2. திக்குத் தெரியாத உலகில்

வேலையிடத்தில் வன்முறைக்கான உதாரணம், இது பல விதங்களில் உண்மை வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சில சூழல்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்று

கால் சென்டரில் இளமையான திறமையான குழுத் தலைவர் அவர். வேலையில் அவர் கடின உழைப்பாளி அர்ப்பணிப்பான அவர் அவ்வப்போது வேலையை சரியாக முடிப்பவர். ஒரு நாள் மாலை அவளுடைய சக தொழிலாளர்களுடன் அமர்ந்து முக்கியமான வேலையை முடிக்கிறார். அது நீண்ட நாள்… வேலை… இரவு உணவு உண்டு அவளுடன் தங்க முன்மொழிகிறார். காமினி நாகரீகமாக தீர்க்கமாக மறுத்துவிட்டு வீடு செல்கிறாள். ஆனால் மாலை ரவி மறுபடியும் அவள் மறுத்து மீண்டும் கேட்கிறான் மிரட்டுகிறான். நீ என்னை அனுமதிக்காவிட்டால் நீ என்னோடு இருந்தாய் என எல்லோரிடமும் சொல்வேன் என்கிறார். வேலை இடத்தில் பாலியல் துன்புறுத்தல் இதற்காக அது என்றால் என்ன ஒரு நபர் தன்னுடைய பாலியல் தேவைக்குச் சாதகமாக இல்லை என்பதற்காக அவனுக்கு இனி விளைவிக்கும் செயல்களைத் தவிர்த்து செயல்களைச் செய்வது … உடனான நடத்தை விரும்பப்படாத பாலியல் மற்றும் காமினி வாழ்க்கையில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியது

இரண்டு

ரேணுகா சமையல் தவிர பிற வீடு பராமரிப்பு வேலைக்காக அமர்த்தப்பட்டு இருக்கிறாள் பெரும்பான்மையான நாட்களில் அந்த வீட்டுப் பெண் சீக்கிரமே கிளம்பி விடுவாள் .ரேணுகா தனியாக அந்த வீட்டில் வேலை பார்க்கிறாள் .அந்த வீட்டு ஆண் இருப்பார் .அவர் நோட்டம் விடுவதை கணித்திருக்கிறார். இடுப்பில் மேலாடையின்றி துண்டை கட்டிக் கொண்டு நடமாடிக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக பட்டது ஒரு நாள் அவள் வீட்டை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அவருடைய பின் கீழ்ப்பகுதியை கில்லி இருக்கிறார். அதை அவள் கண்டித்த போது அவன் அந்த வீட்டுப் பெண்ணிடம் அவள் திருடுகிறாய் என்று சொல்லிக் கொடுத்து வேலையை விட்டு நீக்கி விடுகிறேன் என்கிறாள் அவள் வேலையில் நிலைக்க வேண்டுமானால் விரும்பாத உடல் தொடர்பு தொடர்பு கண்டிக்கக் கூடாது இங்கு அவன் வீடு என்ற அதிகாரத்தால் அவள் விரும்பாத செயலை செய்கிறான்

மூன்று

சமீமா ஒரு வக்கீல் 2013ஆம் ஆண்டிலிருந்து ஒரு அரசு சாரா நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்க்கிறாள் டாக்டர் பவன் அந்த நிறுவனத்தின் இயக்குனர். மனித உரிமைக்காக வாதாடும் அவர் அலுவலக களப்பணி பார்வைக்காக இரண்டு நாள் சிம்லா செல்லும் பொழுது சமயம் சமீமாவின் தனிமையைப் பயன்படுத்தி உடலுறவுக்கு அழைக்கிறார். அவளுடைய விருப்பமின்றி அவளை வலுக்கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார் . அவருடைய பிற பெண்களுடனான தற்போதைய முந்தைய உறவுபற்றி பேசுகிறார். அவள் அவனைக் கடிந்துகொண்டு அதற்கு அவன் நடத்தையை பொதுவில் சொல்வேன் என்பதற்கு அவருடைய வேலை வாழ்க்கையை ஒழித்து கட்டுகிறேன் பார் என்கிறார் . இவை அதிகாரத்தால் நடைபெற்றவை.

