பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை வெளியிடப்பட்டுள்ளன. இதில், 95% சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்புக்கான 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட பொதுதேர்வு கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று (மே 8) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 95% சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவிகள் 96.5% சதவீதமும், மாணவர்கள் 93.3% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 98.09% சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 97.90% சதவீத தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 97.60% சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக 2,634 பள்ளிகள் 100% சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 11ஆம் வகுப்பு பொதுதேர்வில் அரசுப்பள்ளிகள் 90.6% சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 96.9% சதவீதம் தேர்ச்சியும், மெட்ரிக் பள்ளிகள் 99.01% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

மொழிவாரியாகத் தேர்ச்சி விகிதம்:

மொழிப்பாடம்: 97.5%

ஆங்கிலம்: 97.6%

கணினி அறிவியல்: 98.2%

இயற்பியல்: 94.6%

வேதியியல்: 95.7%

உயிரியல்: 97.1%

கணிதம்: 96.9%

தாவரவியல்: 91.1%

வணிகவியல்: 97.7%

கணக்குப்பதிவியல்: 97.7%

வரலாறு: 95.1%

விலங்கியல்: 93.0%

மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.