3. திக்குத் தெரியாத உலகில்

டாக்கா பெண் குரல்கள் :

“ நீங்க சொல்றதெல்லாம் பயமா இருக்கு. ஒண்ணுமே தெரிஞ்சுக்காம இருக்கறது எவ்வளவு நல்லது”

வங்கதேசம்- டாக்காவில் வசிக்கும் பெண்களைச் சந்தித்தபோது பாலின பேதம் சார்ந்த வன்முறை குறித்து கலந்தாலோசித்து விடை பெற்றோம். ஒரு தன்னார்வக் குழுவைச் சார்ந்தவர் 3000 பெண்களை இது குறித்துப் பேட்டி கண்டிருக்கிறார். அதில் 83% பெண்களுக்குப் பாலியல் சார்ந்த வன்முறை குறித்து எதுவுமே தெரிந்திருக்கவில்லை 81% பெண்களுக்கு வன்முறை எதிர்ப்பு கமிட்டியின் செயல்பாடுகள் தெரியவில்லை. அதில் 19 சதவீதம் பெண்கள் வேலை இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் எதிர்கொண்ட முக்கியமான விஷயம் இதுகுறித்த ஆலோசனைக்கும் ஒத்த வேலையிடத்தில் வன்முறை பல விதங்களில் ஏற்பட்டிருக்கிறது. தொழிற்சாலை நிர்வாகத்திலிருந்து ஒத்துழைப்பு இல்லாதது முக்கியச் சிக்கலாக இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பின்னலாடை துறையில் வேலை செய்யும் பெண்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்கள் ஒன்று உதவி எண்கள் 181, 112, காவலன் ஆப் போன்றவற்றின் செயல்பாடுகள் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டார்கள். சில பெண்கள் தங்களுடைய அனுபவங்களைச் சொல்லும்போது 90 சதவீதத்திற்கும் மேலான பெண்கள் முறைசாரா தொழிலில் ஈடுபடுவதாகவும் எந்த வேலை உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிவித்தார்கள். அதில் ஒரு பெண்மணி பாலியல் துன்புறுத்தல் இருந்ததாகவும் அதுவும் அதில் மேலாளரை உடன்படிக்கை உருவாகும்போது அவர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றிச் சொன்னார். பல பெண்கள் இதுபோன்ற விஷயங்களை வெளியில் சொல்வதற்கு மற்றவர்கள் பயப்படுவதாக குறிப்பிட்டார்கள். மேலாளரும் சூப்பர்வைசர் பதவி உயர்வு அல்லது வேலை நேரம் சார்ந்து அவர்களை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டார்கள். இந்தப் புகார் அளிக்கும் குழுவில் குறைந்த நபர்கள் இருப்பதும் அதில் பெண்கள் சரிவர தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்து கொள்ளாமல் இருப்பதும் ஒரு குறைபாடு என்று சொல்லிக்கொண்டார்கள்.

அட்டைப் பெட்டிகளை அடுக்குவது, அவற்றை ஓரிடத்தில் வைப்பது போன்றவை சிரமமான உள்ளன. அந்த அட்டைப்பெட்டியில் உயரத்திலிருந்து விழுந்து பல பெண்கள் காயம் ஏற்பட்டு இருப்பதைச் சொன்னார்கள். கழிப்பறைகளும் ஓய்வு அறைகளும் மிக குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் அவற்றின் பராமரிப்பு மோசமாக இருப்பதாகவும் சொன்னார்கள். குழந்தைகள் காப்பகங்கள் சிறப்பாகச் செயல்படுவதாகச் சொன்னார்கள். தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் பள்ளியிலிருந்து இடைநிலையில் வெளியேறி அவர்கள் இருந்ததாகச் சொன்னார்கள் அல்லது ஐந்தாவது அல்லது எட்டாவது மட்டும் படித்திருந்தார்கள். தங்கள் குழந்தைகளின் படிப்பைக் கருதி பல பெண்கள் குழந்தைகள் இடம் இருந்து பிரிக்கப்பட்டு இருப்பது வேதனை வைப்பதாகச் சொன்னார்கள். பெரும்பாலான கணவர்கள் பெண்கள் வேலைக்குச் செல்வதை விரும்புகிறார்கள். வீடு வர தாமதமாகிவிட்டால் சந்தேகப்படுகிறார்கள். அதில் பல பெண்கள் தன்னுடைய மீதி வாழ்க்கையை டாக்காவில் கழிப்பதற்கு விரும்பவில்லை என்று சொன்னார்கள். நகரத்தின் சிக்கல்களும் பிரச்சனைகளும் அவர்களைப் பாதித்திருக்கின்றன குழந்தைகளின் படிப்பு முடிந்த பின்னால் தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவதாகவும் அங்கு சென்று விவசாயம் செய்ய விரும்புவதாகவும் சொன்னார்கள். அதில் ஒரு பெண் அவளுக்கு சூப்பர்வைசர் பதவி தரப்பட்டதாகவும், ஆனால் குறிக்கோள் அல்லது உற்பத்தி அவ்வளவு தரமுடியாது என்று மேலாளர் அவளை அந்த வேலையில் தொடர செய்ய விரும்பவில்லை என்றார்.

