திக்குத் தெரியாத உலகில்
கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் தாக்குவது பற்றித் தகவல்கள் அதிகமில்லை. ஆனால் கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் , பறவைகள் சரணாலயத்தையும் தாக்கும் செய்திகள் வந்து விட்டன.
உதாரணம் வேடந்தாங்கல்..
இந்தியாவிற்கு பருவ நிலை மாற்றத்தால் பறவை களின் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் வேடந்தாங்கல் போன்ற சரணாலயத்தின் பரப்பளவைச் சுருக்கும் முடிவு இயற்கைக்கு விரோதமானது.
வேடந்தாங்கல் பறவை கள் சரணாலயத்தின் சுற்ற ளவை சுருக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவு மோசமானது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முப்பது ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. ஆண்டு தோறும் உள்நாட்டு, வெளிநாட்டுகளைச் சார்ந்த நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த சரணா லயத்தை சுற்றிப்பார்க்க வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் வருகின்றனர். இந்த சரணாலயத்தைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் சுற்றள வில் தொழிற்சாலைகள் அமைக்கவும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும், வீட்டுமனை பிரிவுகள் அமைக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் சரணாலய சுற்றுவட்ட பரப்பளவை மூன்று கிலோமீட்டராக குறைக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுத்த வருகின்றன. ஏதோ கார்ப்பரேட் வசமாகப்போகிறது அந்த மிச்சமுள்ள பகுதி .
திருப்பூரில் ஒரு பறவைகள் சரணாலயம் உள்ளது. 440 ஏக்கர் நஞ்சராயன் குளம். பறவைகளின் சரணாலயமாகவும் உள்ளது
பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டில் பிறந்த நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் ஸி வி ராமன் எழுதிய நீரே அமிழ்தம் – Elixir of life என்ற கட்டுரை இந்திய விவசாயத்திற்கு ஏரிகளின் முக்கிய பங்கு பற்றி பேசியது . அது அடிப்படையில் ஏரி, நீரின் நிறம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது என்று இயற்பியல் விளக்கத்தோடு சொன்னதன் இன்னொரு பரிமாணம் நிலப்பரப்பிற்கு ஏரிகள் அழகைத் தருகின்றன என்று குறிப்பிட்டு இருந்தார்
இந்திய விவசாயத்திற்கு ஏரிகளின் முக்கியத்துவம், குடியிருப்புகளுக்கு இடையே அமைந்த ஏரிகளின் காட்சி அழகு, ஏரி நீரில் காலை சூரியன் எழும் காட்சியும் ,மாலை சூரியன் மறையும் காட்சியும் உள்ளத்திற்கு கிளர்ச்சி தரும் அனுபவம் என்கிறார்,
தமிழ்நாட்டில் ஏரிகள் குளங்களை சரியாக பராமரிக்காத நிலையில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது .கடந்த 10ஆண்டுகளாக பருவமழை குறைவு .ஏரி குளங்களில் சேமிக்கப்படும் நீர் நீர்மட்டத்தைக் காப்பாற்றும் அவை நீர்ப்பாசனத்திற்கு பயன்படுமனால் இன்று கால் பங்கு கூட அவை சரியாக பராமரிக்கப் படாமல் வேறுவகை ஆக்கிரமிப்பும் முட்புதர்களின் வளர்ச்சி போன்றவற்றால் நீர் சேமிப்பு இல்லை. பழைய காலத்தில் இருந்த ஊருணி என்ற நீர் சேமிப்பு ஆதாரம் இன்று இல்லை. மழை அடித்து வரும் மேலடுக்கு மண் நீர் வற்றிய பிறகு விவசாயிகளுக்கு பயன்படும் ஆனால் இன்றைய நிலை வேறு .
வீட்டுக் கழிவுகள் ,சாக்கடை கழிவுகள் குளம் ஏரிகளில் கலக்கின்றன .பாசி படிகிறது இது நிலத்துள் நீர் செல்வதைத் தடுக்கிறது. நீராதாரம் பெருக்க தூர் வாருதல் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் சுமார் 50,000 ஏரி குளங்களில் ஏறத்தாழ பாதி அளவு இதேநிலைதான் .வறட்சி நீர் தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கிறது .
