33-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைப்பெற்ற நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி  என்பது  15 சதவீதமாகவும், மலிவு வீடுகளுக்கான ஜி.எஸ்.டி 8 சதவீதமாகவும் இருந்து வருகின்றது. இதனால் பலருடைய சொந்த வீடு கனவு என்பது நனவாகாமல் இருந்தது.

இந்நிலையில் அருண்ஜெட்லி தலைமையில் 33-வது  ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று கொண்டிருக்கும்போதே வாங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜி.எஸ்.டி  12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மலிவு விலை குடியிருப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 8 சதவீத ஜி.எஸ்.டி வரி என்பது ஒரு சதவீதமக குறைக்கப்பட உள்ளது. இந்த வரிக்குறைப்பு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கட்டுமானத்துறை நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து அவர்கள், ஜி.எஸ்.டி வரி குறைத்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை, இதனால் விற்காமல் தேக்கநிலையில் இருக்கும் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் விற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.