருந்தேன். அவை பெரும்பாலும் ஆட்டோ இம்யூன் பிர்ச்சனைகள்.

ஆக மொத்தம் உணவு சரியில்லாவிடிலும் வரும். தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலும் பிரச்சனை.

எதனால் அழுத்தம் ஏற்படுகிறது,,

பணப்பிரச்சனை
தொழில் சம்பந்தப்பட்டவை
குடும்ப பிரச்சனைகள்
அதிகளவு உடல் உழைப்பு, மன உழைப்பு
தூக்கம்
உணவு
சமூகம்
வேலை கிடைக்காமை
கல்வி
நரம்பியல் பிரச்சனைகள்
உடல் உபாதைகள்

பொதுவாக ஒரு கிலோவை கையில் அரை மணி தூக்கவதற்கும்,  ஒரு நாள் முழுதும் தூக்குவதற்கும் வித்தியாசம் உண்டு.

சிலருக்கு அரை மணி கூட முடியாது, சிலர் அரை நாள் கூட தாக்குப்பிடிக்கலாம். இப்படிதான் அவர்களுக்கு அதிகளவு சுமையாகப் போகும் பொழுது ஸ்ட்ரெஸ் என்கிறோம்

அடுத்து ஒரு பேருண்மை..அக்ஸ்ப்டென்ஸ், அடாப்லிபிடி எனப்படும் ஏற்றுக்கொள்ளல்தான். இது இல்லாமல்தான் பெரும்பாலான அழுத்தங்கள் உருவாகின்றன.

மனம் என்பது மிக மிக மென்மையானது..அதே சமயம் மிக மிக கடினமானது..ஒற்றை மனம் ஒரு லட்சம் மனிதர்களைக் கட்டுண்டு கிடக்கச் செய்யும். ஹிட்லர் மோசமான எடுத்துக்காட்டு. காந்தி நல்ல எடுத்துக்காட்டு,

கடினம் யாருக்குத்தான் இல்லை. புத்தர் சாவே இல்லாத வீட்டில் கடுகு வாங்கி வா…உன் குழந்தையைப் பிழைக்க வைக்கிறேன் என்பார், எல்லா வீட்டிலும் மன நல பிரச்சனைகள் உண்டு.. தற்கொலைக்கு ஒரு முறையாவது முயலாத, எண்ணாத மனிதன் உலகில் மிக மிகக் குறைவு.

தன்னை துணிவுடன், வலிமையுடன், மகிழ்வாகக் காட்டிக்கொள்ளும் பெண்களுக்குப் பின் மிகப்பெரும் வலி இருக்கும். சமூகம் துணிவு முக மூடியை அவர்கள் முகத்தில் மாட்டி விடுவதால் பகிர யோசிக்கிறார்கள். அல்லது தனக்கே எல்லாம் முடியும் என நினைக்கிறார்கள்.

தற்கொலை எண்ணம் என்பது மன நலப் பிரச்சனை, நோய்க்கூறு. அதை மருத்துவர்கள் அல்லது மன நல நிபுணர்கள் சரி செய்ய வேண்டிய விஷயம்.

நாற்பதைத் தாண்டிய பெண்களுக்கு பிரி மெனோபாஸ்..மனம் அதிகப்படியாக அலைப்பாயும். யாரைக் கடித்துக் குதறலாம் எனப் பசியுடன் அலையும். உடலும், மனமும் கட்டுக்குள் இருக்காது.. எந்த மருந்தும் உதவாது. குடும்பம் கவுன்சலிங்க் மட்டுமே உதவும். இது சில பெண்களுக்கு மிகக் கடுமையாகத் தாக்கும். அடுத்தவரைத் தாக்கும் நாக்கு தன்னை சுடும் பொழுது முடங்குவார்கள். வீடே அன்பில்லாமல் போகும். அரவணைக்க ஆள் இருக்காது. வந்தாலும் அவளே துரத்திவிட்டு அழுவாள். பின் தன்னிலை வரும் பொழுது உறவுகள் கொஞ்சம், கொஞ்சமாக விலகி இருக்கும்.

மற்ற நோய்மைகளுக்கு அன்பும், ஆதரவும் கிடைக்கும்..மனச் சோர்வுக்கு விலகல்தான் பரிசாகக் கிடைக்கும். எனவே நோய்மை இன்னும் அதிகமாகும். அப்பொழுது நமக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் ஆழமாகும்.

இதுதான் என்று இல்லை..இப்படிப் பல காரணங்கள். எது இருப்பினும் தற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்.

