திக்குத் தெரியாத உலகில்
பாலின பேத வன்முறை (Gender Based Violence) – 5

கல்யாணராமன் ஒரு கல்யாண புரோக்கர். கல்யாண விஷயங்களில் நல்ல வருமானம் கிடைத்தபோது தான் அவருக்கு கல்யாணராமன் என்ற பெயர் வெகுவாக பொருந்தி வந்ததாக நினைத்தார். ஓரளவு திருப்தியான வாழ்க்கைதொடர்ந்து கொண்டிருந்தது 13 வயது பெண் ஒருத்தி அவரின் பார்வையில் அகப்பட்டது அதிஷ்டமாக நினைத்தார், கொஞ்சம் வறுமையான குடும்பம், சிரமப்பட்டார்கள், அந்தப் பெண்ணின் அக்கா வேறு 15 வயதில் வேறு சாதிக்காரன் உடன் திருமணம் செய்துகொண்டாள். அது அந்தப் பெற்றோர் அவரை ரொம்பவும் சிறுமைப்படுத்தியது வரதட்சணை என்று எதுவும் தர முடியாது. விவசாய கூலிகள் அவர்கள். இந்தப் பெண்ணும் ஜாதியைவிட்டு திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் அக்கறை கொண்டு 40 வயது திருப்பூர்க்காரர் ஒருவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள் . பின்னலாடை துறையில் வேலை.

ஒருநாள் கல்யாணராமன் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு விளங்கவில்லை யார் நீங்கள் எதற்கு கைது செய்கிறீர்கள் என்று கேட்டார். மாவட்ட நீதிமன்றம் குழந்தை திருமணத்தைத் தடுத்துநிறுத்த ஆணை வழங்கும் பிரிவு 11 கீழ் கைது செய்கிறோம் என்றார்கள். பயந்து போய்விட்டார் கல்யாணராமன்… அப்போதுதான் குழந்தை திருமணம் என்பது அவருக்கு தெரியவந்தது அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர் உடுமலையில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்துவந்தார். அப்பா இல்லை அம்மாதான் ஒரு நாள் அந்தக் குடும்பத்தில் 15 வயதுப் பெண்ணை அவள் இரவில் கரும்புக் காட்டின் ஓரமாய் இருந்த வீட்டில் கட்டில் போட்டு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவளைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய் ஒரு இருபது வயது பையனுக்கு திருமணம் செய்துவிட்டார்கள். அந்த விதவை தாய்க்குச் செலவுசெய்து திருமணம் செய்துவைக்க முடியவில்லை. பஞ்சாயத்து சமாதானம் பேசி ஒத்துக்கொள்வார்கள். தூக்கிக்கொண்டு போய் அந்தப் பெண்ணை தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்து செய்த இளைஞனை திருமணம் செய்துவைத்து விட்டார்கள். அந்த விதவை தாய்தான் கல்யாண ராமனிடம் விவசாயக் கூலியைப்பற்றி சொல்லி தங்களின் உறவினர் திருப்பூர்க்கார்ருக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டு 40 வயது திருப்பூர் காரருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் அதெல்லாம் குழந்தை திருமணத்தில் வரும் என்று கல்யாணராம்னுக்கு தெரியாது.

குழந்தைகள் உரிமைகளும் மனித உரிமைகள். குழந்தைகள் என்பவர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று முன்பு சொல்லப்பட்டது சமீபத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இளம் சிறார் நீதி சட்டம் 2000 குழந்தைகள் என்பவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்ற விளக்கத்தைத் தருகிறது. மனிதகுல வரலாற்றில் முதல்முறையாக குழந்தைகளின் மனித உரிமைகளை அங்கீகரித்து உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டம்தான் குழந்தைகள் உரிமை மீதான உடன்படிக்கை. 1989இல் உலகளவில் கொண்டுவரப்பட்டது 1992இல் அதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18. ஆணின் திருமண வயது 21. இந்த வயதிற்குள் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாகும். திருமணம் செய்துகொள்ளும் இரண்டு பேரில் யாராவது ஒருவர் குழந்தையாக இருந்தாலும் அல்லது இருவருமே குழந்தையாக இருந்தாலும் அது குழந்தை திருமணம். கடைசி நேரத்தில் கல்யாணராமன் விசயம் தகவல் வந்தது போலத்தான் இந்தமாதிரி திருமணங்கள் குறித்து தகவல்கள் தாமதமாகத் தெரியவருகின்றன.