நான்கு

ஜெயந்தி பெங்களூரு கார்பன் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார் வர்க்கீஸ் ஜெயந்தினுடைய சூப்பர்வைசர் ஏதாவது ஒரு சமயத்தில் அடிக்கடி அவளைத் தொட முயற்சிக்கிறார். உதாரணத்திற்கு அவள் தைத்துக் கொண்டிருக்கும்போது அவருடைய துப்பட்டாவை கொண்டு பின்பகுதியை மறைக்கிறார். ஜெயந்தி விரும்பப்படாத நடத்தை அவரை சக தொழிலாளி சூப்பர்வைசர் அவனை சிறப்பாக கவனிக்கிறார் என கேலி பேசுகிறார் அவர்கள் அனைவரையும் வர்க்கீஸ் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கின்றனர். இது ஜெயந்திக்கு விரோதமான வேலைச் சூழல்.

ஐந்து

சுகி கட்டட வேலை அருகில் இருப்பவர் ஒவ்வொரு நாளும் மதிய உணவு இடைவேளையில் சுகி மரத்து நிழலில் அமர்ந்து 16 மாத குழந்தைக்கு பாலூட்டுவது வழக்கம். அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன் சௌந்தர் சுகி அசௌகரியமாக உணர்கிறாள் அவள் குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது தூரப்போ என்கிறார். இருப்பினும் அவன் அவளுக்கு அருகாமையிலேயே இருப்பதை தொடர்கிறான். பிற சக கட்டிட தொழிலாளர்கள் சிமெண்ட் நிரப்பப் போகும்போதும் மோட்டார் போடப் போகும் போதும் பூனை போன்று கத்துவது விசில் அடிப்பது போன்றவற்றைச் செய்கிறார். அவர் கேள்வி கேட்கும்போது அவர்களின் அலைபேசியில் நகைத்துக் கொண்டு இருப்பதாகச் சொல்கின்றனர். இவையும் ஒருவிதமான பாலியல் துன்புறுத்தல்…

ஆறு

ஸ்வேதா இந்தியப் படையின் தலைவர். அவள் சீனியர் ஆபிசரின் உறவு கோரிக்கையை மறுப்பு தெரிவித்துவிட்டால் ஸ்வேதா இந்த அனுபவத்தோடு அவள் அமைதியாகிவிட்டாள். ஆனால் அந்த சீனியர் ஆபீஸர் நல்லொழுக்கம் அற்றவர் என வதந்தி பரப்பி கொண்டிருந்தார். தற்போது அவள் அவளுடைய சக சீனியர் ஆபீஸ் காரர்களால் தொடர் உறவுக்காக அடைக்கப்பட்டு இருக்கிறாள். ஆர்ப்பாட்டம் செய்த உடன் கூடுதலான உடற்பயிற்சி வாய்ப்பில் இருந்து விலக்கப்பட்டார் இவையெல்லாம் வேலையிடத்தில் விரோதப் போக்கை பாலியல் பாலியல் துன்புறுத்தலை உருவாக்குகின்றன.