வறண்டிருந்த திருப்பூரின் 440 ஏக்கர் நஞ்சராயன் குளத்திற்கு இவ்வாண்டு வந்த வெளிநாட்டுப் பறவைகள் பழையதில் கால் பங்கு கூட இல்லை. வழக்கமாய் கோடையில் மங்கோலியா , ரஷ்யா, கிழக்கு அமெரிக்கா, வடக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல பறவைகள் வரும். நீ ர்ப் பறவைகள், சூரைமாரி, தகைவிலான், வாலாட்டி குருவிகள், கரிச்சான்கள், புதர் பறவைகள் என பறவைகள் பல வரும் இந்த ஆண்டு நஞ்சராயன் குளத்திற்கு வந்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்து பறவைஆர்வலர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
நகரமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது .நகரத்திற்கு வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளில் 10% மட்டுமே சமீபத்தில் வந்துள்ளன தட்டை வாயன் 2500 என்பதில் இரண்டு சதவீதம் மட்டுமே வந்துள்ளன .நீலச்சிறகு வாத்து மூவாயிரத்துக்கும் மேல் வரும் இப்போது 250 என்ற அளவில் வந்துள்ளது .இந்த நஞ்சராயன் குளத்திற்கு என்ன ஆனது இதில் தேங்கும் சலவை பட்டறை ,சாயப்பட்டறை நீரால் நோய் பரவுவதாக நகராட்சி மரங்களை உடைத்து தண்ணீரை வெளியேற்ற குளம் வறண்டு வெறும் மண்ணாகி விட்டது . தொடர்ந்து நீர் இருந்து கொண்டே இருப்பது ஒரு ரகசியக்காரணமாய் இருந்தது. சாய்ப்பட்டறைநீர் தொடர்ந்து அங்கு வரும் கார்ப்பரேட் ரகசியம் மெல்லவும் வெளிப்பட்டது.குளம் நிரம்புவது சாயத்தண்ணீரால் கூட என்பது அதிர்ச்சிதான்.
இது தமிழகத்தின் பெரிய குளங்களில் ஒன்று 520 ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.பெலிகன், ஸ்பாட்ட்ட் பில் டக், அய் பிஷ், லிட்டில் கிரிட் ட் போன்றவை சாதாரணமாக வந்து செல்லும் குளம் இது . வெளிநாட்டு பறவைகள் காமன் சாண்ட் பைபர், வுட்சேட் பைபர், லிட்டில் ரிங்கு பிளோவர் எனவும் சில அவ்வப்போது வந்து செல்லும். காட்டாறுகளால் உருவான நல்லாறு ஓடை இதில் சேருகிறது
இதனால் முன்பு 300 ஏக்கர் நிலம் பாசனத்திற்கானது. ஓர் ஆண்டில் பத்து மாதங்கள் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்த காலம் உண்டு ஆனால் இப்போது நீர் வெளியேற்றப்பட்டதால் பாளம் பாளமாக வெடித்துச் சிதறி கிடக்கிறது இந்த குளம். அதிகாலை நேரங்களில் இப்பகுதிக்குச் சென்று தூரமா இருந்து பறவைகளை ரசித்திருக்கிறேன் வெயில் வந்தால் குளத்தை ஒட்டி இருக்கும் மரங்களில் அவை அடைக்கலமாகும் .
இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் மன்னரை அணைக்கட்டு இருக்கிறது நொய்யல் ஆற்று நீரை நன்னீராக்கும் திட்டம் இருந்தது தெற்குப்பகுதி, நடுப்பகுதி மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பாசனம் பெற்ற வாய்க்கால்களும் வறண்டு கிடக்கின்றன .
இந்த குளத்தின் அருமை வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் அபூர்வ உறவு தெரியாமல் இதோ இது இப்போது கேட்பாரற்று கிடக்கிறது அரசின் அதிரடி திட்டங்களால் இதில் உயிர் வரலாம் மாலை நேரங்களில் மது அருந்தி பாட்டில்களை வீசி செல்லும் இடமாகி விட்டது இது சமூகவிரோதிகளின் தவறான செயல்களுக்கு பயன் ஆகிவிடக்கூடாது .
பறவைகளைச்சுட்டுப்பிடிக்கும் கும்பல்கள் அதிகமாகிவருவதை சில செய்திகள் சொல்லின. கொரானா காலத்தில் வருமானத்திற்கு என்று ஒரு சால்ஜாப்பு வேறு. அதில் அருகி வரும் சில பறவைகளும் இருக்கலாம்.
நியுசிலாந்தில் பெருகிவரும் பறவைகளை சுட்டுக்கொல்ல சில ஆண்டுகளுக்கு முன் அனுமதி தரப்பட்டது.
அனுமதிக்கப்பட்டவர்கள், அருகிவரும் ஆபத்தில் உள்ள பல பறவைகளையும் தவறுதலாக சுட்டுக் கொன்றுள்ளனர்,நியுசிலாந்தில் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் பறவைகளை சுட்டுக்கொல்லும் பணியாளர்கள், அருகிவரும் ஆபத்தில் உள்ள பல பறவைகளையும் தவறுதலாக சுட்டுக் கொன்றுள்ள நிலையில், பறவைகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது
உலகில் வெறும் 300 பறவைகளே எஞ்சியிருப்பாக நம்பப்படும் பறவை வகைகளும் தவறுதலாக சுடப்பட்டு அபாயமணி ஒலித்தது..
