7. அ, ஆ, இ – நோய்

கணவர் வீட்டைசேர்ந்த  ஒருவர் சித்தராக இருந்தார், அவரின் சமாதி அரவங்காடு என்னும் ஊரில் இருக்கிறது எனச் சொல்ல, அங்கு ஒருமுறை சென்றோம். அவரை தெய்வமாக வழிப்பட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழகம் முழுக்க கொள்ளைநோய் பரவியப்பொழுது இவர் தன் வைத்திய சக்திமூலம் இந்த ஊரைக் காப்பாற்றினார் என்று அவர்கள் சொன்னார்கள்.

போதி தர்மர் கதை அப்பொழுது இங்கும் நடந்து இருக்கு. அவர் ஊரைச்சுற்றி ஏதோ செய்தார் என்ற கதை கேட்டேன். இன்னொன்று மருந்து. தனிமையும், எதிர்ப்பு சக்தியுமாக இருந்திருக்கும்.

கொள்ளை நோய் என்பது எல்லாக் காலங்களிலும் வருவதுதான். உலகில் எது அதிகம் வசிக்கிறது என்றால் நுண்ணுயிரிகள்தான். நம் உடல் ஆக்கப்பட்டு இருப்பது செல்களால் அல்ல, உயிரிகளால்… என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஆம். அதான் நிஜம். நம் உடலில் 90% அவைத்தான் வாழ்கின்றன. 100 ட்ரில்லியன் பாக்டீரியாக்களால் ஆனது நம் உடம்பு. டிரில்லியனுக்கு கூகிளில் பார்த்து ஜிரோ கணக்கிட்டுக் கொள்ளவும்.

கட் ஃப்ளோராத்தான் காரணம் என்று எழுதினேன். நம் உடலில் மிக அதிக நுண்ணுயிரிகள் அதாவது மைக்ரோப்ஸ் வாழ்வது சிறுகுடலில்தான்.

அவை என்ன செய்கிறது. இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வது.. நம் ஜீங்கள்கூட மைக்ரோப்ஸ் ஜீன்கள் என.

என்ன என்ன ஜீவன்கள் நம் வயிற்றுக்குள் இருக்கின்றன?

வைரஸ்

பாக்டீரியா

பாசி வகைகள் (algae)

நொதி உயிரிகள் (ஃபங்கஸ்)

ப்ரோட்டாசா எனப்படும் ஆதி உயிரிகள். (நம் முன்னோர்கள்)

நுண் பூச்சிகள்

இவைதான் உடலில் ஒவ்வொரு பாகமும் ஆக்கிரமித்து இருக்கும். கொரோனா எப்படி பரவும் என்று மாலில் ஒருவர் நடக்கும் விடியோ பார்க்கலாம். தொடும் இடங்களில் எல்லாம், இருக்கும் இடங்களில் எல்லாம் உயிரி பரிமாற்றம் நடக்கும்.

அவதார் படத்தில் ஒரு இயற்கை கனெக்ஷன் எல்லா இடத்திலும் இருப்பதாய் காட்டுவார்கள். அதை நான் நுண்னுயிரிகளாக கருதுகிறேன். அவற்றின் பிரம்மாணட உலகத்தில் நாம் சிறு விலங்கு.

இவற்றில் நல்லவை, கெட்டவை, நடுநிலை என்று மூன்றுவகை இருக்கிறது,

உண்மைய சொன்னா நல்லவைதான் அதிகம். முஸ்லிம் தீவிரவாதி என்பது எந்தளவுக்கு அபத்தமான சொல்லோ அந்தளவுக்கு அபத்தம்தான் பாக்டீரியாக்கள் எதிரிகள் என்று சொல்வது. ஆம். அவர்கள் இல்லாத உலகத்தில் நம்மால் வாழ முடியாது.

இலை நொத்தித்து உரமாகும். உரத்தில் விதை முளைக்கும், செடி, பழம்வரை வரும். பழத்திலும் கோடிக்கணக்கில் இருக்கும். அதை பச்சையாக சாப்பிடும் பொழுது நமக்குள்ளும் செல்லும். எனவேத்தான் ‘ரா வீகன்’ உணவுகள் சில நோய்களைக் குணப்படுத்துகின்றன.

நல்ல பாக்டீரியக்கள் வளர்ப்பது மட்டுமே ஆரோக்கியமாக வாழ வழி. கொரொனா பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். அதிகம் சுத்தமாக இருக்கும் நாடுகளில் அதிகம் பலி வாங்கும். ஏனெனில் சுத்தம் என்ற பெயரில் அவர்களிடம் எதிர்ப்பு சக்த்திக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அழித்து இருப்பார்கள்.