தர்மபுரி போன்ற பிற்பட்ட மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அதேசமயம் குழந்தை திருமணம் என்பதும் அதிகமாக நடக்கிறது இதைச் செய்வதில் பல பின்னணி உள்ள பெரிய மனிதர்களும் இருக்கிறார்கள். காவல்துறை, நீதிபதிகள் உதவியுடன் இவ்வகை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன, அப்படி நடைபெறும் திருமணங்கள்பற்றி தகவல் வந்தாலும் அந்தப் பெண் பையனுக்கு எதிராக எந்த வாக்குமூலம் தரக்கூடாது என்று மூளைச்சலவை செய்யப்படுகிறார், தற்காலிகமாக விசாரணையின்போது தாலி கட்டிய மஞ்சள் கயிறு, தங்க தாலியைக் கழட்டிவைத்து விடுகிறார்கள்.

பெண் குழந்தை வேண்டாம் என்று நிராகரித்து அதிலிருந்து ஆரம்பிக்க இந்த முறை பிறகு திருமணம் செய்து அவர்களை விட்டுவிட்டு வெளியேறி விட்டால் போதும் என்று பெற்றோர்களும் இருக்கிறார்கள். 1929இல் குழந்தை திருமணம் பற்றிய ஒரு சட்டம் வந்தது. உலக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நடக்கின்றன. 2006 – 2012இல் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பைத் தருகின்றன. இது குறிப்பிட்ட ஜாதிக்குள் என்றில்லை.

கல்யாணராமனைப் போலவே கீர்த்திவாசன் ஒரு கல்யாண புரோக்கர், அவர் 35 வயது ஆணுக்கு ஒரு பெண் தேடினார். 16 வயது பெண் பள்ளிக்கூடத்திற்குப் போய்க்கொண்டிருந்தாள் அகப்பட்டாள். ஆணின் ஜாதியில் பெண் விகிதம் குறைந்துவிட்டது. அந்த ஜாதியில் பொண்ணு கிடைக்கவில்லை வயசு வர வேற ஆயிட்டு போகுது என்று புரோக்கர் கீர்த்தி வாசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தரப்பட்டது. அவர் அலைந்து கண்டுபிடித்து ஒரு பெண்ணைக் கட்டி வைத்துவிட்டார் வறுமை காரணமாக பெண்கள் தங்கள் வீட்டில் இருக்க வேண்டாமென்று இரண்டுபெண்களை ஒரு இளைய பையனுக்கு திருமணத்தைச் செய்துவைத்த கதைப்பற்றி கிருஷ்டிராஜ் இயக்கிய பலிபீடம் போன்ற குறும்படங்கள் சொல்கின்றன. 1891இல் ஆங்கிலேயர் கொண்டு வந்த நடவடிக்கைகள் கேரள மலபார் பகுதிகளில் ஐந்து வயதில் திருமணங்கள் நடப்பதற்குத் தடையாக இருந்தன. ஆனால் சம்பிரதாயம் சடங்குகள் மதரீதியான காரியங்களில் ஈடுபடுவதாகச் சொல்லி அப்போதெல்லாம் பெரிய அளவில் எதிர்ப்பு வந்தது.

