ஈக்விட்டி வர்த்தகம் கடந்த மாதத்தில் மிகவும் ஏற்ற இறக்கத்துடனே வர்த்தகமாயின.மேலும் வங்கி சார்ந்த பங்குகள் அதிக அளவில் விலை இறங்கி வர்த்தகமாகின.

குறிப்பாக எஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளின் பங்குகள் மிகுந்த அழுத்தம் கண்டு ஆட்டம் கண்டன. இறங்கிய அதே வேகத்தில் மார்ச் மாதத்தின் முதல் வர்த்தக நாளிலிருந்து இந்தப் பங்குகள் ஏற்றங்கொண்டு பயணப்படுகின்றன.

அதன்படி, கடந்த வாரத்தில் மிகுந்த லாபம் ஈட்டிய பங்குகளாக பஜாஜ் பின் சர்வீஸ், கோல் இந்தியா. கெயில், கிராசிம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, என்டிபிசி, எல் அண்டு டி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், யு பி எல், எஸ் பேங்க், ஜி என்டெர்டெய்ன்மென்ட் போன்ற பங்குகள் கடந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுத்து இன்னும் விலை ஏற்றத்துடனே பயணிக்கின்றன.

மேலும் அதிக விலையுள்ள பங்குகளாக தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி புள்ளிகளை ஒருமுக தன்மையோடு ஒருங்கிணைத்து சென்றன கீழ்க்கண்ட பங்குகள்.

அதானி போர்ட், எச்டிஎஃப்சி, ஐஷர் மோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், பார்த்தி ஏர்டெல் போன்ற பங்குகள் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு சிறிதளவு நஷ்டங்களை ஏற்படுத்தி மார்ச் மாதத்தின் முதல் வர்த்தக நாளிலிருந்து ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.
கடந்த வாரத்தில் மாற்றம் காண காரணகர்த்தாவான பங்குச் சந்தையின் முக்கிய நிகழ்வுகள்.

# இரும்பு மற்றும் மின் சாதனம் நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஜனவரி மாதத்தைக் காட்டிலும்  பிப்ரவரி மாதத்தில் 8.2% உயர்ந்து வர்த்தகமாயின.
# தங்கத்தின் விலையும் கடந்த வாரங்களில் சற்றுக் குறைவாகவே வர்த்தகமாயின.

கடந்த வாரங்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1325 டாலருக்கு வர்த்தகம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 1309 டாலராக இறங்கு முகத்துடன் பயணிக்கிறது.

# தென்னிந்தியாவில் சிமெண்ட் வர்த்தகம் 17 விருந்து 20 சதவிகிதம் விலை உயர்ந்தே விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் சிமெண்ட் விற்பனையின் மாத வருமானம்  5% உயர்ந்திருந்தது.
# தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஒருங்கமைப்புக்குழு NPPA 105 நிறுவனங்களின் மருந்துகளின் விலையை 80% குறைத்து விற்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் பட்டியலிடப்படாத புற்றுநோய்களுக்கான மருந்துகளின் விலையை கட்டுக்குள் வைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் குறைந்தபட்சம் 105 கோடி ரூபாய் வாடிக்கையாளர்கள் மிச்சப்படுத்த முடியும் என அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வுகளின் தாக்கம் இந்த வாரங்களிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தில் முதல் திங்கட்கிழமையின் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடனே காணப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50  0.66%, பிஎஸ்இ சென்செக்ஸ் 0.55%, நிஃப்டி வங்கி 0.95% என உயர்ந்து பங்கு வர்த்தகம் பயணப்பட்டது.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் 36063.81 எனவும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50 10863.50 புதிய உச்சத்தை தொட்டு புதிய ஏற்றத்துடன் முடிந்தது.
தேசிய பங்குச்சந்தை நிப்டியில்  பின்வரும் பங்குகள் நேற்று திங்கட்கிழமை அதிகமாக  வர்த்தகமாகின.

எஸ் பேங்க். டிசிஎஸ். ரிலையன்ஸ். பார்த்தி ஏர்டெல். எஸ்பிஐ.
அதேவேளையில் இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸிலும் பின்வரும் பங்குகள் அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாயின.
ஐசிஐசிஐ வங்கி. எஸ் பேங்க். ரிலையன்ஸ். டாட்டா மோட்டார்ஸ். பார்த்தி ஏர்டெல் என நேற்றைய பங்குச் சந்தையில் அதிகபடியான பங்குகள் வர்த்தகமாகி முதல் 5 இடத்தை மேல் உள்ள பங்குகள் இடம்பிடித்துள்ளன.

