எஸ் வங்கியின் பங்குகள் 10 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் 2019 காலாண்டில் லாபத்திற்குத் திரும்பியது எஸ் வங்கி, ஆனாலும் எஸ் வங்கியின் புதிய தலைமை நிர்வாகி ரவ்னீத்கில் கடன் வழங்குநர்களின் அறிக்கைகளைக் கூர்ந்து ஆராய்ந்ததில். சொத்துக்களின் தரம் குறைந்து இருப்பதாக அறிவித்தார். இதனால் எஸ் பேங்கின் பங்குகள் விலை இன்று கடுமையாக சரிந்துள்ளது.
வங்கியின் மொத்த செயல்படாத சொத்துக்களின் விகிதம் முந்தைய காலாண்டில் 3.22 சதவீதத்திலிருந்து 5.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நிகர NPA விகிதம் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 1.86 சதவீதமாக இருந்தது. அது தற்போது 2.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வங்கியின் மோசமான கடன்கள் 53 சதவீதம் உயர்ந்து ரூ.12,092 கோடியாக உள்ளது இருந்தாலும், வங்கியில் இன்னும் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு சாத்தியமாக வரக்கூடிய கடன்கள் உள்ளதாகவும் இது முதலீட்டு தர வெளிப்பாடுகளில் ரூ.29,000 கோடிக்கு மேல் எக்ஸ்ப்ளோஷரைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் காலாண்டில் இரண்டு பெரிய தர நிறுவனங்கள் கொடுத்த கீழ் குறியீடுகளால் வங்கியின் செயல்பாடுகள் இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறது எஸ் வங்கி.
தனியார் வங்கியான எஸ் வங்கியின் பங்குகள் என்எஸ்இயில் 10.4 சதவீதம் குறைந்து ரூ.88.10 ஆக வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.