கட்ஸ் இருக்கான்னு கேட்பது கூட வயிற்றுக்குள் நல்ல பாக்டீரியா இருக்கான்னு கேட்பதுதான்.

நல்ல சுகாதார சூழ்நிலையில் இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழும் குழந்தைகளுக்கு ஏன் தோல் பிரச்சினை வருவதில்லை? அவர்கள் சுமாரான சுத்தம் மட்டுமே.. அதனால் உடலுக்குள் கடுமையான எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்கும். இந்தியாவில் மிக அதிகமான கெமிக்கல் பயன்பாடு இன்னும் வரவில்லை. அதனால் கொஞ்சம் பரவல் குறைவாக இருக்கலாம். இருக்கலாம் மட்டுமே.

பூச்சி மருந்து அடித்தால் நல்லது செய்யும் பூச்சிகளும் சாகும் என்பதுபோல்தான் நாம் கெமிக்கல் வைத்து சுத்தம் செய்வதும். மைக்ரோப்ஸ் அழியும் பொழுது நம்மை பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். ஆம்… நல்ல மைக்ரோப்ஸ் நம் பாதுக்காப்பு வீரர்கள். எல்லையில் நின்றுகொண்டு எதிரிகளை விரட்டுவார்கள். இப்பொழுது அவர்கள் மேலும் குண்டுப்போட்டு கொல்கிறோம்.

இப்பொழுதைக்கு என்ன செய்யலாம்? எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவுகள், காய்கறிகள் தயிர், ப்ரொபயாடிக் ஊறுகாய் இவற்றுடன்… முட்டை, வாரம் இருமுறை அசைவம். முக்கியமாய் நல்ல மீன் எடுக்க வேண்டும். முடிந்தவரை ஆர்கானிக் உணவுகள், அதை வென்னீரில் கழுவதல் அவசியம், தேவையெனில் ப்ரொபயாடிக் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கலாம். அப்படி எடுக்கும் பொழுது அதிக நார்சத்து அவசியம்.

தண்ணிர் மிக அவசியம். உடலை ப்ளஷ் செய்வது அவசியம். அதன் மூலம் கிருமி தொற்று குறைய வாய்ப்புணடு.

சுத்தம் இப்பொழுது மிக அவசியம். தனிமையாக இருப்பதும்.

அடுத்து நல்ல பாக்டீரியாக்களை கொல்லும் பெரிய விஷயம் என்ன தெரியுமா?

நம் மனம்.

என்னது அவ்ளோ அற்புத ஆற்றலா? ஸ்பூன் வளைய வைக்க போகிறதா மனம் என யோசிக்கலாம்.. ஆம் அதைவிட பெரும் வல்லமை உடையது. சிவன் போல் அழிக்கும் சக்தி அதிகம் உடையது.

ஒருமுறை ஸ்ட்ரெஸினால் ஆட்டோ இம்யூன் வருகிறது என்று கவனித்தோம். அது மட்டுமின்றி நல்ல மைக்ரோப்ஸ்ம் செத்துவிடும். நல்லவைகளின் மனசு ரொம்ப இளக்கம். உங்க ஸ்ட்ரெஸ் தாங்காம பொட்டுன்னு போயிடும் மனதை நிம்மதியாக வைக்காவிடில் கட் ஃப்ளோரா சமநிலை பாதிக்கப்படும்.

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் மைக்ரோபயொம் டயட் டிப்ரஷன், ஆங்கசைட்டி கொடுத்து ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள். என்னிடம் கட் ஃப்ளோரா டயட்டில் ஆங்க்சைட்டி மாத்திரைகளில் இருந்து மீண்டவர்கள் உள்ளனர்.

அதேசமயம் மன அழுத்ததினால் தடுமாறும் மூளை வயிற்றுக்கு செய்தி அனுப்புகிறது. இவன் ஆபத்தில் இருக்கிறான்… காப்பாற்று என.. அல்லது தடுமாற்றம் உதவி எனவோ.. அடிக்கடி ஆபத்துக்கு தயாராகும் செய்தியை மூளை வயிற்றுக்கு அனுப்பி அனுப்பி கட் சமநிலையை மாற்றுகிறது.

ஐ.பி.எஸ்., அல்சர் போன்றவையும் மன அழுத்ததில் உருவாகும். அதனளவுக்கு மூளை, உணர்வுகள், வயிறு இணைந்து இருக்கிறது.