1930இல் முத்துலட்சுமி ரெட்டியார் மருத்துவமனையில் இருந்தபோது இதுபோன்ற குழந்தை திருமணத்தின்போது சிறுமிகள், பெண்கள் – அவர்களின் பிரசவத்தைப் பார்த்து அவர்களின் அழுகையும் வேதனையும் கொண்டுவந்த பாதிப்பு அவருக்குப் பெண்கள் சீர்திருத்தத்தில் அக்கறைகொள்ளவைத்தது.

அப்பாவும் அம்மாவும் சிரமப்பட்டுதான் பெண்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சி செய்கிறார்கள். எபினேசர் தன்னுடைய பெண்ணைக் கல்லூரிக்கு அனுப்புவதற்காக தினமும் அவளைக் கூட்டிக்கொண்டு பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று பேருந்தில் வழியனுப்பி வைப்பார். மூன்று நாள் காய்ச்சல் ஆகி எபினேசர் வீட்டில் கிடந்தார். அந்த மூன்று நாளில் அந்த குறிப்பிட்ட பேருந்தில் பயணம் செய்தபோது நடத்தனுருக்கும் எபினேசர் மகளுக்கும் காதல் உண்டாகியிருக்கிறது. தினந்தோறும் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். டிக்கெட் 10 ரூபாய்தான். மூன்று நாளில் 60 ரூபாய் செலவில் அந்தப் பெண்ணை பேருந்து நடத்துனர் வீழ்த்திவிட்டார் .ஒரு நாள் கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிபோன கணேசனின் பெண் திரும்பவில்லை. அவருக்குப் பெண் இப்படி வீட்டைவிட்டு சென்றுவிட்டாள் என்று தெரிவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆனது. பெற்றோர்களை இப்படிப் பெண்களும் சுலபமாக ஏமாற்றுகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம் அதில் ஒரு விவசாய குடும்பம் வறண்டுபோன தோட்டத்திற்கு மத்தியில் வாழ்கிறது. கைபேசி வாங்கிக் கொடுக்க வசதி இல்லாத குடும்பம். உயர்நிலை பள்ளிக்குப் போகும் பெண் கைபேசி கேட்கிறாள் ஆனால் வாங்கித் தருவதில்லை ஒருநாள் அந்தப் பெண் புத்தகத்தினுள் ஒரு கைபேசியை வைத்து இருப்பதை அப்பா கண்டுபிடிக்கிறார். அம்மாவும் கேட்கிறாள் புத்தகத்தில் மறைத்து வைத்து பேசுவதை அம்மாவும் சிலசமயங்களில் கண்டிருக்கிறாள். அப்பா கண்டித்தது வைத்துக்கொண்டு அம்மா தன் பங்காக திட்டித் தீர்க்கிறார். கோபமடைந்த பெண் கையில் கைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே செல்கிறார். அம்மாவும் அம்மணி எங்க போற எங்க போற என்று கேட்டு பின்னாலே போய் இருக்கிறார். ஒரு கிலோ மீட்டர் தாண்டி வந்த பின்னால் அந்தப் பெண் யாருக்கோ தொலைபேசியின்மூலமாக அழைப்பு விடுத்திருக்கிறாள். கொஞ்ச நேரத்தில் புடுபுடு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் அந்தப் பெண்ணிடம் வந்து என்ன கண்மணி என்னாச்சு என்று கேட்கிறார். இந்த அம்மா யாருன்னு தெரியல பின்னாலேயே வருது. தொரத்துது என்று சொல்லியிருக்கிறார் புடுபுடு மோட்டார் வண்டியில் வந்தவன் அந்த அம்மாவை அடிக்கத் தொடங்கிவிட்டான். அதற்குப்பிறகு அந்த புடுபுடு வண்டியில் அந்த பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய்விட்டான். தன் சொந்த அம்மாவையே யார் என்று தெரியவில்லை என்று சொல்லுமளவிற்கு அந்தப்பெண் தன்னை மாற்றிக்கொண்டுவிட்டாள் காதல் போதையால்.

