காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குறைபாட்டு திறன் கொண்டவர் என, விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.

டிஸ்லெக்சியா: விமர்சித்த மோடி

உத்தரகாண்டில் உள்ள ஐஐடி கல்லூரியில் ”ஸ்மார்ட் இண்டியா ஹெகத்தான்” என்ற நிகழ்ச்சி கடந்த 2 ஆம் தேதியன்று நடை பெற்றது. இந்நிகழ்சியில்  காணொளி காட்சி மூலம் கலந்து கொண்ட மோடி, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார்.

அப்போது, மாணவி ஒருவர் , ”டிஸ்லெக்சியா எனும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை சரியான பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் படிக்கும் மற்றும் எழுதும் திறனை அதிகப்படுத்த முடியும். அதற்கு நான் சில கற்கும் முறைகளை வைத்துள்ளேன்” என்று கூறினார். மாணவி பேசிக்கொண்டிருக்கும்போது, இடைமறித்த மோடி ”அந்த பயிற்சி 40-50 வயதினருக்கானதாக இருந்தால் அது அவர்களுக்கு பயனளிக்குமா?” என மறைமுகமாக ராகுலின் வயதை இணைத்து கேட்க அரங்கத்தில் இருந்த மாணவர்கள்  அனைவரின் மத்தியிலும் சிறிப்பலை எழுந்ததது.

அதற்கு பதிலளித்த அந்த மாணவி, ஆம் கண்டிபாக பயனளிக்கும் எனக் கூறினார். மீண்டும் இடைமறித்த மோடி ”அது சரியானதாக இருப்பின் அது அந்த குழந்தையின் அம்மாவிற்கு மகிழ்சியானதாக இருக்கும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் அவரின் தாயார் சோனியா காந்தியையும் மறைமுகமாக விமர்சித்தார். இதனால் மீண்டும் அந்த அவையில் சிரிப்பலை எழுந்தது.

குவியும் கண்டனங்கள்

இதன் மூலம் ”டிஸ்லெக்சியா” எனும் குறைபாடு உள்ள குழந்தைகளையும், ஊனமுற்றோர்களையும் பிரதமர் மோடி இழிவிபடுத்தி உள்ளதாக சமூக ஊடகங்களிள் கண்டன குரல்கள் எழுந்துவருகின்றன. மேலும் ஒரு மாணவியின் கண்டுபிடிப்பை சரியாக கவனிக்காமல் அதை வைத்து ஊனத்தை கிண்டல் செய்ததற்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் வருத்தமான மற்றும் வெட்க்கப்படகூடிய செயலை பிரதமர் செய்துள்ளார் எனவும், பிரதமரின் பேச்சு ஊனமுற்றவர்களையும் டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளவர்களையும் மிகவும் வருத்தப்பட வைக்கும் எனப் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்திற்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியை நொண்டி அரசு என கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

– ர.ரங்கநாதன்