ஆக்லாந்துக்கு அருகே உள்ள மொட்டுடாப்பு என்கின்ற தீவுச் சரணாலயத்தில் அதிகளவில் காணப்படும் புக்கேக்கோ (pukeko) என்ற பறவை இனத்தை சுட்டுக்கொல்வதற்கான அனுமதி உள்ளூர் வேட்டையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால், பறக்கமுடியாத டக்காஹே (takahe)என்ற இனத்தின் 4 பறவைகளையும் அவர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்தப் பறவைகள் புக்கேக்கோ பறவைகளை ஒத்த நிறத்தில் இருந்தாலும், அளவில் அவை இரண்டு மடங்கு பெரியவை. அத்தோடு அருகிவரும் பறவையினமும் கூட.
பறந்துகொண்டிருக்கும் பறவைகளை மட்டுமே சுடவேண்டும் என்று அவர்களுககு தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் அப்போது கூறினர்.
இந்தியாவில் அது அரிதோ இல்லையோ உணவுத்தேவைக்கு என்றூ சிலர் வேட்டையாடுகின்றனர்.
நஞ்சராயன் குளம் நக்ரின் ஒதுக்குப்புறமாய் இருந்த காலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் அந்த மாதிரி வேட்டை ” விபத்துகள் “ நடந்ததாகச் சொல்கிறார்கள்
நம் நாட்டில் பறவைகள் அருகவில்லை , திரைப்படபாடலிலும்தான். ஐம்பது வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் வாழ்வில் பறவைகளுடன் ஒரு பிணைப்பிருந்தது.அது எளிமையான திரைப்பட பாடல்கள் மூலம் தெரிந்தது “தூக்கணாங் குருவிக்கூடு..த ூங்கக்கண்டார் மரத்திலே….”
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே…”
“லவ் பேட்ஸ்..லவ் பேர்ட்ஸ்…தக்க த்தின் மி தா அந்த …”
“ஆடும் மயிலே ஆட்டமெங்கே? பாடும் குயிலே பாட்டு எங்கே?
பேசும் கிளியே பேச்சு எங்கே?…”
“ஒரு கிளி மயங்குது ஒரு கிளி தயங்குது ஓ மைனா மைனா…”
“குயில் கூவி துயில் எழுப்ப கொடி எறும்பு கண் விழிக்க…”
“கொக்கரக்கொக்கரக்கோ சேவலே கொண்டிருக்கும் அன்பிலே…”
“பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா..”
“தாரா தாரா வந்தார சங்கதி டதும் சொன்னாரா..”
இன்று தூக்கனாங் குருவியும் சிட்டுக்குருவியும் இல்லாமல் போக பழைய பாடல்களில் மட்டுமே உள்ளன.
தூக்கனாங் குருவியும் சிட்டுக்குருவியும் இல்லாமல் , நஞ்சராயன் குளத்தில் வெளிநாட்டுப்பறவைகள் வந்து செல்வது அதிகம்தான்.
நஞ்சராயன் குளம் என்றுதான் அது பொதுபெயரில் வழங்கப்படுகிறது . நஞ்சராயன் பறவை சரணாலயம் என்று கூட இது வரை வழங்கப்படுவதில்லை.
நஞ்சராயன் குளம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் ஆக வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்களின் கனவு நீடித்துக் கொண்டே இருக்கிறது
ஆனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கே வெடி வைத்தாகிவிட்டது இப்போது .
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை சுருக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவு மோசமானது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றும் கொள்ளை நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது வனவிலங்குகளின் வாழ்விட அழிப்பு என்பதால் அவ்வகை சரணாலயங்களைப் பாதுகாப்பது குறித்து அக்கறை கொள்ள வேண்டும். அவைகளின் சரணாலயங்களைச்சுருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய விபரங்கள் என் முந்தியக் கட்டுரையில் நீண்ட பட்டியலாக உள்ளது.
சூழலியல் முடுக்கு (ecological niche) என்பது ஒரு குறிப்பிட்ட சிற்றினம் வாழத்தகவமைத்துக் கொண்ட சூழலின் ஒரு பகுதி ஆகும். சூழலியல் சமன்பாட்டைக்கருத்தில் கொள்ளாமல் “ பறவைகள் முடுக்கு “என்று அவைகளின் இருப்பிடங்கள் முடுக்கு ( சந்து ) , முடக்கம் என ஆக்கப்படும் முயற்சிகளில் இப்போதைய வேடந்தாங்கல் கார்ப்ப்ரேட் வைரஸ் பிரச்சினையும் ஒன்று.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
- கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
- கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
- ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
- 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
- தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
- எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
- பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
- புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
- பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
- குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
- வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
- டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
- பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
- வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்