மத ரீதியான எந்த வேறுபாடும் தங்களுக்குள் இல்லை. மோசமாக அழைக்கப்படுவதில்லை. ஓரளவு ஆண்கள் மதிப்பதாக அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். பாலின வேறுபாடு பற்றி தன்னார்வ குழுயினர் தரும் தகவல்களை அவர்களுக்கு மனதில் அஞ்சுவதாகவும் அவற்றை மனதில் கொள்வதாகவும் சொன்னார்கள்.

எங்களின் கலந்துரையாடலின்போது தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளில் முன் நடைபெறும் போராட்டங்கள் பற்றி ஒரு குறிப்பு வந்தது. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி பெண்கள் ஆரத்தி எடுத்து ஒருவகைப் போராட்டத்தை நடத்தினர். மதுக்கடைக்கு வந்தவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆரத்தியும் எடுத்தனர். இது ஒரு வகையில் எளிமையான போராட்டமாக இருந்தது. ஆனால் இந்த இனிமையான போராட்டம் மட்டும் போதுமா பயன் தருமா என்பது ஒரு வகை நக்கலான சிரிப்புடன் பலரின் பேச்சில் அடிபட்டது. டாக்காவைப் பொறுத்தவரை மதுபான தடை என்பது அங்கு இருக்கும் ஆண்களைக் காப்பாற்ற பயன்பட்டு இருக்கிறது என்று பெண்கள் சொல்ல ஆரம்பித்தனர்.

அப்போது பெண்கள் முன்னெடுத்த பல போராட்டங்கள் பற்றி நினைவுக்கு வந்தது. தமிழகத்தைப் போலவே கர்நாடகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சென்ற ஆண்டில் பெண்கள் ஒரு பயணத்தை மேற்கொண்டனர் அதில் வாகனம் மோதி 55 வயது ரேணுகா என்பவர் இறந்து விட்டார். ஆனால் அந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பமாக இருந்து மற்றவர்கள் அந்த மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு நடை பயணத்தைத் தொடர்ந்தனர். புல்வாமா தாக்குதல் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தைக் கொண்டுவந்தது அப்போது இரண்டு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் சமூக வலைத்தளங்களில் போர் வேண்டாம் எங்களுக்கு அமைதி வேண்டும் என்று தொடர்ந்து தங்களுடைய பதிவுகளை வெளியிட்டனர் உமன் அகின்ஸ்ட் வார், உமன் பார் குட் போன்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரவின.