கட் y ஆக்சிஸ் என்று சொல்வார்கள். அது மூளையை நேர்க்கோட்டில் வயிற்றுடன் இணைக்கும் ஒரு விஷயம். அதில் ஹார்மோன் சுரப்பிகளும் இணையும். நம் உணர்வு பாதை என்றும் சொல்ல்லாம். நல் உணவு எந்தளவுக்கு மிக முக்கியமோ அதே அளவுக்கு நல் உணர்வுகளும் மிக அவசியம்.

கொரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிக முக்கியம் ஸ்ட்ரெஸ் ஆகவே கூடாது. எந்த நோய்க்கும் இது மிக முக்கியம். அதனால் கட் ஃப்ளொரோ பாதிக்கப்படும் அபாயத்தில் எதிர்ப்பு சக்தி குறையும். இப்பொழுது மிக மிக அவசியம் நம்முடைய எதிர்ப்பு சக்திதான். அதை உருவாக்க மனதை துணிவாக, ரிலாக்ஸாக, தன்னமபிக்கையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வாட்ஸ்அப் செய்திகள் பார்த்தால் பீதியாகும் என்றால் குழுக்களில் இருந்து கொஞ்ச நாட்கள் வெளிவரலாம். அடுத்து தேவைக்கு இணையம் பயன்படுத்தலாம்.

கரோனா அச்சத்தில் ஆன்லைன் ஷாப்பிங்க் அதிகமாகிவிட்டது. வீட்டிற்குள் விளையாடும் பொருட்களைச் சேர்க்க தொடங்கி இருக்கிறோம். ஒவ்வொரு நகரமாக ஷட்டவுன் அறிவிக்கிறது. மகன் இருக்கும் பாஸ்டனில் ஒரு கான்பரன்சில் ஒருவர் வந்து கரோனா பரப்பியதால் 200 பேருக்கு உறுதியாகி உள்ளது. அவர்கள் யார் யாருக்கு கொடுத்து இருப்பார்களோ.. ஒருவரால் ஒரு மாகாணம் மூடி கிடக்கிறது. இதுதான் நிதர்சனம்.

ஒரு வாரம் தியேட்டர், மால் எல்லாம் மூடி பெங்களுர் ஷட் டவுன் ஆரம்பித்தாகிவிட்டது. இன்னும் இணையம் அதிகரிக்கும். வதந்திகளால் எது நமக்கு மனஅழுத்தம் கொடுக்கிறதோ… அதுவே ஆபந்த்பாந்தவனாக இருக்க போகிறது. இணையம் இன்னும் இன்னும் மிகப்பெரும் இணைப்பாக மாறும் கால வந்துவிட்டது,

சில நாடுகளில் பள்ளி பாடங்கள் இணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளும் அப்படியே. பலர் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். பெங்களுரில் ஐடி ஊழியர்கள் அலுவலகம் வரக்கூடாது என அரசாங்கம் சொல்லிவிட்டது.

உலகம் முன்புபோல் இனி இருக்கப்போவதில்லை. மிக அழகாக வாழ ஆரம்பிக்க வேண்டிய நேரம். எல்லாரையும் அன்பு செலுத்த வேண்டிய நேரம். இதற்கெல்லாம் காரணம் எதுவும் இல்லாவிடிலும். ஒன்று முக்கியமாய் தெரிகிறது. இயற்கையோடு விளையாடிய மனிதன் அதற்கான பலனைப் பெறுவான். பூச்சிக்கொல்லிகள், கெமிக்கல் என நுண்ணுயிர்கள் கொலை செய்து தன் எதிர்ப்பு சக்தியை அழிக்க.. இப்பொழுது அயல் போரில் தன்னை இழக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கை மிகப்பெரியது.

முந்தைய தொடர்கள்:

6. தற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- https://bit.ly/3bcxVOP
5.‘இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.’ – https://bit.ly/2WrGPnM
4.எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? – https://bit.ly/38X0y16
3. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? – https://bit.ly/33w5IjK
2.உறவுகள் தரும் அழுத்தங்கள் – https://bit.ly/2waiB6Q
1.ஆரோக்கியம் பொறுத்தவரை –https://bit.ly/3b9jUlb

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எது நம் வீடு ?- கிர்த்திகா தரன்
  2. தற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்
  3. 'இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.' – கிர்த்திகா தரன்
  4. எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? - கிர்த்திகா தரன்
  5. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? - கிர்த்திகா தரன்
  6. உறவுகள் தரும் அழுத்தங்கள் - கிர்த்திகா தரன்
  7. ஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்