கடந்த வாரத்தில் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 60.55 புள்ளிகள் உயர்ந்து 11,403.80 புள்ளிகளோடும். பிஎஸ்இ சென்செக்ஸ் 188.66 புள்ளிகள் உயர்ந்து 37,943.55 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
நிஃப்டி 50 இன்டெக்ஸில் முதலீட்டாளர்களுக்கு கோடக் வங்கி, பவர் கிரிட், டிசிஎஸ் மற்றும் எஸ்.பி.ஐ. போன்ற பங்குகள் அதிக லாபம் ஈட்டி கொடுத்தது.
வெள்ளி அன்று உள்நாட்டு பங்குச் சந்தை லாபத்தைக் கொடுத்தது. அமர்வின் பெரும்பகுதி மிகுந்த மாறும் தன்மை இல்லாமல் வலுவாக இருந்தாலும், நிஃப்டி மற்றும் வங்கி நிஃப்டி இரு வணிகமும் உச்சத்தில் இருந்து லாபங்களைப் பெற்றன.
நிஃப்டி வாரத்தின் கடைசி நாளான வெள்ளி அன்று அதிகபட்சமாக 60 புள்ளிகள் உயர்ந்து 83.60 புள்ளிகளில் 0.74 சதவீதம் நிகர லாபம் ஈட்டியது. முழு வாரமும் வலுவான நிலையிலிருந்தபோதிலும், வெள்ளியன்று வர்த்தகத்தின் கடைசி மணிநேரத்தில் நிஃப்டி பங்குச் சந்தைகள் தொழில்நுட்ப அடிப்படையில் உயர்ந்தது.
தற்போதைய சூழலில், முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன்கூடிய முதலீடுகளை மேற்கொள்ள மேலுள்ள காரணிகள் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சந்தையின் பயணம் செங்குத்தாகவே உள்ளது. இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக, சந்தையை ஒரு நிலையில் வழிநடத்த போதுமான காரணங்களைக் கொடுக்கின்றன.
யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிட்யூட் மேனேஜ்மென்ட் கம்பெனி நிறுவனமான Vanguard Group நிறுவனம் மார்ச் 15 ம் தேதி ஒரு நாளில் 1,300 கோடி ரூபாயை நிஃப்டி 50யில் முதலீடு செய்துள்ளது.
அதேவேளையில் பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ் வங்கி, வேதாந்தா மற்றும் கோல் இந்தியா லிமிடெட் போன்ற பங்குகள் கடந்த வாரத்தில் நஷ்டத்தைச் சந்தித்து வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது.
வெலிங்டன் மீடியா கார்ப்பரேஷன், யூரோ மல்டிவிஷன், ஹோட்டல் ரக்பி, இம்பெக்ஸ் ஃபெரோ டெக் மற்றும் ஜே.வி.எல் அக்ரோ இண்டஸ்ட்ரிஸ் போன்ற பங்குகளும் முறையே தேசிய பங்குச் சந்தையான நிஃப்டடியில் நாகர்ஜூனா ஆயில் சுத்திகரிப்பு, ராஜ் ரேயான் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சதாவஹானா இஸ்பாட், ஷிர்பூர் கோல்ட் ரிஃபனரி மற்றும் ஸ்டிஐ இந்தியா போன்ற பங்குகள் 52 வார விலை வீழ்ச்சியினை தொட்டு இறக்கத்துடனே பயணித்து.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி, எச்.டி.எஃப்.சி., இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்து வர்த்தகமாகின.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை வர்த்தக சொத்து மதிப்பு ரூ .35,500.21 கோடியிலிருந்து ரூ. 8,38,355.65 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் ஹெச்.டி.எஃப்.சி.சி.யின் சந்தை மூலதன சொத்து மதிப்பு ரூ. 33,724.93 கோடியில் இருந்து ரூ. 6,12,846.54 கோடியாக உயர்ந்ததுள்ளது. மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் சொத்து மதிப்பும் ரூ. 16,676.22 கோடியில் இருந்து ரூ .2,52,871.75 கோடியாக அதிகரித்து உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் ரூ 16,487.42 கோடியில் இருந்து உயர்ந்து, 2,54,995.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எச்.டி.எஃப்.சி.யின் நிகர லாபம் 16,084.35 கோடி ரூபாயாக உயர்ந்து 3,40,171.21 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நியூயார்க் தொழிற்சாலை நடவடிக்கைகளால் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே பிப்ரவரியில் இரண்டாவது முறையாக உற்பத்தி குறைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது
அமெரிக்க-சீன வர்த்தக ஒப்பந்தத்தின் மீது உலக அளவில் ஏற்படும் மாற்றங்களால் வங்கி மற்றும் நிதிகளில் சார்ந்த பங்குகள் சந்தையில் அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீத பிரெக்டிட் சிக்கல் மற்றும் OPEC இன் விநியோகக் குறைப்பு ஆகியவற்றால் சந்தைகளில் உள்நாட்டு சந்தையைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது,
இதன்மூலம் ரூபாய் வர்த்தகத்தில் புதிய கருத்துக் கணிப்புக்கள் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைச் சேர்க்கின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தின் முதல் பாதியில் உள்நாட்டு மூலதனச் சந்தையில் ரூ .20,400 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். அமெரிக்க-சீன வர்த்தக உடன்பாட்டிலிருந்து ஆதரவான முடிவுகளை எதிர்பார்ப்பது, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதமுடிவை மதிப்பிடுவதற்கான என சந்தைப் பிரிவுக்கு ஆதரவாகவே உள்ளது சூழ்நிலை.