இணையம் தூரத்தை அருகில் வைத்து..உறவுகளை தூரமாக்கி விட்டது. மனம் விட்டு எப்பொழுது குடும்பத்துடன் பேசினோம்? தொலைக்காட்சி, அலைப்பேசி இல்லாத குடும்ப நேரம் இருக்கிறதா? இணையத்தில் யாருக்கோ சாப்டியா, நல்லாருக்கியா செய்தியை மனைவிக்கு அனுப்பியது உண்டா? கணவனுக்கு  எப்பொழுது கடைசியாகக் காதலுடன் ஒரு மெசெஜ் அனுப்பினோம்?

டிக் டாக்கில் ஒரு பெண்ணுக்கு நான்கு கோடி லைக்குகள்.. விட்டால் தமிழக மக்கள் தொகையை விட டிக்டாக் மக்கள் தொகை அதிகம் ஆகும். போல இருக்கு, அங்கு பொது இடத்தில் தனியாக எந்தப்பெண்ணும் நடனமாடலாம், பாட்டுப் பாடலாம். அதனால் வரும் விளைவுகள்?

தனியாகச் சம்பாதிக்கத் தெரியாது.கல்வி இருக்காது.தனியாக ஒரு ஊருக்குப் போய் வரத் தெரியாது…எல்லாம் குடும்பம் சார்ந்து இயங்கும் பெண்கள் இணைய உலகத்தின் பரப்பை, வீச்சைப் பார்த்துத் தடுமாறுகின்றனர். இதில் படித்த பெண்களும் விதி விலக்கில்லை. பணக்கார பெண்களைக் குறி வைத்து கொள்ளை அடிக்கும் கும்பலும் உண்டு.

பொள்ளாச்சி போல் ஒருபக்கம் என்றால் இந்த இணைய வீச்சை ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெண்கள் சுதந்திரமாக நடமாடத் தடை விதிக்கின்றனர்.

அது பல சிக்கல்களில் முடிகிறது. கலாச்சார அதிர்ச்சி..வீட்டில் ஒரு பெண்ணை பார்த்து..அவள் சோறு போட்டு, கால் பிடித்துவிட்டு எல்லாம் செய்வாள் எனக் கற்பனையில் வளர்ந்த பலருக்கு டிக் டாக், ஃபெஸ் புக் பெண்களைப் பார்த்தால் ஒவ்வாமை ஆகிறது.

அதைத் தவிர வாட்ஸ் அப் வீடு வரை ஊடுருவுறுகிறது. அலுவலகத்தில் தனக்கு வேண்டும் என்பதால் மிக நெருக்கமாக இணையத்தில் அணுகும் பெண்களும் உள்ளனர்.

எல்லாம் இணையம்தான் என்ன வேணாலும் பேசலாம் பழகலாம்.ஏதும் பிரச்சனை இல்லை என்னும் தெளிவுடன் உள்ளே சென்றால் விட்டில் பூச்சி போல் மாட்டிக்கொள்கின்றனர். இது மாய வலை.

சரியாக விழிப்புடன் இல்லாவிடில் நம்மை சிக்க வைக்கும் புதைகுழி. சமூகம் போல்தான் இணையமும். அவரவர் தனக்கு தானே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 

இணையம், குடும்பம், கல்வி, சொத்துரிமை , வேலை தனிதன்மை, குழந்தை வளர்ப்பு எதை விடுவது,,எதை செய்வது..இது புரியாமல் பெரும் குழப்பம்.

அதே சமயம் இணைய நட்புகளால் தற்கொலைகள் கடைசி நேரத்தில் காப்பற்றப்படவும் செய்கின்றன. நிறைய விழிப்புணர்வுகள். உணவு மாற்றத்தால் மன சோர்வு நீங்கிய பலர் உண்டு.

உணவோ, மனமோ, இணையமோ நாம் எப்படி அதை உபயோகம் செய்கிறோமோ அப்படி அது நமக்கு பலன் கொடுக்கும்.

எதுவாகிலும் இருக்கட்டும்.

உயிரோடு இருப்போம்.

அதுதான் மிக முக்கியம்.

வாழ்தல் அத்தனை அழகு.
வாழ்ந்துடுவோம் எதுவாகினும்..
அவ்ளோதான்.

முந்தைய தொடர்கள்:

5.‘இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.’ – https://bit.ly/2WrGPnM
4.எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? – https://bit.ly/38X0y16
3. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? – https://bit.ly/33w5IjK
2.உறவுகள் தரும் அழுத்தங்கள் – https://bit.ly/2waiB6Q
1.ஆரோக்கியம் பொறுத்தவரை –https://bit.ly/3b9jUlb

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எது நம் வீடு ?- கிர்த்திகா தரன்
  2. நம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் - கிர்த்திகா தரன்
  3. 'இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.' – கிர்த்திகா தரன்
  4. எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? - கிர்த்திகா தரன்
  5. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? - கிர்த்திகா தரன்
  6. உறவுகள் தரும் அழுத்தங்கள் - கிர்த்திகா தரன்
  7. ஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்