வார இறுதி வர்த்தக தினமான இன்று பிளாட்டான வர்த்தக குறியீட்டோடு 11,800 க்கும் குறைவாக நிஃப்டி தொடங்கியது.

சென்செக்ஸ் 158.12 புள்ளிகள் குறைந்து 39371.60 புள்ளிகளில் தொடங்கியது.

சுமார் 580 பங்குகளின் விலை உயர்ந்தும் , 864 பங்குகளின் விலை சரிந்தும், 75 பங்குகளின் விலை மாறாமலும் உள்ளன.

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களை 0.25 சதவீதமாகக் குறைத்தபின், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 69.26 ஆக உயர்ந்துள்ளது.

எம்பஸி குழுவிற்கு தனது பங்குகளை விற்பனை செய்த பிறகு, இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்தன.

குஜராத் சூரியசக்தி பூங்காவில் 75 மெகாவாட் சூரியமின் சக்தி திட்டத்தை ஜிபிசிசி நிறுவனம் நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது

ரிலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமானது ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸட் மேனேஜ்மென்ட்டின் 13.82கோடி மதிப்புள்ள பங்குகளை கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

விப்ரோ, இந்தியா புல்ஸ் ரியல், ஜஸ்ட் டயல், சிஐடியன், கிரெடிட் ஆக்சஸ், ஜேஎஸ்டபில்யு ஸ்டீல் நிறுவனங்களின் செய்திகள் இன்று வெளியிடப்படுகிறது.