தற்போதைய சந்தையில் 947.80 விலையில் வர்த்தகமாகும் மைண்ட் டிரீ பங்கானது. வரையறுக்கப்பட்ட அடுத்த ஒரு வருடத்தில் ரூ 1050 வரை ஏறும் என ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் பரிந்துரைக்கிறது.
ரூ.150ல் வரத்தகமாகும் இந்தியன் ஹோட்டல் நிறுவனத்தின் பங்குகள் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் 193 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக இலக்கை நிர்ணயித்து இந்தியன் ஹோட்டல் பங்குகளை பரிந்துரைக்கிறது idbi கேபிடல் நிறுவனம்.
அடுத்தபடியாக மகிந்திரா அண்டு மகிந்திரா பினான்சியல் சர்வீசஸின் பங்குகள் வாங்குவதற்காக பரிந்துரைக்கப்படுகிறது.
ரூபாய் 430 இல் தற்போது வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் இந்த பங்குகள் அடுத்த 12 மாத கால அளவில் 500 ரூபாயை தொடுமென இலக்கு நிர்ணயித்துள்ளது icicidirect.
பங்கு வர்த்தகத்தில் முதிர்ந்த அனுபவசாலி ஆலோசகரான டாக்டர் சி கே நாராயணன் அவர்கள். டைடன் கம்பெனி பங்குகளை வாங்க பரிந்துரைக்கிறார். 96311.48 கோடி மூலதனத்தோடு வர்த்தகமாகும் இந்த நிறுவனம் 1984 ஆம் ஆண்டு முதல் தேசிய பங்குச் சந்தையின் ‘லார்ஜ் கேப்’ பிரிவில் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சந்தை விலை 1084ல் வர்த்தகமாகும் இந்த பங்கு ‘இன்ட்ரா டே’ எனப்படும் குறுகிய கால வர்த்தகத்தில் 1100 வரை எட்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
மீன்ஸ் ஜெய்ஸ்வால் டாட் காம் காடி லிமிடெட் GATI Limited நிறுவனத்தின் பங்குகளை வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது எண்பத்து நான்கு ரூபாயில் வர்த்தகமாகும் இந்த பங்குகளின் விலை “இன்ட்ரா டே” எனப்படும் குறுகிய கால வர்த்தகத்தில் ரூபாய் 90 எட்டும் என மீன்ஸ் ஜெய்ஸ்வால் டாட் காமின் நிறுவனம் பரிந்துரைக்கிறது.
இந்திய அரசியல், US பெட் ரிவியூ & ப்ராக்ஸிட் என்ற காரணிகளை கருத்தில் கொண்டாலும் இதன் காரணமாக சந்தியின் ஆதிக்கங்கள் சற்று குறைத்தே காணப்பட்டு இந்த வார சந்தை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் இந்த வாரம் ஹோலி பண்டிகை வரவிருக்கையில், பங்குச்சந்தை, நாணயமாற்றம், பண்டமாற்றம் மற்றும் வியாபார சந்தை ஆகியவை வியாழன் அன்று மூடப்படும் என செபி அறிவித்துள்ளது.
திங்களன்று 11,480 லிருந்து 11,535 வரை தொட்டு புதிய ஏற்றத்துடன் செயல்பட வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் 11,350 லிருந்து 11,275 மட்டங்களில் இறங்கியும் பயணிக்கலாம்.
பங்குச் சந்தையின் பயணங்கள்:-
லுமக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ் நிறுவனம் பிபிசியின் உற்பத்தியை ஏப்ரல் 1, 2019 நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை மற்றும் இயந்திரத்தை அகற்றுவதற்கு Lumax தொழிற்சாலைகளுக்கு பி.சி.பிக் பிசினஸ் தொடர்பான நீட்டிப்பு கையெழுத்திட்டன.
ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சுனில் குமார் ஷர்மா, நிர்வாக துணை துணை தலைவராக மனோஜ் கவுர் ஆகியோரை மீண்டும் நியமனம் செய்துள்ளது
Cadila ஹெல்த்கேர்: Zydus வால்ஸ்டர்டன் மற்றும் ஹைட்ரோகுளோரோதியாசை மாத்திரைகளுக்கு யுஎஸ்டஎஃப்டிஏ விடமிருந்து இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளது
MSTC இன் ஐபிஓ விற்பனை மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இறுதியில்ரூ. 121-128ஆக இருந்த நிர்ணய விலை இப்போது ரூ. 120-128 க்கு மாற்றப்பட்டுள்ளது.
1,76,70,400 பங்குகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவித்துள்ளபோதிலும், மூன்றாவது நாள் வெள்ளியன்று இறுதிவரை 1,98,69,390 பங்குகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பெறப்பட்ட மொத்த வர்த்தக தொகை ரூ. 226 கோடியாகும்,
கொல்கத்தாவை அடிப்படையாகக்கொண்ட நிறுவனமான எம்.எஸ்.டி.சி. 1964 ஆம் ஆண்டில் ஸ்கிராப்பை ஏற்றுமதி செய்வதில் ஒரு வர்த்தக நிறுவனமாக இணைக்கப்பட்டது. இ-காமர்ஸ், டிரேடிங் மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றில் மூன்று பிரதான வர்த்தக நிறுவனமாக உள்ளது.
(முதலீட்டாளர்களுக்கான அறிவுறுத்தல்கள்:- முதலீட்டு வல்லுநர்கள் மற்றும் கருத்துகளின் வர்த்தகம் சார்ந்த கட்டுரையே இது. இதன்மூலம் ஏற்படும் எந்தவிதமான சூழ்நிலையிலைகளுக்கும் உயிர்மை.காம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் தொடங்கும் முன் முதலீட்டு நிபுணர்களுடன் சரிபார்க்க வாசகர்களை அறிவுறுத்துகிறது)