இவ்வகையில் திருமணம் செய்து கொள்ளும் அல்லது வீட்டைவிட்டுச் செல்கிற பெண்கள் பற்றிய காவல்துறை பதிவுகள்குறைவே. பலவற்றில் காவல்துறை காணாமல் போய்விட்டார்கள் என்றுதான் பதிவுசெய்கிறார்கள். பெரும்பாலும் நீதிமன்றத்துக்கும் வழக்கிற்கும் வருவதில்லை. ஏதாவது பிரச்சினை வந்தால் மன்னிப்புக் கடிதம் வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுகிறார்கள்.

படிச்சா ஓடிப்போயிரும் என்று பல கிராமத்துப் பெண்களும் இருக்கிறார்கள். வீட்ல இருந்தா வீட்டு வேலைக்கு ஆகும்… மாடுகளைப் பார்க்கலாம் தோட்ட வேலைக்கு ஆகும்… போற வீட்ல எப்படி இருக்கலாம்னு சொல்லிக் கொடுக்கலாம்… நம்ம மானம் மரியாதையை காப்பாற்றலாம் என்று கிராமத்துப் பெண்களும் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியை மறுத்துவிடுகிறார்கள்.

ஒரு நாமக்கல் மாவட்ட கிராமத்துப் பெண் பக்கம் இருக்கும் ஒரு நகரத்திற்கு வாழ்க்கைபடுகிறாள். கணவன் லாரி ஓட்டுனர் என்பதால் ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் வீடு திரும்பி ஓரிரு நாட்களில் வீட்டில் இருப்பார். பிறகு திரும்பவும் சென்றுவிடுவார் கணவன் ஊரில் இல்லாத நாட்களில் அந்தப் பெண்ணின் மாமனார் அவளின் படுக்கைக்குச் சென்று அவளுடன் படுத்துக்கொள்கிறான். இதை அந்தப் பெண் வெளியே சொல்ல முடிவதில்லை. கணவரிடம் விரிவாய் சொல்ல முடிவதில்லை அப்பாதான் எனக்கு தெய்வம் அப்பாதான் எங்க அம்மா செத்த பிறகு என்ன படிக்கவைத்து வேலைக்கு அனுப்பி என்ன வாழ வச்சிருக்காரு என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்… இதுபோல மாட்டிக்கொள்ளும் பெண்களுடைய கதைகள் நிறைய இருக்கின்றன

குழந்தைத் திருமணத்தில் புகார் செய்த பின்னால் ஆண்கள் சிறைக்குப் போய்விட்ட பின்னர் அந்த சம்பந்தப்பட்ட பெண் அக்கறை எடுப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் விடுதலை கிடைத்துவிடும் என்று தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். அந்தவகை நடவடிக்கைகளில் பெண்கள் நான்தான் கூப்பிட்டன் என்று தைரியமாகவே சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். இளைஞர்களும் வா வா என்று கூப்பிடுறாங்க என்று போய் விடுகிறார்கள் என்கிறார்கள்… வாயைகட்டி நெருப்பக்கட்டியிருந்த மாதிற வைத்திருந்த பொண்ணுக்கு திருமணம் பண்ணி வைக்கிறோம். நீங்க வந்து கேள்வி கேட்கிறாயா. வயசு கம்மி… என்று சில இடங்களில் கேட்கிறார்கள். பெண்களுக்கு சொத்துரிமை தரவேண்டாம் என்று நிராகரிக்கவரையில் பலர் பெண்களை வீட்டுக்கு வெளியே தள்ளிவைத்துவிடுகிறார்கள்….

(இன்னும்)

முந்தைய தொடர்கள்

4.வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி – https://bit.ly/2vxbzIM
3.டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம் – https://bit.ly/3b6jyvB
2.பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள் – https://bit.ly/2vysACp
1.வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு – https://bit.ly/33wiGhg

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
 2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
 3. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
 4. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
 5. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
 6. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
 7. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
 8. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
 9. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
 10. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
 11. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
 12. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
 13. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
 14. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
 15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்