ஏழு

மீடியா ஆராய்ச்சியாளர் டாக்டர் புருஷோத்தமன் அந்த மீடியா ஏஜென்சியை நடத்துகிறார். அவர் புகழ்பெற்ற ஜெனரலிஸ்ட் வேலைக்குச் சேர்ந்த முதல் சில மாதங்களில் டாக்டர் புருஷோத்தமன் அவளுடைய வேலையைப்பற்றி பயங்கரமாகப் பாராட்டுகிறார் புருஷோத்தமன் அடிக்கடி ஆஷாவை வேலைக்காக அலுவலகத்திற்கு வரவழைப்பார் பாலியல் உறவுகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். பாலியில்ரீதியான படங்களைக் காட்டி இருக்கிறார். அவருடைய பக்கவாட்டில் உரசி இருக்கிறார். அவள் எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு அவர் அருகாமையில் சென்று ஒரு குழுவாக வேலை செய்யும்போது இதுபோன்ற தொடர்பு இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாது. இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்து விருப்பத்தோடு உறவு கொண்டனர். இருப்பினும் ஒரு தடவை அவள் பாலியல் உறவுக்கு மறுத்துவிட்டாள் அவன் நிறுத்திவிட்டால் தற்போது அவன் அவள் வேலை கேள்விக்குறி. இதனால் அவளை உடன் பணிபுரிவோர் மற்றும் பிற பணியாளர் முன்பு அவமானப்படுத்துவது அவளுக்கு வேலை அளிக்காது ஒதுக்காமல் தனிமைப் படுத்தினார். தானாகவே அவள் வேலையை விட்டுவிலகினார் இவற்றில் பாலியல் உணர்வு விரும்பாதவைப் பாதிப்பு மற்றும் அதிகாரம் போன்றவை வெளிப்படுகின்றன. இது சட்டத்தின் அடிப்படையில் தடுப்பு தடை மற்றும் நிவர்த்தி நடவடிக்கைக்கு காரணிகளாகிறது ( நன்றி : சேவ் உள்ளூர் புகார்கள் கமிட்டி கையேடு)

இந்த மாதிரி அனுபவங்களை ஒரு கவிதையாகச் சொல்லியிருக்கிறேன் கீழே:

*நான் ஒருத்திதான்

ஆனால் எனக்கு நூறு முகங்கள்

ராவணனின் முகங்களை விட எனக்கு அதிக முகம். ஆறுமுகத்தின் முகங்களைவிட அதிகம். என் நூறும் உங்களை கொஞ்சம் பார்க்கச் செய்யும்.

நான் திருமணமாகாதவர், திருமணம் செய்துகொள்ள தேவையான காசும் பணமும் என்னிடம் இல்லை. நான் சம்பாதிப்பதினை வைத்து வாழ்க்கையை வயிற்று நடத்துகிற எனக்கு எப்போது சீமந்தம் என்று என்னைப் பார்க்கிற போதெல்லாம் ஒரு சக பின்னலாடைத் தொழிலாளி கேட்டுக்கொண்டே இருக்கிறார். கேட்பது மட்டுமில்லை கைகளை நீட்டி தொடவும் செய்கிறார், சீமந்ததிற்கு அவர் காரணமாக விரும்புவதுபோல பேசுகிறார். எனக்குப் பல புகைப்படங்களும் பாலியில் விஷயங்களும் கைபேசியில் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. அனுப்புவர் அவர்தான் என்று தெரியும்… ஆனால் எதற்காக, யாரிடம் கேட்பது, சொல்வது என்று தெரியவில்லை. எங்கள் அலுவலகத்தின் கழிப்பறையின் கதவுகளில் உள்புறத்தில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள், பாலியல் உறுப்புகள் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள், இவையெல்லாம் இன்னொரு வகையான தாக்குதலாக இருக்கிறது. என் சூப்பர்வைசர் என்னை அழைத்துப் பாராட்டுகிறார்… முதுகில் தட்டுகிறார், வார்த்தையில் கூட அவர் பாராட்டை தெரிவிக்கலாம். கம்பெனி நிர்வாகி அடிக்கடி கூப்பிடுறார். என் மேல் விழும் மழைத்துளி சந்தோசப்படுத்தும்.

அவரின் அச்சில் தெறிப்பு எரிச்சலூட்டுகிறது. அவரும் என்னை வேறு மாடிக்கு அழைக்கிறார். ஒருநாள் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்கும்போது மார்பகத்தைத் தொட்டு விட்டு சென்றவர் யார் என்று தெரியவில்லை. நான் பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் என் மேலாடையை இழுக்கிறார்கள். படுக்க எப்ப வர்ற என்று கேட்கிறார்கள்.