தமிழகத்தில் இன்னுமொரு போராட்டம் மருத்துவர்களின் வேலைப்பளு குறித்து இருந்தது. தமிழகத்தில் மருத்துவ உயர்கல்வி படிப்பில் அரசு பணியில் இருப்பவர்கள் 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் அரசு பணியில் இருப்போர்க்கு 50 சதவீத இட ஒதுக்கீடும் அமல்படுத்த வேண்டும் குறிப்பிட்ட மருத்துவர்கள் என்றில்லாமல் நோயாளிகளில் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் செவிலியர்கள் படுக்கை மருத்துவ கருவிகள் போன்றவற்றை தருவதும் சீர்படுத்தும் உள்ளிட்ட ஒரு பெரும் போராட்டம் தமிழகத்தில் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. கேரளத்தில் வனிதா மஹால் நாட்டின் கவனத்தை திருப்பியது பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கான உரிமை தங்களுக்கு உண்டு என்ற முழக்கத்தை வைத்தனர்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிற்கு கைகோர்த்து நின்று தங்கள் கோஷங்களை முழக்கினர். தெலுங்கானாவை பொருத்தவரை அங்கு சுமார் 50000 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அந்த ஊழியர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக காலிப்பணியிடங்களை நிரப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன .ஊதியங்களை திரும்பப் பெறுவது ஊழியர் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50,000 போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள் அமெரிக்காவின் கருக்கலைப்பு சார்ந்த சர்ச்சை எப்போதும் எழுவதுண்டு போப்பின் கருத்துக்கள் பல சமயங்களில் கருக்கலைப்பு சம்பந்தமாக சர்ச்சைக்குரியதாகவும் மாறியிருக்கிறது.அமெரிக்காவின் பல மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை இருக்கும் இந்நிலையில் அலபாமா மாகாணம் கருக்கலைப்புக்கு சென்ற ஆண்டு தடை விதித்தது .இதை எதிர்த்து பெண்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாகாணத்தின் முக்கியமான அம்சம் அங்கு உள்ள மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேலாக பெண்கள் இருக்கிறார்கள். செனட் சபையில் 40 பேரில் நான்கு மட்டும் பெண்கள் இருக்கிறார்கள் .பெண்களிடம் கருத்து கேட்காமல் அவருடைய உரிமையில் தலையிடுவதை எதிர்த்து ஒரு பெரும் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் அங்கு நடந்து கவனத்துக்குரியது. பாலின வேற்றுமை சம உரிமை சம ஊதியம் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் கேட்டு முப்பது ஆண்டுகளுக்கு முன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராடினார்கள் இது நடந்து முடிந்து முப்பது ஆண்டுகள் முடிந்தும் இன்னும் அங்கு சம ஊதியம் என்பது கனவாக இருக்கிறது சம உரிமை சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .இந்தியாவில் இது சார்ந்த கோரிக்கைகள் ஓரளவு நிறைவேற்றப்பட்டாலும் நடைமுறையில் அவை தரப்படுவது இல்லை என்பதும் கவனத்துக்குரியது

எங்கு இல்லை பெண்களின் பிரச்சினைகள். எங்கும் எங்குமாக நிறைந்திருக்கிறது.

டாக்கா பற்றிய பெண்களின் குரல்களைக் கேட்டோம். அங்கு பிறந்து வளர்ந்த ஒரு பெண் கவியின் குரல் கீழே:

டாக்கா: நஸ்லிமா நஸ் ரீனின் கவிதைகள்:

டாக்கா:

இது எனது நகரம் இல்லை.

என்னுடையது என ஒருபோதும்

நான் சொல்லிக் கொண்ட மாதிரியிலான நகரம் இல்லை இது.

குள்ளத்தனமான அரசியல்வாதிகளுடையது

இந்த நகரம்

பழிவாங்களுக்கு அஞ்சாத வியாபாரிகள்,

சதை வியாபாரிகளின்.,

கூட்டிக்கொடுப்பவர்களின், பொறுக்கிகளின்,

வன்புணர்வானவர்களின் நகரமேயல்லாது இது

அது எனது நகரமாக இருக்க முடியாது.

சந்தர்ப்பவாதிகளின் நகரம் இது.

இதனை இனி ஒரு போது

எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்.

இனி ஒரு போதும்.

(யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்ப்பு)

முந்தைய தொடர்கள்

2.பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள் – https://bit.ly/2vysACp
1.வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு – https://bit.ly/33wiGhg

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
  2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
  3. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
  4. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
  5. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
  6. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
  7. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
  8. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
  9. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
  10. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
  11. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
  12. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
  13. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
  14. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
  15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்