நேற்றைய வர்த்தக நாளில் தேசிய பங்குச்சந்தை நிப்டியில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்த கம்பெனிகளாக கீழ்வரும் நிறுவனங்களின் பங்குகள் பிரதானப்படுகின்றன.

ஜீ என்டர்டைன்மென்ட். எச் பி சி எல், எஸ் பேங்க், இந்தஸ்இந்த் வங்கி, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் முறையே இரண்டிலிருந்து நான்கு சதவிகிதம் லாபங்களை ஒரே நாளில் கொடுத்துள்ளன.

நேற்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தை நிப்டியில் நஷ்டத்தை சந்தித்துள்ள பங்குகளின் விபரங்கள்.

பார்த்தி ஏர்டெல். பஜாஜ் ஆட்டோ. ஆக்சிஸ் பேங்க். ஏசியன் பெயிண்ட். யு பி எல் போன்ற பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 0.89 சதவிகிதத்திலிருந்து 3.27 சதவிகிதம் வரை முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தன.
நேற்றைய பங்கு வர்த்தகத்தில் இறுதி நேர முடிவின் படி
இந்திய ரூபாய்க்கு எதிரான
அமெரிக்க டாலரின் மதிப்பு 71.167
பிரிட்டன் பவுண்ட் 94.38
தங்கம் 0.6% உயர்ந்து சவரன் ரூபாய் 32,370.00 எனவும்
வெள்ளி 0.87% குறைந்து கிலோ ரூபாய் 38,696.00 எனவும் வர்த்தகமாயின.

05.03.2019 இன்றைய வர்த்தக செய்திகள்.

இந்திய விமான குத்தகை ஒப்பந்தத்தின்படி. விமான  உரிமையாளர்களுக்கும் விமான நிலையங்களுக்கும் சரியான தொகையைகொடுக்காமல், குறைவான வாடகை தொகையை செலுத்தியதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கூடுதல் நான்கு விமானங்கள் தரையிரக்கப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL). மென்பொருள் நிறுவனமான சி-ஸ்கொயர் மென்பொருள் பிரைவேட் லிமிடெட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சர்வீஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி கிராப் ஏ க்ரூப் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை வாங்கியுள்ளது.

இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராகவும், தலைவராகவும் கிரண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

லார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் ஜெர்மனியின் ஹம்பர்க், நீல்சன் + பார்ட்னர் எண்டர்மென்ஸ்மண்டேட்டர் GmbH இன் 100% பங்குகளையும், அது அடையாளப்படுத்திக் கொண்ட துணை நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி கர்நாடகா வங்கிக்கு ரூ. 4 கோடி அபராதம் விதித்துள்ளது.

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா தனது பங்கு விலையை ரூ. 37.25 என நிர்ணயித்துள்ளது.   இதன் மூலம் ரூ. 2,560 கோடிக்கும்  அதிகமான பங்குகளையும் சேர்த்து மொத்தமாக 68,72,48,322 ஈக்விட்டி பங்குகளின் மூலம் தனது பங்கு வர்த்தக மூலதனத்தை உயர்த்தியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு  ஹஸ்முக் ஆத்யா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் பிப்ரவரி மாதத்தின் விற்பனை 2 சதவீதம் குறைந்து 6,17,215 யூனிட்களாக வர்க்கமானது.

கொச்சின் ஷிபியார்ட்: கம்பெனி 4,  8000 டி சிறிய ரக போக்குவரத்து கட்டுமான வாகனங்களுக்காகவும் மற்றும் விநியோகத்திற்காக மும்பை, உப்கர்ஷர் அட்வைசர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை, (JSW குழுவின் ஒரு பகுதி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிப்ரவரி 2018 ஒப்பிடும் போது 2019 பிப்ரவரி மாதத்தில் 2,90,673 யூனிட்டுகள் அதிக விற்பனை செய்யப்பட்டு 3% விற்பனை உயர்ந்துள்ளது. 2019 பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2,99,353 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.