எனக்கு நூறு முகங்கள்

ராவண முகங்களை விட அதிகம். ஆறு முகங்களை விட அதிகம். குவாலிட்டி மேனேஜர் அறைக்குள், என் சக தோழிகள் சென்று ரகசியமாக பேசுகிறார்கள். என்ன ரகசியம் யாருக்கும் தெரியவில்லை. என்னைக் கூப்பிட்டு ஒரு நாள் அவர் ரகசியம் பேசக் கூடும் என்பது பயமாக இருக்கிறது. செல்வி ஏன் செத்துப் போனாள். ஏன் தூக்கிலிட்டுக்கொண்டாள். கர்ப்பத்திற்கு முன்… காரணம் இருக்கிறதா… அவளுடன் பழகிய சூப்பர்வைசர். ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டார் என்பது மட்டும் தெரியும். எல்லோருக்கும் சம்பளம் கொடுப்பது பொதுவான இடமாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் எனக்கு மட்டும், ஏன் தனி இடங்களில் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் தனியாக நடக்கும் போதும் நிற்கும் போதும், முதுகைத் தட்டுவது, கன்னம் அருகில் உதட்டைக் குவித்து, முத்தமிட பாவனை செய்வது சகஜமாகிவிட்டது சிலருக்கு. திலகவதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பவர் டேபிள் காண்ட்ராக்டர் அவருடைய பார்வையில் படும்படி அவர் சொல்கிற இடத்தில் வேலை செய்தால், பட்டுப்போல் இருக்கலாம் என்கிறார். இதில் என்ன எதுகை மோனை, நாலாவது மாடியில் இருக்கும் இன்னொரு சூப்பர்வைசர்… கேமரா பதிவில் என்னைப் பார்த்துவிட்டு சேலை விலகி உள்ளதை கேமரா காட்டி இருக்கிறது. மார்பகம் மாம்பழம்போல் இருக்கிறது. கையில் பிடிக்கலாம். உன்னைக் கட்டுகிறவன் அதிர்ஷ்டசாலி என்கிறான். 50 வயதான என் தோழிக்கு கூட இதே பாராட்டு இருக்கிறது. அவரைப் பார்த்து தொங்கும் பையாக மார்பகம் இருக்கிறது என்கிறான் ஒருவன்.. ” பலரும் பயன்படுத்தினால் இப்படியாகும். நான் பயன்படுத்தக்கூடாதா “ என்கிறான். துன்புறுத்தலால் வேலை போகும் என்ற பயம்கூட இவர்களிடம் இல்லை. வேலை வேலை வேலை…

வேலை இல்லா விட்டால் வயிறு காலியாகும். அதை யாரும் கேட்பதில்லை. கவனத்தில் கொள்வதில்லை. இதில் உள்ளூர்க்காரர்களும், வந்தேறிகளும் அடக்கம். நான் ஒடியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளி பெயர் ராணி. ராஜபோகமாய் இருப்பேன் என்று அப்படி பெயர் வைத்திருப்பார்களா? வந்தாரை வாழ வைக்கும் ஊர். விருந்தோம்பலும் மரியாதையும் என்னங்க என்று நெகிழ்வோடு அழைக்கும் ஊர். இந்த ஊரின் பெருமைகளை இவர்கள் அறியாதது அறிவின்மையே. உழைப்பு பெருமையைத் தரும் நேரத்தில் ஊரின் பெருமைகளை யார் உணர்த்த..

முந்தைய தொடர்கள்:

1.வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு – https://bit.ly/33wiGhg

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
 2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
 3. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
 4. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
 5. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
 6. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
 7. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
 8. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
 9. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
 10. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
 11. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
 12. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
 13. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
 14. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
 15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்